வேதங்கள்
முன்னுரை


முன்னுரை

கடைசி நாட்களில் பூமியில் தேவ ராஜ்யத்தை ஸ்தாபிக்கவும் ஒழுங்குபடுத்தவும் கொடுக்கப்பட்ட தெய்வீக வெளிப்படுத்தல்கள், மற்றும் உணர்த்தப்பட்ட பிரகடனங்கள் அடங்கிய ஒரு தொகுப்பே கோட்பாடும் உடன்படிக்கைகளும். அதிலுள்ள அநேக பாகங்கள் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்களை நோக்கியே இருந்தாலும் கூட, செய்திகளும், எச்சரிக்கைகளும், உற்சாகப்படுத்தல்களும் அனைத்து மனுக்குலத்தின் பயனுக்காகவும், எங்குமுள்ள அனைத்து ஜனங்களின் உலகப்பிரகார நல்வாழ்விற்காகவும், அவர்களுடைய நித்திய இரட்சிப்புக்காகவும், அவர்களுடன் பேசுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்க ஒரு அழைப்பும் அதில் அடங்கியிருக்கிறது.

இந்த தொகுப்பிலுள்ள அநேக வெளிப்படுத்தல்கள் முதல் தீர்க்கதரிசியும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவருமான ஜோசப் ஸ்மித் இளையவரால் பெறப்பட்டன. மற்றவை, தலைமையில் அவருக்குப் பின்வந்தவர்களின் மூலமாக கொடுக்கப்பட்டன (கோ.உ 135, 136, 138 மற்றும் அதிகாரப்பூர்வ பிரகடனங்கள் 1 மற்றும் 2க்கான தலைப்புகளைப் பார்க்கவும்).

பரிசுத்த வேதாகமம், மார்மன் புஸ்தகம் மற்றும் விலையேறப்பெற்ற முத்துடன் இணைந்து, கோட்பாடும் உடன்படிக்கைகளும் புஸ்தகம் சபையின் தரமான புஸ்தகங்களில் ஒன்றாயிருக்கிறது. ஆயினும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் தனித்துவமானதாயிருக்கிறது, ஏனெனில் அது ஒரு பூர்வகால ஆவணத்தின் மொழிபெயர்ப்பில்லை, ஆனால் அது அவருடைய பரிசுத்த பணிக்கான மறுஸ்தாபிதத்திற்காகவும், இந்த காலங்களில் தேவனின் ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காகவும் தற்காலத்தில் தோன்றியதாயும், அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட தீர்க்கதரிசிகளின் மூலமாக தேவனால் கொடுக்கப்பட்டதாயுமிருக்கிறது. வெளிப்படுத்தல்களில், காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்காலத்தில் புதிதாயும், இங்கே ஆரம்பிக்கப்பட்ட பணி, நிறைவேறுதலிலும், உலகத்தோற்றத்திலிருந்து அனைத்து பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுடன் இணைந்ததிலும் அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாயிருப்பதிலும், மிருதுவான, ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உறுதியான குரலை ஒருவர் கேட்கிறார்.

