வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 70


பாகம் 70

நவம்பர் 12, 1831ல் ஒஹாயோவின் ஹைரமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். நவம்பர் 1 லிருந்து 12 உள்ளிட்ட தேதி வரை நான்கு விசேஷித்த மாநாடுகள் நடைபெற்றன என தீர்க்கதரிசியின் வரலாறு குறிப்பிடுகிறது. இந்தக் கூட்டங்களின் இறுதியில், Book of Commandments (கட்டளைகளின் புஸ்தகமாகவும்) பின்னர் கோட்பாடும் உடன்படிக்கைகளும் என அழைக்கப்பட்ட வெளிப்படுத்தல்களின் பெரிய முக்கியத்துவம் கருத்தில் கொள்ளப்பட்டது. பூமி முழுவதின் வளங்களான சபைக்கு தகுதியாக வெளிப்படுதல்களிருந்தன என மாநாடு வாக்களித்த பின்னர் இந்த வெளிப்படுத்தல் கொடுக்கப்பட்டது. “நமது இரட்சகரின் ராஜ்யத்தின் இரகசியங்களின் திறவுகோல்கள் மீண்டும் மனுஷனுக்கு பொறுப்பளிக்கப்பட்டதென்பதைக் காட்டி, இந்தக் கடைசி நாட்களில் வெளிப்படுத்தல்கள் சபையின் அஸ்திவாரமாயிருக்கிறதென்றும் உலகத்திற்கு பலனாயிருக்கிறதென்றும்” ஜோசப் ஸ்மித்தின் வரலாறு அதைக் குறிப்பிடுகிறது.

1–5, வெளிப்படுத்தல்களை வெளியிட உக்கிராணக்காரர்கள் நியமிக்கப்பட்டார்கள்; 6–13, ஆவிக்குரிய காரியங்களில் பிரயாசப்படுபவர்கள் அவர்களின் பலனுக்கு தகுதியுடையவர்கள்; 14–18, உலகப்பிரகாரமான காரியங்களில் பரிசுத்தவான்கள் சமமாயிருக்கவேண்டும்.

1 இதோ, சீயோனின் குடிகளே கேளுங்கள், தூரத்திலிருக்கிற என்னுடைய சபையின் சகல ஜனங்களே, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனுக்கும், என்னுடைய ஊழியக்காரனாகிய மார்டின் ஹாரிஸுக்கும், என்னுடைய ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரிக்கும், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜான் விட்மருக்கும், என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டனுக்கும், என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் டபுள்யு. பெல்ப்ஸுக்கும் கட்டளை வாயிலாக நான் கொடுத்த கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

2 ஏனெனில் நான் அவர்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்; ஆகவே, கேளுங்கள், கேளுங்கள், ஏனெனில் இப்படியாக கர்த்தர் அவர்களுக்குச் சொல்லுகிறார்,

3 கர்த்தராகிய நான், அவர்களை நியமித்தேன், நான் அவர்களுக்குக் கொடுத்த, இப்போதிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்போகிற வெளிப்படுத்தல்களுக்கும் கட்டளைகளுக்கும் உக்கிராணக்காரர்களாயிருக்க அவர்களை நியமனம் செய்தேன்;

4 நியாயத்தீர்ப்பின் நாளில் இந்த ஒரு உக்கிராணக்கணக்கை அவர்களிடமிருந்து நான் எதிர்பார்ப்பேன்.

5 ஆகவே, அவற்றையும், அவை குறித்த அக்கறைகளையும், ஆம், அவற்றின் பயன்களையும் மேலாண்மை செய்யவும், தேவனின் சபையில் அவர்களை நான் நியமித்தேன், மற்றும் இது அவர்களுடைய விவகாரம் ஆகும்.

