வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10


பாகம் 10

1828 கோடை ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தலின் சில பகுதிகள் பெறப்பட்டிருந்தாலும் அநேகமாக ஏப்ரல் 1829ல் பென்சில்வேனியாவின் ஹார்மனியில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு வெளிப்படுத்தல் கொடுக்கப்பட்டது, மார்மன் புஸ்தகத்திலிருந்த லேகி புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பிலிருந்து கையால் எழுதப்பட்ட 116 பக்கங்களில் துன்மார்க்கர்கள் செய்த மாற்றங்களைப்பற்றி இங்கே ஜோசப்புக்கு கர்த்தர் தெரிவிக்கிறார். எழுதப்பட்ட காகிதங்கள் மார்டின் ஹாரிஸிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டு, இந்த பக்கங்கள் அவரிடமிருந்து காணாமற்போனது. (பாகம் 3ன் தலைப்பைப் பார்க்கவும்). களவாடப்பட்ட பக்கங்களிலுள்ள கருத்துக்கள் மீண்டும் மொழிபெயர்க்கப்பட எதிர்பார்க்கப்பட்டு, பின்னர் மாற்றங்களால் உருவாக்கப்பட்ட முரண்பாடுகளைக் காட்டி மொழிபெயர்ப்பாளருக்கு அவப்பெயர் உண்டாக்க காத்திருக்கும் தீய திட்டமாயிருந்தது. இந்த துன்மார்க்கமான நோக்கம் பொல்லாங்கனின் மனதில் எண்ணங்கொண்டது, பூர்வகால நேபியர்களின் வரலாற்றாசிரியனான மார்மன் ஒன்று திரட்டிய தகடுகளில் அவனது சுருக்க உரையை எழுதிக்கொண்டிருக்கும்போதே கர்த்தருக்கு தெரியவந்ததைப்பற்றி மார்மன் புஸ்தகத்தில் காட்டப்பட்டிருக்கிறது (மார்மனின் வார்த்தைகள் 1:3–7 பார்க்கவும்).

1–26, கர்த்தரின் பணியை எதிர்க்க துன்மார்க்கர்களை சாத்தான் தூண்டுகிறான்; 27–33, மனுஷர்களின் ஆத்துமாக்களை அழிக்க அவன் வகை தேடுகிறான்; 34–52, மார்மன் புஸ்தகத்தின் மூலமாக லாமானியர்களுக்கும் சகல தேசங்களுக்கும் சுவிசேஷம் போகவேண்டும்; 53–63, மனுஷர்களுக்கு மத்தியிலே கர்த்தர் அவரது சபையையும் அவரது சுவிசேஷத்தையும் ஸ்தாபிப்பார்; 64–70, மனந்திரும்பியவர்களை அவரது சபைக்குள் அவர் கூட்டிச்சேர்த்து கீழ்ப்படிகிறவர்களை இரட்சிப்பார்.

1 இப்பொழுது, இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன், ஊரீம் மற்றும் தும்மீம் மூலமாக மொழிபெயர்க்க உனக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு, எழுதியவைகளை ஒரு துன்மார்க்கனின் கைகளில் நீ கொடுத்ததால் அவைகளை இழந்துபோனாய்.

2 அதே நேரத்தில் நீ உனது வரத்தை இழந்துபோனாய், உனது மனம் இருளடைந்துபோனது.

3 ஆனாலும், இப்பொழுது அது மீண்டும் உனக்கு திரும்பக் கொடுக்கப்பட்டிருக்கிறது; ஆகவே உண்மையாயிருந்து, நீ ஆரம்பித்ததைப்போல, மொழிபெயர்க்கும் வேலையின் மீதியை முடிப்பதைத் தொடர்ந்து செய்.

4 நீ மொழிபெயர்க்க உனக்கு கொடுக்கப்பட்ட பெலன் மற்றும் வழிகளைக் காட்டிலும் அதிவேகமாய் ஓடாதே, அல்லது உழைக்காதே, ஆனால் முடிவுபரியந்தம் கருத்தாயிரு.