டிசம்பர் 23, 1805ல் வெர்மான்ட், வின்ட்ஸர் கவுன்டியின் ஷாரோனில் ஜோசப் ஸ்மித் இளையவர் பிறந்தார். அவருடைய இளமைக்காலத்தில் தற்போதைய மேற்கு நியூயார்க்கின் மான்செஸ்டருக்கு அவருடைய குடும்பத்துடன் அவர் குடிபெயர்ந்தார். 1820ன் வசந்த காலத்தில் அங்கே அவர் வாழ்ந்துகொண்டிருந்தபோதுதான், அவருக்கு பதினான்கு வயதாயிருந்தபோது, நித்திய பிதாவாகிய தேவனாலும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினாலும் நேரடியாக அவர் சந்திக்கப்பட்டபோது, அவருக்கு முதல் தரிசனத்தின் அனுபவம் ஏற்பட்டது. புதிய ஏற்பாட்டு காலங்களில் ஸ்தாபிக்கப்பட்டதும், சுவிசேஷத்தின் முழுமையை நிர்வகித்ததுமான இயேசு கிறிஸ்துவின் மெய்யான சபை, பூமியில் இப்போதில்லை என இந்த தரிசனத்தில் அவருக்குக் கூறப்பட்டது. அநேக தூதர்களால் அவருக்குப் போதிக்கப்பட்ட பிற தெய்வீக வெளிப்படுத்தல்கள் பின்தொடர்ந்தன. பூமியில் அவர் செய்யவேண்டிய ஒரு விசேஷ வேலையை தேவன் வைத்திருக்கிறாரென்றும், அவர் மூலமாக இயேசு கிறிஸ்துவின் சபை பூமியில் மறுஸ்தாபிதம் செய்யப்படுமென்றும் அவருக்குக் காட்டப்பட்டது.

காலப்போக்கில் மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்க்கவும் வெளியிடவும் தெய்வீக உதவியால் ஜோசப் ஸ்மித்துக்கு சாத்தியமாக்கப்பட்டது. இதற்கிடைப்பட்ட நேரத்தில் மே 1829ல் யோவான் ஸ்நானனால், அவரும் ஆலிவர் கௌட்ரியும் ஆரோனிய ஆசாரியத்துவத்திற்கு நியமிக்கப்பட்டார்கள் (கோ.உ 13 பார்க்கவும்). அப்போதிலிருந்து விரைவிலேயே பூர்வகாலத்து அப்போஸ்தலர்களான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானால் அவர்கள் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்துக்கும் நியமிக்கப்பட்டார்கள் (கோ.உ 27:12 பார்க்கவும்). பிற நியமனங்களும் பின்தொடர்ந்ததில் மோசே, எலியா, எலியாஸ் மற்றும் அநேக பூர்வகால தீர்க்கதரிசிகளால் ஆசாரியத்துவ திறவுகோல்கள் அருளப்பட்டன (கோ.உ 110; 128:18, 21 பார்க்கவும்) உண்மையில் இந்த நியமனங்கள் பூமியில் மனுஷனுக்கு தெய்வீக அதிகாரம் அருளப்பட்டதன் மறுஸ்தாபிதம். ஏப்ரல் 6, 1830ல் பரலோக வழிநடத்துதலின் கீழ் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் சபையை ஸ்தாபித்தார், இப்படியாக சுவிசேஷத்தைப் போதிக்கவும், இரட்சிப்பின் நியமங்களை நிர்வகிக்கவும் அதிகாரத்துடன், மனுஷருக்குள் ஒரு ஸ்தாபனமாக இயேசு கிறிஸ்துவின் மெய்யான சபை மறுபடியும் செயல்பாட்டில் உள்ளது (கோ. உ 20, மற்றும் விலையேறப்பெற்ற முத்து, ஜோசப் ஸ்மித்—வரலாறு 1 பார்க்கவும்).

தேவையான் நேரங்களில் ஜெபத்திற்கு பதிலாக இந்த பரிசுத்த வெளிப்படுத்தல்கள் பெறப்பட்டு, உண்மையான ஜனங்களை ஈடுபடுத்தி நிஜ வாழ்க்கையின் சந்தர்ப்பங்களாக அவை வந்தன. தீர்க்கதரிசியும் அவருக்குத் துணையாக இருந்தவர்களும் தெய்வீக வழிநடத்துதலை நாடினர், அதை அவர்கள் பெற்றதாக இந்த வெளிப்படுத்தல்கள் சான்றளிக்கின்றன. மறுஸ்தாபிதத்தையும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் வெளிப்படுவதையும், காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்காலத்தில் வெளிப்படுத்தல் அறிமுகமாவதையும், இந்த வெளிப்படுத்தல்களில் ஒருவர் பார்க்கிறார். நியூயார்க் மற்றும் பென்சில்வேனியாவிலிருந்து ஒஹாயோவுக்கும், மிசௌரிக்கும், இலினாய்க்கும், இறுதியாக மேற்கு அமெரிக்காவின் கிரேட் பேசினுக்கும், சபையின் மேற்கு நோக்கிய நகருதலும், தற்காலங்களில் பூமியில் சீயோனைக் கட்டுவதற்கான முயற்சியில் பரிசுத்தவான்களின் பலத்த போராட்டங்களும்கூட இந்த வெளிப்படுத்தல்களில் காட்டப்படுகின்றன.

மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் வெளியீடுபற்றிய காரியங்களுடன் அநேக ஆரம்ப பாகங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன (பாகங்கள் 3, 5, 10, 17 மற்றும் 19 பார்க்கவும்). வேதாகமத்தின் உணர்த்துதலான மொழிபெயர்ப்பைச் செய்வதில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் பணியை சில பின்வந்த பாகங்கள் பிரதிபலித்தன. அந்த நேரத்தில் அநேக மகத்தான கோட்பாடுகளின் பாகங்கள் பெறப்பட்டன (உதாரணமாக, வேதாகம மொழிபெயர்ப்புக்கு ஒவ்வொன்றும் சிறிது நேரடி தொடர்புடைய பாகங்கள் 37, 45, 73, 76, 77, 86, 91 மற்றும் 132 பார்க்கவும்).

தேவத்துவத்தின் தன்மை, மனுஷனின் தோற்றம், சாத்தான் நிஜமாய் இருப்பது, அநித்தியத்தின் நோக்கம், கீழ்ப்படிதலின் அவசியம், மனந்திரும்புதலின் அவசியம், பரிசுத்த ஆவியின் செயல்பாடுகள், இரட்சிப்புக்கு சம்பந்தமான நியமங்கள் மற்றும் நிறைவேற்றுதல்கள், பூமியின் தேவநிர்ணயம், உயிர்த்தெழுதல் மற்றும் நியாயத்தீர்ப்புக்குப் பின் மனுஷனின் வருங்கால நிலைமைகள், திருமண உறவின் நித்தியம் மற்றும் குடும்பத்தின் நித்திய தன்மை போன்ற அடிப்படை காரியங்களைப்பற்றி விளக்கங்களுடன் அந்த வெளிப்படுத்தல்களில் சுவிசேஷத்தின் கோட்பாடுகள் அமைக்கப்பட்டன. அதைப்போன்று ஆயர்கள், பிரதான தலைமை, பன்னிருவர் ஆலோசனைக்குழு மற்றும் எழுபதின்மர் குழுமம் அழைப்புகளுடன், பிற தலைமை தாங்கும் அலுவல்கள் மற்றும் குழுமங்கள் அமைக்கப்படுவதுடன் சபை நிர்வாக அமைப்பின் சீரான வெளிப்படுத்தல்கள் காட்டப்பட்டன. இறுதியாக, அவருடைய தெய்வீகம், அவருடைய மகத்துவம், அவருடைய பரிபூரணம், அவருடைய அன்பு, அவருடைய மீட்பின் வல்லமை போன்றவை குறித்த, இயேசு கிறிஸ்துவைப்பற்றி கொடுக்கப்பட்ட சாட்சி மனுக்குல குடும்பத்திற்கும், “முழு பூமியின் ஆஸ்தியான சபைக்கு முக்கியத்துவமாகவும்” இந்த புஸ்தகம் மிகப்பெரிய மதிப்பாக ஆக்குகிறது (கோ.உ 70 தலைப்பைப் பார்க்கவும்)

