வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 37


பாகம் 37

டிசம்பர் 1830ல் நியூயார்க்கின் பயெட்டிக்கருகில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கும் சிட்னி ரிக்டனுக்கும் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த ஊழியக்காலத்தில் ஒரு கூடுகையைக் குறித்து முதல் கட்டளை இங்கே கொடுக்கப்பட்டது.

1–4, ஒஹாயோவில் கூடுமாறு பரிசுத்தவான்கள் அழைக்கப்பட்டார்கள்.

1 இதோ, ஒஹாயோவுக்கு நீங்கள் போகும்வரை இனி நீங்கள் மொழிபெயர்க்க வேண்டியது எனக்கு அவசியமில்லை, மேலும் இது சத்துருவினித்தம் உங்களுக்காகவே என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

2 அந்தப் பகுதிகளில் என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் வரைக்கும், சபை காணப்படுகிற இடமெல்லாம், மிகக் குறிப்பாக கோல்ஸ்வில்லில் அதைப் பெலப்படுத்தும் வரைக்கும் நீங்கள் போகக்கூடாதென மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் அவர்கள் மிகுந்த விசுவாசத்தில் என்னை நோக்கி ஜெபிக்கிறார்கள்.

3 என்னுடைய ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரி அவர்களிடத்திற்கு திரும்பும் வரைக்கும் அவர்கள் ஒஹாயோவில் கூடவேண்டுமென்பது எனக்கு அவசியமாயிருக்கிறதென மீண்டும் ஒரு கட்டளையை சபைக்கு நான் கொடுக்கிறேன்.

4 இதோ, இதிலே ஞானம் விளங்கும், நான் வரும்வரை ஒவ்வொரு மனுஷனும் தானே தெரிந்துகொள்வானாக. அது அப்படியே ஆகக்கடவது. ஆமென்.