வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 106


பாகம் 106

நவம்பர் 25, 1834ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். ஆலிவர் கௌட்ரியின் மூத்த சகோதரரான வாரன் எ. கௌட்ரிக்கு இந்த வெளிப்படுத்தல் கொடுக்கப்பட்டது.

1–3, ஒரு உள்ளூர் தலைமை அதிகாரியாக வாரன் எ. கௌட்ரி அழைக்கப்பட்டார்; 4–5, ஒளியின் பிள்ளைகளை திருடன் போல இரண்டாவது வருகை முந்தாது; 6–8, சபையில் உண்மையான சேவையை, மகத்தான ஆசீர்வாதங்கள் தொடரும்.

1 சுதந்தரத்தின் தேசத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் என்னுடைய சபைக்கு ஒரு தலைமை தாங்கும் பிரதான ஆசாரியனாக என்னுடைய ஊழியக்காரனாகிய வாரன் எ. கௌட்ரி பணிக்கப்பட்டு நியமனம் செய்யப்படவேண்டுமென்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது;

2 என்னுடைய நித்திய சுவிசேஷத்தை பிரசங்கிக்கவேண்டும், அவனுடைய குரலை உயர்த்தி ஜனங்களை எச்சரிக்கவேண்டும், அவனுடைய சொந்த இடத்தில் மட்டுமல்ல, பக்கத்து மாகாணங்களிலும்கூட;

3 இப்பொழுது நான் அவனுக்குக் கொடுக்கிற இந்த உயர்ந்த மற்றும் பரிசுத்த அழைப்பை, பரலோகத்தின் ராஜ்யத்தையும் அதன் நீதியையும் கருத்தாய் நாடுவதில் அவனுடைய முழுநேரத்தையும் அர்ப்பணிப்பானாக, அவசியமான சகல காரியங்களும் அதனுடன் கூடக் கொடுக்கப்படும்; ஏனெனில் வேலையாள் அவனது கூலிக்கு பாத்திரனாயிருக்கிறான்.

4 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது, இரவிலே திருடன் வருகிறவிதமாக அது உலகத்தை ஆட்கொள்ளும்,

5 ஆகவே, ஒளியின் பிள்ளைகளைப் போல இருக்கும்படிக்கு உங்களுடைய அரைக்கச்சையைக் கட்டிக் கொள்ளுங்கள், ஒரு திருடனைப்போல அந்த நாள் உங்களை முந்தாது.

6 மீண்டும், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழிக்காரனாகிய வாரன் என்னுடைய செங்கோலுக்கு தலைவணங்கி மனுஷர்களின் தந்திரங்களிலிருந்து தன்னை பிரித்துக்கொண்டபோது பரலோகத்தில் சந்தோஷமுண்டாயிருந்தது;

7 ஆகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய வாரன் பாக்கியவான், ஏனெனில் அவனிடத்தில் நான் இரக்கமாயிருப்பேன், அவனுடைய இருதயத்தில் மாயை இருந்தாலும், எனக்கு முன்பாக அவன் தன்னைத் தாழ்த்துகிற அளவில் நான் அவனை மேலாக உயர்த்துவேன்.

8 அவன் நிற்கும்படியாக அவனுக்கு நான் கிருபையையும் நிச்சயத்தையும் கொடுப்பேன்; ஒரு உண்மையுள்ள சாட்சியாகவும் சபைக்கு ஒளியாகவும் அவன் தொடர்ந்திருந்தால் என்னுடைய பிதாவின் வாசஸ்தலங்களில் அவனுக்காக ஒரு கிரீடத்தை நான் ஆயத்தப்படுத்தியிருக்கிறேன். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.