முதலாவதாக வெளிப்படுத்தல்கள் ஜோசப் ஸ்மித்தின் எழுத்தர்களால் பதிவு செய்யப்பட்டன, சபை அங்கத்தினர்கள் உற்சாகமாக ஒருவருக்கொருவர் கையால் எழுதப்பட்ட பிரதிகளை பகிர்ந்துகொண்டனர். ஒரு மிக நிரந்தரமான பதிப்பை உருவாக்க இந்த வெளிப்படுத்தல்களை எழுத்தர்கள் சீக்கிரத்திலே கையால் எழுதப்பட்ட பதிவுப் புஸ்தகங்களாக பிரதி எடுத்தார்கள். வெளிப்படுத்தல்களை அச்சடிப்பதற்காக ஆயத்தப்படுத்துவதில் இதையே சபைத் தலைவர்கள் பயன்படுத்தினர். ஜோசப்பும் ஆரம்பகால பரிசுத்தவான்களும் சபையார் செய்ததைப்போல வெளிப்படுத்தல்களை, கூடுதலான வெளிப்படுத்தல்களுடன் சில மாற்றங்கள் செய்யக்கூடிய உயிரோட்டமுள்ள, வலிமை மிக்கவை எனக் கண்டார்கள். வெளிப்படுத்தல்களை வெளியிடுவதற்காக பிரதி எடுப்பதிலும், அவைகளை ஆயத்தப்படுத்துவதிலும் வேண்டுமென்றே செய்யப்படாத தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கண்டனர். இப்படியாக பரிசுத்த ஆவியால் அவர் கண்டுபிடிக்கக் கூடிய தவறுகளை அல்லது தப்பிதங்களை திருத்த 1831ல் சபை மாநாடு ஜோசப் ஸ்மித்தைக் கேட்டுக்கொண்டது.

வெளிப்படுத்தல்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு திருத்தப்பட்ட பின்பு, தீர்க்கதரிசியின் அநேக ஆரம்பகால வெளிப்படுத்தல்களடங்கிய A Book of Commandments for the Government of the Church of Christ (கிறிஸ்து சபையின் நிர்வாகத்திற்கான கட்டளைகளின் புஸ்தகம்) என்ற புஸ்தகத்தை மிசௌரி சபை அங்கத்தினர்கள் அச்சடிக்க ஆரம்பித்தார்கள். ஆயினும் ஜூலை 20, 1833ல் ஜாக்சன் கவுன்டியில் பரிசுத்தவான்களின் அச்சடிப்பு அலுவலகத்தை ஒரு கும்பல் அழித்தபோது, வெளிப்படுத்தல்களை வெளியிடும் இந்த முதல் முயற்சி முடிவடைந்தது.

மிசௌரி அச்சடிப்பு அலுவலகம் அழிக்கப்பட்டதைப்பற்றி கேட்டபோது, ஜோசப் ஸ்மித்தும் சபையின் பிற தலைவர்களும், கர்த்லாந்து, ஒஹாயோவில் வெளிப்படுத்தல்களை வெளியிட, ஆயத்தத்தை ஆரம்பித்தார்கள். தவறுகளை மீண்டும் திருத்தவும், வார்த்தைகளை தெளிவுபடுத்தவும், சபை கோட்பாடு மற்றும் அமைப்பில் முன்னேற்றங்களை அடையாளம் காணவும், சில வெளிப்படுத்தல்களின் பக்கங்களின் தொகுப்பை 1835 வெளியீட்டிற்காக ஜோசப் ஸ்மித் அவைகளை மேற்பார்வையிட்டார். அது Doctrine and Covenants of the Church of the Latter Day Saints. (பிற்காலப் பரிசுத்தவான்களின் சபையின் கோட்பாடும் உடன்படிக்கைகளும்) கோட்பாடும் உடன்படிக்கைகளின் மற்றொரு பதிப்புக்கு ஜோசப் ஸ்மித் அதிகாரமளித்தார். அது 1844ல் தீர்க்கதரிசியின் இரத்த சாட்சி மரணத்துக்குப்பிறகு சில மாதங்களில் பிரசுரிக்கப்பட்டது.