5 ஆம் சாத்தானை ஜெயிக்கவும், சாத்தானின் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற அவனது வேலைக்காரர்களின் கைகளுக்குத் தப்பிக்கவும், ஜெயம் கொண்டவராக எப்பொழுதும் ஜெபம் பண்ணு;

6 இதோ, அவர்கள் உன்னை அழிக்க வகை தேடினார்கள்; ஆம், நீ நம்பிக்கை வைத்த மனுஷனும் கூட உன்னை அழிக்க வகை தேடினான்.

7 இந்த காரணத்திற்காகவே அவன் துன்மார்க்கனென்று நான் சொன்னேன், ஏனெனில் உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட காரியங்களை எடுத்துப்போக அவன் வகை தேடினான்; உனது வரத்தை அழித்துப்போடவும் அவன் வகை தேடுகிறான்.

8 எழுதியவைகளை நீ அவனது கைகளில் கொடுத்ததால், இதோ, துன்மார்க்கர்கள் அவைகளை உன்னிடமிருந்து எடுத்துப்போனார்கள்.

9 ஆகவே, பரிசுத்தமானவற்றை, ஆம், துன்மார்க்கத்திடம் நீ கொடுத்துவிட்டாய்.

10 மேலும், இதோ, நீ எழுதப்படவைத்தவைகளை அல்லது உனது கைகளிலிருந்து போன, நீ மொழிபெயர்த்தவைகளின் வார்த்தைகளை மாற்ற சாத்தான் அவர்களது இருதயங்களை ஏவினான்.

11 மேலும், இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன், அவர்கள் வார்த்தைகளை மாற்றியதால், நீ மொழிபெயர்த்த மற்றும் எழுதவைத்தவைகளுக்கு அவர்கள் படித்தது எதிர்பதமாக இருக்கின்றன.

12 மேலும், இந்த விதமாய் இந்த மொழிபெயர்ப்பை அவன் அழிக்கும்படியாய் பிசாசானவன் ஒரு தந்திரமான திட்டத்தைப் போட வகைதேடினான்;

13 ஏனெனில் மொழிபெயர்ப்பதாக நீ பாவனை செய்த வார்த்தைகளில் அவர்கள் உன்னை பிடித்துக் கொண்டதாக பொய் சொல்லி, இதைச் செய்ய அவர்களுடைய இருதயங்களை அவன் ஏவினான்.

14 மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், இந்தக் காரியத்தில் அவனது தீமையான திட்டத்தை சாத்தான் நிறைவேற்ற நான் விட மாட்டேன்.

15 ஏனெனில் இதோ, மீண்டும் அதை மொழிபெயர்க்க கேட்டு, உனது கர்த்தராகிய தேவனை நீ சோதிக்கும்படியாக அவர்கள் இருதயங்களை அவன் ஏவுகிறான்.

16 இதோ, மொழிபெயர்க்க தேவன் அவனுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறாரா என நாம் பார்ப்போமெனவும், அப்படியிருந்தால் மீண்டும் அவர் அவனுக்கு அதிகாரத்தைக் கொடுப்பார் எனச் சொல்லி அவர்கள் இருதயங்களில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்;

17 தேவன் அவனுக்கு மீண்டும் அதிகாரத்தைக் கொடுத்தால், அல்லது அவன் மீண்டும் மொழிபெயர்த்தால், வேறு வார்த்தைகளில் எனில், அவன் அதே வார்த்தைகளை மீண்டும் கொண்டுவந்தால், இதோ, அவையே நம்மிடமிருக்கிறது, நாம் அவற்றை மாற்றியுள்ளோம்;

18 ஆகவே அவர்கள் சம்மதிக்கமாட்டார்கள், அவனது வார்த்தைகளிலே அவன் பொய் சொன்னானெனவும், அவனிடம் வரமில்லையெனவும், அவனிடம் அதிகாரமில்லையெனவும் நாம் சொல்வோம்.

19 ஆகவே நாம் அவனையும், வேலையையும்கூட அழிப்போம்; கடைசியில் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கும், உலகத்தின் மகிமையை நாம் அடையும்படிக்கும் நாம் இதைச் செய்வோம்.

