Scripture Stories
அபிநாதியும் நோவா இராஜாவும்


“அபிநாதியும் நோவா இராஜாவும்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

மோசியா 11–17

அபிநாதியும் நோவா இராஜாவும்

ஒரு தீர்க்கதரிசியிடமிருந்து செய்தி

படம்
இரண்டு ஆசாரியர்கள் பின்னால் நிற்கையில் நோவா ராஜா சுட்டிக்காட்டுதல்

நேபி தேசத்தில் வாழ்ந்த நேபியர்களை நோவா ராஜா ஆண்டான். நோவா தனது மக்களை அவனுக்கு நிறைய பணம் கொடுக்கச் செய்தான், பின்னர் அதை தனக்கு விருப்பமான விஷயங்களுக்கு செலவு செய்தான். அவன் ஆள்வதற்கு உதவ தற்பெருமையுடைய ஆசாரியர்களை அழைத்தான். நோவா தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, பல பொல்லாத செயல்களைச் செய்தான்.

மோசியா 11:1–13

படம்
நோவா இராஜா

நோவா தனது மக்களையும் பொல்லாதவர்களாக வழிநடத்தினான். அவர்கள் கர்த்தரைப் பின்பற்றவில்லை.

மோசியா 11:7, 11, 14–15, 19

படம்
அபிநாதி கெட்ட காரியங்களைச் செய்யும் மக்களைப் பார்க்கிறான்

அபிநாதி என்ற தேவனின் தீர்க்கதரிசி அந்த நாட்டில் வாழ்ந்து வந்தான். நோவாவையும் அவனுடைய மக்களையும் மனந்திரும்பச் சொல்ல கர்த்தர் அபிநாதியை அனுப்பினார்.

மோசியா 11:20

படம்
அபிநாதி மக்களிடம் பேசுதல்

அபிநாதி மக்களிடம் கர்த்தர் அவர்கள் மனந்திரும்ப வேண்டும் என்று விரும்பினார் என்றான். அவர்கள் மனந்திரும்பவில்லை என்றால், கர்த்தர் எதிரிகள் அவர்கள் தேசத்திற்கு வந்து அவர்களை ஆள அனுமதிப்பார். அவர்களுடைய எதிரிகள் நோவாவுக்கும் அவனுடைய மக்களுக்கும் வாழ்க்கையை மிகவும் கடினமாக்குவார்கள்.

மோசியா 11:20–25

படம்
கோபமான மக்கள்

அபிநாதி சொன்னதைக் கேட்டு மக்கள் அவன்மீது கோபமடைந்தனர். அவர்கள் அவனைக் கொல்ல விரும்பினர், ஆனால் கர்த்தர் அபிநாதியை பத்திரமாக வைத்து தப்பிக்க உதவினார்.

மோசியா 11:26

படம்
நோவா ராஜா கைகளை ஒன்றாக அழுத்தி ஆசாரியர்களிடம் பேசுகிறான்

நோவா அபிநாதியையும் கொல்ல விரும்பினான். நோவா கர்த்தரை நம்பவில்லை. அவனும் அவனுடைய மக்களும் மனந்திரும்பவில்லை.

மோசியா 11:27–29

படம்
அபிநாதி தகடுகளைப் பிடித்துக் கொண்டு குடும்பத்தாரிடம் பேசுகிறான்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களை எச்சரிக்க கர்த்தர் அபிநாதியைத் திருப்பி அனுப்பினார். அவர்கள் மனந்திரும்பவில்லையாதலால், அவர்களின் எதிரிகள் தேசத்தைக் கைப்பற்றுவார்கள் என்று அபிநாதி மக்களிடம் கூறினான். மக்கள் அபிநாதி மீது கோபமடைந்தனர். தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும் மனந்திரும்ப மாட்டோம் என்றும் கூறினார்கள். அபிநாதியைக் கட்டி நோவாவிடம் அழைத்துச் சென்றனர்.

மோசியா 12:1–16

படம்
அபிநாதி நோவா ராஜாவுக்கு முதுகுகாட்டி மண்டியிடுதல்

நோவாவும் அவனுடைய ஆசாரியர்களும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தனர். ஆசாரியர்கள் அபிநாதியிடம் பல கேள்விகள் கேட்டு ஏமாற்ற முயன்றனர். ஆனால் அபிநாதி அவர்களுக்கு தைரியமாக பதிலளித்தான். அபிநாதியின் பதில்களால் ஆசாரியர்கள் ஆச்சரியமடைந்தனர். அவர்களால் அவனை ஏமாற்ற முடியவில்லை. சரியானதைச் செய்வதை விட பணத்தின் மீது அவர்கள் அதிக அக்கறை காட்டுவதாக அபிநாதி ஆசாரியர்களிடம் கூறினான்.

மோசியா 12:17–37

படம்
அபிநாதி நின்று ஒளிர்தல்

நோவா தனது ஆசாரியர்களிடம் அபிநாதியைக் கொல்லச் சொன்னான். ஆனால் அபிநாதி தன்னைத் தொடக்கூடாது என்று எச்சரித்தான். அவனுடைய முகம் தேவ வல்லமையால் பிரகாசித்தது. ஆசாரியர்கள் தேவனின் நியாயப்பிரமாணங்களைக் கற்பிக்கவில்லை என்று அபிநாதி கூறினான். இயேசு கிறிஸ்து பிறப்பார், நமக்காக இறந்து, உயிர்த்தெழுவார் என்று அபிநாதி அவர்களுக்குக் கற்பித்தான். அவர்கள் மனந்திரும்பினால் இயேசு அவர்களை மன்னிப்பார் என்றான்.

மோசியா 13; 16:6–15

படம்
அபிநாதி நோவா இராஜாவைப் பார்த்தல்

கர்த்தர் அனுப்பிய செய்தியை அபிநாதி செய்து முடித்தான். நோவா இன்னும் கோபமாகவே இருந்தான். அபிநாதியை பிடித்து வந்து கொல்லுமாறு தன் ஆசாரியர்களிடம் அவன் கூறினான்.

மோசியா 17:1

படம்
ஆல்மா நினைப்பது போல் நோவா இராஜா அபிநாதிதியைப் பார்க்கிறான், மற்ற ஆசாரியர்கள் கோபமடைந்தனர்

ஆல்மா என்ற ஆசாரியன் அபிநாதியை நம்பினான். ஆல்மா அபிநாதியை காப்பாற்ற முயன்றான். ஆனால் இப்போது நோவா ஆல்மா மீதும் கோபமடைந்து அவனை வெளியேறும்படி கட்டாயப்படுத்தினான்.

மோசியா 17:2–3

படம்
ஆல்மா பொல்லாத ஆசாரியர்களிடமிருந்து மறைந்து கொள்கிறான்

தான் போதித்தது உண்மையல்ல என்று சொன்னால் அபிநாதி வாழலாம் என்று ஆசாரியர்கள் சொன்னார்கள். ஆனால் அபிநாதி தான் சத்தியத்தைக் கற்பித்ததாகக் கூறினான். நோவாவும் அவனுடைய ஆசாரியர்களும் மறுபடியும் கோபமடைந்தார்கள். அபிநாதியை நெருப்பில் போட்டு கொன்றனர். நோவாவின் காவலர்கள் ஆல்மாவையும் கொல்ல முயன்றனர். ஆனால் ஆல்மா மறைந்திருந்து அபிநாதியின் அனைத்து வார்த்தைகளையும் எழுதி வைத்தான்.

மோசியா 17:3–13, 20