வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 73


பாகம் 73

ஜனுவரி 10, 1832ல் ஒஹாயோவின் ஹைரமில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கும் சிட்னி ரிக்டனுக்கும் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். முந்தய டிசம்பரின் ஆரம்ப பகுதியிலிருந்து தீர்க்கதரிசியும், சிட்னி ரிக்டனும் பிரசங்கித்தலில் ஈடுபட்டிருந்தனர், இதனால் சபைக்கு எதிராக எழுந்த அனுகூலமில்லாத உணர்வுகளைக் குறைப்பதில் அதிகம் சாதிக்கப்பட்டது (பாகம் 71 தலைப்பைப் பார்க்கவும்).

1–2, மூப்பர்கள் தொடர்ந்து பிரசங்கிக்கவேண்டும்; 3–6, ஜோசப் ஸ்மித்தும், சிட்னி ரிக்டனும் வேதாகமத்தை, அது நிறைவு பெறும்வரை தொடர்ந்து மொழிபெயர்க்கவேண்டும்.

1 ஏனெனில், மெய்யாகவே இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், மாநாடுவரை சுற்றிலுமுள்ள பகுதிகளில் அவர்கள் சுவிசேஷத்தை தொடர்ந்து பிரசங்கித்துக்கொண்டு சபைகளை உற்சாகப்படுத்தவேண்டுமென்பது எனக்கு அவசியமாயிருக்கிறது;

2 பின்னர், இதோ, மாநாட்டின் குரலால் அவர்களின் பல ஊழியங்கள் அவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

3 இப்பொழுது, என்னுடைய ஊழியக்காரர்களாகிய ஜோசப் ஸ்மித், இளையவன், மற்றும் சிட்னி ரிக்டன், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், மீண்டும் மொழிபெயர்ப்பது அவசியமாயிருக்கிறது என கர்த்தர் சொல்லுகிறார்;

4 மாநாடுவரை சுற்றிலுமுள்ள பகுதிகளில் பிரசங்கிக்க எவ்வளவு சாத்தியமோ அவ்வளவாய் செய்து, பின்னர் மொழிபெயர்ப்பு முடியும்வரை அந்த வேலையைத் தொடர்வது அவசியமாயிருக்கிறது.

5 கூடுதலாக அறியும்வரை, அது எழுதப்பட்டதைப்போல மூப்பர்களுக்கு அது ஒரு மாதிரியாக இருப்பதாக.

6 இப்பொழுது இந்த நேரத்தில் உங்களுக்கு அதிகமாக நான் கொடுக்கவில்லை. உங்கள் அரைக்கச்சையைக் கட்டிக்கொண்டு அமைதியாயிருங்கள். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.