20 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், அவர்களுடைய இருதயங்களை சாத்தான் இறுகப் பிடித்துக் கொண்டான்; நன்மைக்கு எதிராக, அக்கிரமத்திற்கு அவர்களை அவன் தூண்டுகிறான்;

21 அவர்கள் இருதயங்கள் கெட்டுப்போய், துன்மார்க்கத்தாலும், அருவருப்புகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் வெளிச்சத்தைவிட அந்தகாரத்தை நேசிக்கிறார்கள், ஏனெனில் அவர்களின் நடத்தை பொல்லாததாய் இருக்கிறது; ஆகவே அவர்கள் என்னிடம் கேட்கமாட்டார்கள்.

22 அவர்களின் ஆத்துமாக்களை அவன் அழிவுக்கு நடத்த, சாத்தான் அவர்களைத் தூண்டுகிறான்.

23 அப்படியாக, தேவனின் பணியை அழிக்க நினைத்து, அவன் ஒரு தந்திர திட்டத்தைப் போட்டிருக்கிறான்; ஆனால் இதை அவர்களிடம் நான் கேட்பேன், நியாயத்தீர்ப்பின் நாளில் இது அவர்களின் அவமானத்துக்கும் ஆக்கினைக்கும் திரும்பும்.

24 ஆம், இந்த வேலைக்கு எதிராக கோபப்பட அவர்கள் இருதயங்களை அவன் தூண்டுகிறான்.

25 ஆம், அவர்களுக்கு அவன் சொல்லுகிறான்: நீங்கள் அழிக்கும்படிக்கு வஞ்சித்து பிடிக்க பதிவிருங்கள்; இதோ, இது தீங்கில்லை. மேலும் அப்படியாக அவர்களை அவன் முகஸ்துதி செய்து, அவனை அவர்கள் அழிக்கும்படிக்கு, பொய் சொல்பவனைப் பிடிக்க பொய் சொல்வதில் பாவமில்லையென அவர்களுக்கு அவன் சொல்லுகிறான்.

26 அப்படியாக அவர்களை அவன் முகஸ்துதி செய்து அவர்களின் ஆத்துமாக்களை பாதாளத்திற்கு இழுத்துச் செல்லும்வரை அவர்களை நடத்திச் செல்லுகிறான்; அப்படியாக அவர்களின் கண்ணியில் அவர்களே சிக்கிக்கொள்ள அவன் காரணமாயிருக்கிறான்.

27 அப்படியாக, மனுஷர்களின் ஆத்துமாக்களை அழிக்க வகைதேடி, அவன் மேலும் கீழும், பூமியில் அங்கும் இங்கும் உலவுகிறான்.

28 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், வஞ்சிக்கிறதற்கு பதிவிருக்கிற அவனுக்கு ஐயோ, ஏனெனில் வஞ்சிக்க மற்றொருவன் பதிவிருக்கிறானென அவன் நினைக்கிறான், ஏனெனில் தேவனின் நீதியில் அப்படிப்பட்டவர்கள் தப்பவிடப்படுவதில்லை.

29 இப்பொழுது, இதோ, இந்த வார்த்தைகளை அவர்கள் மாற்றினார்கள், ஏனெனில் அவன் உன்னை வஞ்சித்திருக்கிறான் என்று, சாத்தான் அவர்களுக்குச் சொல்லுகிறான்: அப்படியாக அக்கிரமம் செய்ய அவர்களை அவன் முகஸ்துதி செய்து, உன் தேவனாகிய கர்த்தரை நீ சோதிக்கச் செய்கிறான்.

30 இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன், உனது கைகளிலிருந்து போன அந்த வார்த்தைகளை மீண்டும் நீ மொழிபெயர்க்காதிருப்பாயாக;

31 ஏனெனில், இதோ, அந்த வார்த்தைகளுக்கு எதிராக பொய் சொல்லுவதில் அவர்களின் தீய திட்டங்களை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள், ஏனெனில், இதோ, அதே வார்த்தைகளை நீ கொண்டுவருவதாயிருந்தாலும் நீ பொய் சொன்னதாகவும், நீ மொழிபெயர்த்ததாக பாவனை செய்ததாகவும், ஆனால் நீ சொன்னவற்றை நீயே மாற்றிக் கூறுவதாகவும் அவர்கள் சொல்வார்கள்.