ஆரம்பகால பிற்காலப் பரிசுத்தவான்கள், வெளிப்படுத்தல்களை மதித்து தேவனிடமிருந்து வருகிற செய்திகளாகப் பார்த்தார்கள். 1831ன் பின்பகுதியில், ஒரு சந்தர்ப்பத்தில் சபையின் பல மூப்பர்கள் வெளிப்படுத்தல்களைப்பற்றிய சத்தியத்தை அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு கர்த்தர் சாட்சியம் கொடுத்தார் என பரிசுத்த சாட்சியம் கொடுத்தார்கள். இந்த சாட்சியம் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1835 பதிப்பில் பன்னிரு அப்போஸ்தலரின் எழுதப்பட்ட சாட்சியமாக வெளியிடப்பட்டது:

கோட்பாடும் உடன்படிக்கைகளும்
புஸ்தகதைப்பற்றிய சத்தியத்திற்கு
பன்னிரு அப்போஸ்தலர்களின் சாட்சி

இந்த நோக்கத்திற்காக சபையின் குரலால் நியமிக்கப்பட்ட ஜோசப் ஸ்மித் இளையவர் மூலமாக தம்முடைய சபைக்கு அவர் கொடுத்த கட்டளைகளான கர்த்தருடைய கட்டளைகளின் புஸ்தகதைப்பற்றிய சாட்சிகளின் சாட்சியம்.

ஆகவே, இந்த கட்டளைகள் தேவனின் உணர்த்துதலால் கொடுக்கப்பட்டதென்றும், சகல மனுஷருக்கும் பயனுள்ளதென்றும், நிச்சயமாக மெய்யானதென்றும் எங்கள் மேல் ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவியின் மூலமாக, எங்கள் ஆத்துமாக்களுக்கு கர்த்தர் சாட்சியளித்தார் என்று, மனுக்குலத்தின் உலகம் முழுவதற்கும், பூமியின் மேலுள்ள சகல சிருஷ்டிக்கும் சாட்சி பகர நாங்கள் சித்தமுள்ளவர்களாக உணருகிறோம்.

அதனால் மனுபுத்திரர் எப்பொழுதும் பயனடைய கர்த்தரிடத்தில் ஜெபித்து, அதில் நாங்கள் மிகவும் களிகூர்ந்து உலகத்திற்கு சாட்சி பகருகிற இந்த சிலாக்கியத்திற்கு நாங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது, பிதாவாகிய தேவன் மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மூலமாகவே என, கர்த்தர் எங்களுக்கு துணையாயிருப்பதால் இந்த சாட்சியை உலகத்திற்கு நாங்கள் கொடுக்கிறோம்;

பன்னிருவரின் பெயர்கள்

  • தாமஸ் பி. மார்ஷ்

  • டேவிட் டபுள்யு. பாட்டன்

  • பிரிகாம் யங்

  • ஹீபர் சி. கிம்பல்

  • ஆர்சன் ஹைட்

  • வில்லியம் இ. மெக்லெலின்

  • பார்லி பி. பிராட்

  • லூக் எஸ். ஜான்சன்

  • வில்லியம் ஸ்மித்

  • ஆர்சன் பிராட்

  • ஜான் எப். பாய்ன்டன்

  • லைமன் இ. ஜான்சன்

கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் அடுத்தடுத்த பதிப்புகளில் பெறப்பட்டு, சபையின் அஙகீகரிக்கப்பட்ட கூட்டங்களால் அல்லது மாநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி சபையின் கூடுதலான வெளிப்படுத்தல்கள் அல்லது பதிவுகளின் பிற காரியங்கள் சேர்க்கப்பட்டன. பிரிகாம் யங்கின் வழிநடத்துதலின் கீழ், மூப்பர் ஆர்சன் பிராட்டால் ஆயத்தப்படுத்தப்பட்ட 1876 பதிப்பு வெளிப்படுத்தல்கள் காலக் கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டு வரலாற்று முன்னுரையுடன், புதிய தலைப்புகள் கொடுக்கப்பட்டன.