6 ஆகவே, சபைக்கோ அல்லது உலகத்தாருக்கோ இந்தக் காரியங்களை அவர்கள் கொடுக்கக்கூடாதென்ற ஒரு கட்டளையை அவர்களுக்கு நான் கொடுத்திருக்கிறேன்;

7 ஆயினும், அவர்களின் அவசியங்களுக்கும் தேவைகளுக்கும் அதிகமாக அவர்கள் எவ்வளவு பெறுகிறார்களோ, அது என்னுடைய பண்டசாலைக்குக் கொடுக்கப்படவேண்டும்;

8 ராஜ்யத்தின் சட்டங்களின்படி அவர்கள் சுதந்திரவாளிகளாகிற அளவில் சீயோனின் குடிகளுக்கும், அவர்களுடைய தலைமுறைகளுக்கும் பலன்கள் கொடுக்கப்படும்.

9 இதோ, கர்த்தராகிய நான் நியமித்த அல்லது இப்போதிலிருந்து எந்த மனுஷனை நியமித்தாலும் அவனுடைய உக்கிராணத்துவத்தில் ஒவ்வொரு மனுஷனிடமிருந்தும், இதைத்தான் கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

10 இதோ, ஜீவிக்கிற தேவனின் சபைக்குச் சொந்தமான எவனும்;

11 ஆம், ஆயரோ, கர்த்தரின் பண்டசாலையைக் காத்துக் கொள்கிறவனோ, உலகப்பிரகாரமான காரியங்களுக்கு உக்கிராணக்காரனாக நியமிக்கப்பட்டவனோ, இந்த சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுவதில்லை.

12 உலகப்பிரகாரமான காரியங்களை நிர்வகிக்க ஒரு உக்கிராணத்துவத்திற்கு நியமிக்கப்பட்டவர்களைப்போலவே ஆவிக்குரிய காரியங்களை நிர்வகிக்க நியமிக்கப்பட்டவனும், அவனது கூலிக்கு தகுதியாயிருக்கிறான்,

13 ஆம், ஆவியினால் வெளிப்படுத்தப்பட்டவைகளின் மூலமாக அதிக தாராளமாக, அவர்களுக்கு அந்த தாராளம் பல மடங்காக்கப்படுகிறது.

14 ஆயினும், உங்களுடைய உலகப்பிரகாரமான காரியங்களில் நீங்கள் சமமாயிருப்பீர்கள், இது விசனமாயல்ல, இல்லையெனில் ஆவியின் தாராளமான வெளிப்படுத்தல்கள் நிறுத்தி வைக்கப்படும்.

15 இப்பொழுது, அவர்களுடைய தலைகள்மேல் என்னுடைய ஆசீர்வாதங்கள் வெளிப்படுவதற்காக, அவர்களுடைய சிரத்தைக்கும் பாதுகாப்பிற்கும் பலனுக்குமாக அவர்கள் நிலைத்திருக்கும்போது என்னுடைய ஊழியக்காரர்களுக்கு நான் இந்த கட்டளையைக் கொடுக்கிறேன்;

16 ஆகாரத்திற்காகவும், வஸ்திரத்திற்காகவும்; சுதந்தரத்திற்காகவும்; வீடுகளுக்காகவும் நிலங்களுக்காகவும், எந்த சூழ்நிலையிலிருந்தாலும் கர்த்தராகிய நான் அவர்களை எங்கு அனுப்பினாலும் அவர்களை கர்த்தராகிய நான் தங்கவைப்பேன்.

17 ஏனெனில், அவர்கள் அநேக காரியங்களில் உண்மையுள்ளவர்களாய் இருந்தார்கள், அவர்கள் பாவஞ்செய்யாதிருந்த அளவில் நன்றாய் இருந்திருக்கிறார்கள்.

18 இதோ, கர்த்தராகிய நான், இரக்கமுள்ளவராயிருந்து அவர்களை ஆசீர்வதிப்பேன், இந்தக் காரியங்களின் சந்தோஷத்திற்குள் அவர்கள் பிரவேசிப்பார்கள், அப்படியே ஆகக்கடவது. ஆமென்.