32 இதோ, அவர்கள் இதை வெளியிடுவார்கள், அவர்கள் எனது வார்த்தைகளை நம்பாதபடிக்கு, உனக்கு எதிராக கோபம்கொள்ளும்படிக்கு மக்களை தூண்டிவிட சாத்தான் அவர்களின் இருதயங்களை கடினப்படுத்துவான்.

33 அப்படியாக இந்த சந்ததியில் இப்பணி நடக்காதபடி, இந்த சந்ததியில் உனது சாட்சியை மேற்கொள்ள சாத்தான் சிந்திக்கிறான்.

34 ஆனால் இதோ, இதிலே ஞானம் விளங்கும், ஞானத்தை நான் உங்களுக்குக் காண்பிப்பதாலும், இந்தக் காரியங்களைக் குறித்து கட்டளைகளை உனக்குக் கொடுப்பதாலும், மொழிபெயர்க்கும் வேலையை நீ நிறைவேற்றும்வரை நீ செய்யப்போகிறவற்றை, உலகத்திற்குக் காண்பிக்காதே.

35 நான் உனக்குச் சொன்னவைகளைக் குறித்து ஆச்சரியப்படவேண்டாம்: இதிலே ஞானம் விளங்கும், அதை உலகத்திற்குக் காண்பிக்காதே, ஏனெனில் நீ பாதுகாக்கப்படும்படிக்கு அதை உலகத்திற்குக் காண்பிக்காதே, என நான் சொன்னேன்.

36 இதோ, நீதிமான்களுக்கு அதைக் காண்பிக்கக்கூடாது என நான் சொல்லவில்லை;

37 ஆனால் எப்போதுமே நீதிமான்களை நீ நிதானிக்க முடியாதென்பதாலும் அல்லது நீதிமான்களிலிருந்து எப்போதுமே துன்மார்க்கரை நீ பிரித்து சொல்லமுடியாது என்பதாலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், இந்தக் காரியத்தைக் குறித்து சகல காரியங்களையும் உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்கு ஏற்றதென்று நான் காண்கிறவரை நீ பேசாதிருப்பாயாக.

38 இப்பொழுது, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், உன் கைகளிலிருந்து போன, நீ எழுதிய அந்தக் காரியங்களின் விவரம் நேபியின் தகடுகளின்மேல் பொறிக்கப்பட்டிருக்கிறது;

39 ஆம், நேபியின் தகடுகளில் இந்தக் காரியங்களைக் குறித்து ஒரு அதிக குறிப்பான விவரம் கொடுக்கப்பட்டிருக்கிறதென அந்த எழுத்துக்களில் சொல்லப்பட்டிருக்கிறதை நீ நினைவுகூர்.

40 இப்பொழுது, நேபியின் தகடுகளின்மேல் பொறிக்கப்பட்டுள்ள விவரம், அந்தக் காரியங்களைக் குறித்து மிகக் குறிப்பிடத்தக்கதாக இருப்பதால் எனது ஞானத்தில் இந்த விவரத்தை ஜனங்களின் அறிவுக்கு நான் கொண்டு வருவேன்,

41 ஆகவே, நேபியின் தகடுகளின் மேல் பதிக்கப்பட்ட, பென்யமீன் ராஜாவின் ஆளுகைவரை அல்லது நீ வைத்திருக்கிற, நீ மொழிபெயர்த்தவற்றுக்கு வரும்வரை நீ மொழிபெயர்க்கலாம்;

42 இதோ, நேபியின் குறிப்பாக நீ அதை வெளியிடலாம்; அப்படியாக, எனது வார்த்தைகளை மாற்றியவர்களை நான் தாறுமாறாக்குவேன்.

43 எனது பணியை அவர்கள் அழிக்க நான் விடமாட்டேன்; ஆம், பிசாசானவனின் தந்திரத்தைவிட எனது ஞானம் மகத்தானதென அவர்களுக்கு நான் காண்பிப்பேன்.

44 இதோ, அவர்கள் ஒரு பகுதியை மட்டுமே, அல்லது நேபியின் விவரத்தின் சுருக்கத்தை மட்டுமே வைத்திருக்கிறார்கள்.