1835 பதிப்பில் ஆரம்பித்து ஏழு மத இயல் பாடங்களின் வரிசையும் சேர்க்கப்பட்டன; அவைகள் Lectures on Faith (விசுவாசதைப்பற்றிய விரிவுரைகள்) என தலைப்பிடப்பட்டன. 1834லிருந்து 1835வரை ஒஹாயோ, கர்த்லாந்தில் தீர்க்கதரிசிகளின் குழுமத்தின் பயன்பாட்டிற்காக இவைகள் ஆயத்தப்படுத்தப்பட்டன. கோட்பாடுக்கும் அறிவுரைக்கும் இவை பயனுள்ளதாயிருந்தாலும்கூட 1921லிருந்து கோட்பாடும் உடன்படிக்கைகளுமிலிருந்து இந்த விரிவுரைகள் நீக்கப்பட்டன, ஏனெனில் முழு சபைக்கும் வெளிப்படுத்தல்களாக இவைகள் கொடுக்கப்படவில்லை அல்லது சமர்ப்பிக்கப்படவில்லை.

கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் 1981 ஆங்கில பதிப்பில் முதல் முறையாக மூன்று ஆவணங்கள் சேர்க்கப்பட்டன. மரித்தவர்களுக்காக இரட்சிப்பின் அடிப்படைகள் அமைக்கப்பட்டு, இனம் அல்லது நிற வேற்றுமையின்றி தகுதியுள்ள சபையின் அனைத்து ஆண்களும் ஆசாரியத்துவத்திற்கு நியமிக்கப்படலாம் என அறிவிப்பதில் இவைகள் பாகங்கள் 137, 138 மற்றும் அதிகாரப்பூர்வ பிரகடனம் 2 ஆகும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் ஒவ்வொரு புதிய பதிப்பும் பழைய தவறுகள் திருத்தப்பட்டும், குறிப்பாக பாகங்களின் தலைப்புகளின் வரலாற்றுப் பகுதிகளில் புதிய தகவல் சேர்க்கப்பட்டும் உள்ளன. தற்போதைய பதிப்பில் தேதிகளும், இடத்தின் பெயர்களும் கூடுதலாக நேர்த்தியாக்கப்பட்டு பிற திருத்தங்களும் செய்யப்பட்டிருக்கிறது. மிகத் துல்லிய வரலாற்று தகவலுடன் உறுதிப்படுத்தப்பட்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. வெளிப்படுத்தல்கள் பெறப்பட்ட முக்கிய பூகோள இடங்களைக் காட்டுகிற மறுபரிசீலனை செய்யப்பட்ட வரைபடங்களையும் சேர்த்து, மேலும் சபை வரலாற்றின் விருத்தி செய்யப்பட்ட புகைப்படங்கள், வேதக் குறிப்புகள், பாகத் தலைப்புகள் மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் கொடுக்கப்பட்ட கர்த்தரின் செய்தியை வாசகர்கள் புரிந்துகொள்ள உதவவும் களிகூரவும் வடிவமைக்கப்பட்ட எல்லாமுமே சம்பந்தப்பட்டவற்றின் தொகுப்புகளைச் சேர்த்து இது, மிக சமீபத்திய பதிப்பின் பிற விசேஷித்த அங்கங்கள். Manuscript History of the Church (சபையின் கையெழுத்து வரலாற்றிலிருந்தும்), History of the Church (வெளியிடப்பட்ட சபை வரலாற்றிலிருந்தும்) (மொத்தமாக ஜோசப் ஸ்மித் வரலாறு என தலைப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது) Joseph Smith Papers (ஜோசப் ஸ்மித் எழுத்துக்களிலிருந்தும்) பாகத் தலைப்புகளுக்காக தகவல் எடுக்கப்பட்டிருக்கிறது.