Scripture Stories
ஜீவ விருட்சம்


“ஜீவ விருட்சம்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

“ஜீவ விருட்சம்,” மார்மன் புஸ்தகக் கதைகள்

1 நேபி 8

ஜீவ விருட்சம்

லேகியின் உணர்த்தப்பட்ட சொப்பனம்

படம்
லேகி குடும்பத்துடன் பேசுதல்

ஒரு நாள் இரவில், லேகி கர்த்தரிடமிருந்து ஒரு சொப்பனம் கண்டான். லேகி தனது குடும்பத்தினரிடம் சொப்பனத்தைப்பற்றி கூறினான்.

1 நேபி 8:2-4

படம்
தூதன் லேகியிடம் பேசுதல்

தனது சொப்பனத்தில், லெகி வெள்ளை அங்கி அணிந்த ஒரு மனுஷனைக் கண்டான். அந்த மனுஷன் தன்னைப் பின்தொடருமாறு லேகியிடம் கூறினான்.

1 நேபி 8:5-6

படம்
இருளில் லேகி

லேகி ஒரு இருண்ட மற்றும் வேற்று நிலத்தில் இருப்பதைக் கண்டான். அவன் பல மணி நேரம் நடந்தான். ஆனாலும் இருள் விலகவில்லை. இறுதியாக, லேகி உதவிக்காக ஜெபம் செய்தான்.

1 நேபி 8:7–8

படம்
லேகி பழ மரத்தைப் பார்த்தல்.

லேகி ஜெபம் செய்து முடித்ததும் விசாலமான வெளியைக் கண்டான். அந்த வெளியில் வெள்ளைப் பழங்கள் நிறைந்த ஒரு மரம் இருந்தது. அந்தப் பழம் தனக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று நினைத்த லேகி அதைச் சாப்பிட்டான். அவன் ஆத்துமா மகிழ்ச்சியில் நிறைந்தது.

1 நேபி 8:9-12

படம்
சரயா, சாம், நேபி ஆகியோர் ஆற்றின் அருகே நிற்கும்போது பழங்களை லேகி உண்ணுதல்

“இந்தப் பழம்” “மற்ற எந்தப் பழங்களையும் விட விரும்பத் தக்கதாய் இருந்தது. அது இனிப்பாகவும் சுவையாகவும் இருந்தது. லேகி தனது குடும்பத்துடன் அதை பகிர்ந்துகொள்ள விரும்பினான். அது அவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்று அவன் அறிந்தான் சரயா, சாம், நேபி ஆற்றங்கரையில் நிற்பதை லேகி கண்டான். அவர்கள் தொலைந்துபோனதைப் போல காணப்பட்டனர் லேகி பலத்த சத்தமிட்டு அவர்களை அழைத்தான். அவர்களை வந்து பழங்களைச் சாப்பிடும்படியாக கூறினான்.

1 நேபி 8:11-15

படம்
லாமானும் லெமுவேலும் விலகிச் செல்லுதல்

சரயா, சாம், நேபி மரத்திற்கு வந்து பழங்களைச் சாப்பிட்டனர். லேகி லாமானையும் லெமுவேலையும் தேடினான். அவர்களும் பழங்களை சாப்பிடவேண்டும் என்று விரும்பினான். ஆனால் பழங்களை சாப்பிட அவர்கள் வருவதில்லை.

1 நேபி 8:16-18

படம்
மரத்திற்கு மக்கள் வருதல்

அப்போது லேகி மரத்திற்கு செல்லும் இருப்புக்கோல் கூடிய பாதையைக் கண்டான். பாதையில் பலர் நடந்து செல்வதைக் கண்டான். திடீரென்று அடர்ந்த இருள் சூழ்ந்தது. இருளில் பார்ப்பது கடினமாக இருந்தது. இருப்புகோலைப் பிடித்துக்கொண்டுதான் மரத்திற்குச் செல்ல முடியும்.

1 நேபி 8:19-24

படம்
கைகள் கோலைப் பிடித்திருத்தல்

சிலர் வழி தவறி வழி காணாமல் போய்விட்டனர். மற்றவர்கள் இருப்புக்கோலைப் பிடித்துக்கொண்டு முன்னேறினர்.

1 நேபி 8:23-24

படம்
பெண் பழத்தைச் சாப்பிடுதல்

அவர்கள் மரத்திற்கு வந்ததும், பழங்களைச் சாப்பிட்டார்கள்.

1 நேபி 8:24.

படம்
மரம், ஆறு மற்றும் விசாலமான கட்டிடம்

லேகி நிமிர்ந்து ஏராளமான மக்கள் நிரம்பிய ஒரு விசாலமான கட்டிடத்தைக் கண்டான். அவர்கள் பழம் சாப்பிட்டவர்களை கேலி செய்தனர். பழங்களைச் சாப்பிட்ட சிலர், மற்றவர்கள் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது மோசமாக உணர்ந்தார்கள், அதனால் அவர்கள் மரத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் அலைந்து திரிந்து தொலைந்து போனார்கள்.

1 நேபி 8:25-28; 31:-32

படம்
விருட்சத்தில் மக்கள்

லேகி தனது கனவில், இருப்புக்கோலை இறுகப் பிடித்திருந்த அதிகமானவர்களைக் கண்டான். அவர்கள் விருட்சத்திற்கு வரும் வரை படிப்படியாக முன்னேறினார்கள். பின்னர் விருட்சத்தினடியில் மண்டியிட்டு பழங்களை சாப்பிட்டனர். கட்டிடத்தில் இருந்தவர்கள் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் விருட்சத்திற்கு வருவதைத் தேர்ந்தெடுத்தனர்.

1 நேபி 8:30, 33

படம்
லேகி குடும்பத்துடன் பேசுதல்

லேகி விழித்தபோது, ​​லாமன் மற்றும் லெமுவேலைப் பற்றிக் கவலைப்பட்டான். அவனுடைய சொப்பனத்தில் அவர்கள் பழத்தைச் சாப்பிடவில்லை லேகி லாமானையும் லெமுவேலையும் நேசித்தான். அவர்கள் கர்த்தருக்கு நெருக்கமாக இருப்பார்கள் என்று அவன் நம்பினான். கர்த்தரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தான்.

1 நேபி 8:36-38