45 இதோ, நேபியின் தகடுகளின் மேல், எனது சுவிசேஷத்தைப்பற்றிய மகத்தான கருத்துக்களை தெரிவிக்கிற அநேக காரியங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன; ஆகவே, நேபியின் பதிப்புகளின் முதல் பகுதியை நீ மொழிபெயர்த்து இந்த பணியை தொடரவேண்டுமென்பது என்னிலுள்ள ஞானமாயிருக்கிறது.

46 இதோ, எனது பரிசுத்த தீர்க்கதரிசிகளும், ஆம், எனது சீஷர்களும்கூட இந்த ஜனங்களுக்குள் வரவேண்டுமென தங்கள் ஜெபங்களில் வாஞ்சித்த எனது சுவிசேஷத்தின் அனைத்து பகுதிகளும், இந்த பணியின் மீதியுள்ள எல்லாவற்றிலும் அடங்கியிருக்கின்றன.

47 தங்கள் ஜெபங்களில் தங்களின் விசுவாசத்தின்படி அது அவர்களுக்கு அருளப்படுமென நான் அவர்களுக்குச் சொன்னேன்;

48 ஆம், தங்கள் நாட்களில் அவர்கள் பிரசங்கிக்க வேண்டுமென நான் அவர்களுக்குக் கொடுத்த எனது சுவிசேஷம் அவர்களின் சகோதரர்களான லாமானியர்களுக்கும், மற்றும் அவர்களின் பேதங்களினிமித்தம் லாமானியர்களாக ஆன அனைவருக்கும் வருமென்பது அவர்களுடைய விசுவாசமாகும்.

49 இப்பொழுது, இது மட்டும் அல்ல, இந்த சுவிசேஷம் அறிவிக்கப்படவேண்டும், சாத்தியமானால் பிற தேசங்கள் இந்த தேசத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்களது ஜெபத்தில் அவர்களின் விசுவாசமாகும்.

50 அப்படியாக, இந்த தேசத்தில் இந்த சுவிசேஷத்தை நம்புகிறவர்கள் எல்லோரும் நித்திய ஜீவனை அடைவார்களென தங்கள் ஜெபங்களில் இந்த தேசத்தின்மேல் ஒரு ஆசீர்வாதத்தை அவர்கள் விட்டுச்சென்றார்கள்;

51 ஆம், அவர்கள் எந்த தேசத்தவர்களாய், இனங்களாய், பாஷைக்காரர்களாய் அல்லது ஜனங்களாயிருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் இது இலவசமானதாயிருக்கும்.

52 இப்பொழுது, இதோ, தங்களின் விசுவாசத்தின்படி தங்கள் ஜெபங்களில் எனது சுவிசேஷத்தின் இந்த பகுதியை எனது ஜனங்களின் அறிவுக்கு நான் கொண்டுவருவேன். இதோ, அவர்கள் பெற்றவற்றை அழிக்க நான் அதைக் கொண்டுவரமாட்டேன், ஆனால் அதைக் கட்டவே கொண்டுவருவேன்.

53 இந்தக் காரணத்திற்காகவே நான் சொன்னேன்: இந்த சந்ததி தங்கள் இருதயங்களை கடினப்படுத்தாமலிருந்தால், அவர்களுக்கு மத்தியில் நான் எனது சபையை ஸ்தாபிப்பேன்.

54 இப்பொழுது, எனது சபையை அழிக்க நான் இதைச் சொல்லவில்லை, எனது சபையைக் கட்டவே நான் இதைச் சொல்லுகிறேன்;

55 ஆகவே, அத்தகையவர்கள் பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்வார்கள் என்பதால் எனது சபையைச் சேர்ந்தவர்கள் எவரும் பயப்படத் தேவையில்லை.

56 ஆனால் எனக்குப் பயப்படாதவர்களும், எனது கட்டளைகளைக் கைக்கொள்ளாதவர்களுமாகிய அவர்கள், தங்களின் ஆதாயத்திற்காக சபையைக் கட்டுகிறவர்கள், ஆம், பொல்லாப்பைச் செய்து பிசாசானவனின் ராஜ்யத்தைக் கட்டுகிறவர்கள், ஆம், மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், நான் அவர்களை சீர்குலைத்து, நடுங்கவைத்து, சரீரம் முழுவதையும் குலுங்கச் செய்வேன்.

