வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 32


பாகம் 32

அக்டோபர் 1830 ஆரம்பத்தில், நியூயார்க்கின் மான்செஸ்டரில் பார்லி. பி. பிராட்டுக்கும், சிபா பீட்டர்சனுக்கும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். மார்மன் புஸ்தகத்திலிருந்து சபை அறிந்துகொண்ட லாமானியர்களின் முன்னறிவிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப்பற்றி மிகுந்த ஆர்வமும் விருப்பங்களும் மூப்பர்களால் உணரப்பட்டது. அதன் விளைவாக, அந்த சமயத்தில் மேற்கிலுள்ள செவ்விந்திய குடிகளிடத்தில் மூப்பர்கள் அனுப்பப்பட வேண்டுமா இல்லையா என்பதற்கான அவரது சித்தத்தை கர்த்தர் குறித்துக்காட்ட வேண்டுதல் செய்யப்பட்டது. வெளிப்படுத்தல் பின் தொடர்ந்தது.

1–3, லாமானியர்களுக்கு பிரசங்கிக்கவும், ஆலிவர் கௌட்ரியுடனும் பீட்டர் விட்மர் இளையவருடனும் துணையாய் செல்லவும், பார்லி. பி. பிராட்டும், சிபா பீட்டர்சனும் அழைக்கப்பட்டார்கள்; 4–5, வேதங்களைப்பற்றிய ஒரு புரிந்துகொள்ளுதலுக்காக அவர்கள் ஜெபிக்கவேண்டும்.

1 இப்பொழுது, எனது ஊழியக்காரனாகிய பார்லி பி. பிராட்டைப் பற்றி, இதோ, நான் ஜீவிப்பதால், எனது சுவிசேஷத்தை அவன் அறிவித்து, என்னிடத்தில் கற்றுக்கொண்டு, சாந்தமாயும் இருதயத்தில் தாழ்மையுள்ளவனாயும் இருக்கவேண்டும் என நான் அவனுக்குச் சொல்லுகிறேன்.

2 எனது ஊழியக்காரர்களான ஆலிவர் கௌட்ரியுடனும், பீட்டர் விட்மர் இளையவனுடனும் லாமானியர்களுக்கு மத்தியில் அவன் வனாந்தரத்திற்குப் போக நான் அவனை நியமித்தேன்.

3 சிபா பீட்டர்சனும் அவர்களுடன் போவான்; நானும் அவர்களுடன் போய் அவர்களுக்கு மத்தியிலிருப்பேன்; நானே பிதாவிடம் அவர்களது மத்தியஸ்தராயிருப்பேன், அவர்களுக்கு எதிராக எதுவும் மேற்கொள்ளாது.

4 எழுதப்பட்டவைகளுக்கு அவர்கள் செவிகொடுப்பார்களாக, வேறெந்த வெளிப்படுத்தலைப்பற்றியும் பாசாங்கு செய்யவேண்டாம், தங்களின் புரிந்துகொள்ளுதலுக்காக அதையே அவர்களுக்கு நான் வெளிப்படுத்தும்படியாக அவர்கள் எப்பொழுதும் ஜெபிப்பார்களாக.

5 அவர்கள் இந்த வார்த்தைகளுக்கு செவிகொடுப்பார்களாக, அற்பமாய் எண்ண வேண்டாம், நான் அவர்களை ஆசீர்வதிப்பேன். ஆமென்.