57 இதோ, நானே தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து. நான் என் சொந்தமானவர்களிடத்தில் வந்தேன், எனக்கு சொந்தமானவர்களோ என்னை ஏற்றுக்கொள்ளவில்லை.

58 நானே இருளில் பிரகாசிக்கிற ஒளி, இருள் அதை அறிவதில்லை.

59 இந்த மந்தையல்லாமல் வேறே ஆடுகளும் எனக்குண்டு என எனது சீஷர்களிடத்தில் சொன்னது நானே, அங்கே அநேகர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை.

60 வேறே ஆடுகளும் எனக்குண்டு எனவும், அவர்கள் யாக்கோபுவின் குடும்பத்தாரின் ஒரு கிளையாயிருந்தார்கள் எனவும் இந்த ஜனங்களுக்கு நான் காண்பிப்பேன்,

61 எனது நாமத்தில் அவர்கள் செய்த அவர்களின் அதிசயமான கிரியைகளை நான் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவேன்;

62 ஆம், அவர்களிடத்தில் அறிவிக்கப்பட்ட எனது சுவிசேஷத்தை நான் வெளியரங்கமாக்குவேன், மேலும் இதோ, நீ பெற்றுக்கொண்டவைகளை அவர்கள் மறுக்கமாட்டார்கள், ஆனால் அவர்கள் அதைக் கட்டுவார்கள், என்னில் இருக்கும் ஒரே கோட்பாட்டை, ஆம் எனது கோட்பாட்டின் உண்மையான கருத்துக்களை அவர்கள் வெளியரங்கமாக்குவார்கள்.

63 அங்கே மிகுந்த பிணக்கில்லாமலிருக்க, எனது சுவிசேஷத்தை ஸ்தாபிக்க இதை நான் செய்கிறேன்; ஆம், எனது கோட்பாடுகளின் கருத்துக்களைப்பற்றி பிணக்கு ஏற்படுத்த ஜனங்களின் இருதயங்களை சாத்தான் தூண்டுகிறான்; இந்தக் காரியங்களில் அவர்கள் தவறு செய்கிறார்கள், ஏனெனில் அவர்கள் வேதவாக்கியங்களைப் புரட்டி, அவைகளை புரியாதிருக்கிறார்கள்.

64 ஆகவே, இந்த மகத்தான இரகசியத்தை நான் அவர்களுக்கு வெளியாக்குவேன்;

65 ஏனெனில், இதோ, அவர்கள் தங்கள் இருதயங்களை கடினப்படுத்தாதிருந்தால், கோழி தன் குஞ்சுகளைத் தன்னுடைய சிறகுகளுக்குள் கூட்டி சேர்ப்பதைப்போல நான் அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன்;

66 ஆம், அவர்கள் வந்தால், அவர்கள் ஜீவதண்ணீரில் இலவசமாக பங்கேற்கலாம்.

67 இதோ, இதுவே எனது கோட்பாடு, மனந்திரும்பி என்னண்டை வருகிறவர்களே எனது சபை.

68 இதற்கு அதிகமாகவோ குறைவாகவோ யார் அறிக்கை பண்ணினாலும், அவன் என்னைச் சார்ந்தவனில்லை, ஆனால் எனக்கு விரோதமானவன்; ஆகவே அவன் எனது சபையைச் சாராதவன்.

69 இப்பொழுது, இதோ, எனது சபையைச் சார்ந்து, முடிவுபரியந்தம் எனது சபையில் நிலைத்திருப்பவன் எவனோ அவனை எனது கன்மலையின் மீது நான் ஸ்தாபிப்பேன், அவர்களுக்கெதிராக பாதாளத்தின் வாசல்கள் நிலைப்பதில்லை.

70 இப்பொழுது, உலகத்தின் ஜீவனும் ஒளியுமாயிருக்கிறவரான, உனது மீட்பரும், உனது கர்த்தரும் தேவனுமாயிருக்கிற அவரது வார்த்தைகளை நினைவுகூருவாயாக. ஆமென்.