Scripture Stories
யாக்கோபும் சேரெமும்


“யாக்கோபும் சேரெமும்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

யாக்கோபு 7

யாக்கோபும் சேரெமும்

இயேசு கிறிஸ்துவைப்பற்றியதான தீர்க்கதரிசியின் சாட்சி.

படம்
பிள்ளைகளுக்கு யாக்கோபு போதித்தல்

யாக்கோபு இயேசு கிறிஸ்துவைக் கண்ட தீர்க்கதரிசி மக்கள் இயேசுவில் நம்பிக்கைவைக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். யாக்கோபு கர்த்தரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க மக்களுக்குப் போதித்தான். கர்த்தரைப் பற்றி மக்களுக்குப் போதிக்க கடினமாகப் பணியாற்றினான்.

2 நேபி 11:2-3; யாக்கோபு 1:1-8, 17-19

படம்
சேரெம் மக்களுடன் பேசுதல்

ஒரு நாள், சேரெம் என்ற மனுஷன் மக்களுக்குக் போதிக்கத் தொடங்கினான். ஆனால் இயேசு உண்மையானவர் அல்ல என்று சேரெம் போதித்தான். சேரெம் பேசுவதில் வல்லவனாக இருந்தான், மேலும் பல நேபியர்கள் அவன் சொன்னதை நம்பினர். அவனால், பலர் இயேசுவை நம்புவதை கைவிட்டனர். யாக்கோபுவும், இயேசுவை நம்புவதை கைவிட வேண்டும் என்றும் சேரெம் விரும்பினான்.

யாக்கோபு 7:1-5

படம்
யாக்கோபுவைச் சுட்டிக்காட்டி சேரெம் பேசுதல்

வருங்காலத்தில் என்ன சம்பவிக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது என்று சேரெம் கூறினான். இயேசு இன்னும் பூமிக்கு வரவில்லை என்பதால், இயேசு உண்மையானவரா என்பதை யாராலும் அறிய முடியாது என்ற நோக்கத்தில் அவன் கூறினான். ஆனால் யாக்கோபு வேதமும் எல்லா தீர்க்கதரிசிகளும் இயேசுவைப் பற்றி போதிப்பதாகக் கூறினான். இயேசு பூமிக்கு வருவார் என்பதை கர்த்தர் யாக்கோபுக்குக் காட்டினார்.

யாக்கோபு 7:6-12

படம்
சேரெம் ஏளன சிரிப்புடன் பேசுதல்

சேரெம் இன்னும் நம்பவில்லை. இயேசு உண்மையானவர் என்பதற்கான அடையாளத்தை யாக்கோபு காட்ட வேண்டும் என்று அவன் விரும்பினான்.

யாக்கோபு 7:13

படம்
யாக்கோபு கையை உயர்த்துதல்

இயேசு வருவார் என்று சேரெமுக்குத் தெரியும் என்றும் அதற்கு அடையாளம் தேவையில்லை என்றும் யாக்கோபு கூறினான். ஆனாலும் தேவனுக்கு வல்லமை இருக்கிறது, இயேசு உண்மையானவர் என்பதைக் காட்ட தேவன் சேரெமை மயக்கமடையச் செய்வார் என்று யாக்கோபு கூறினான்.

யாக்கோபு 7:14

படம்
சேரெம் மண்டியிட்டு மக்களின் அருகில் விழுதல்

திடீரென்று, சேரெம் உடல்நிலை பாதிக்கப்பட்டு தரையில் விழுந்தான். சிறிது காலம் கழித்து, அவன் இறக்கப்போகிறான் என்று அவன் அறிந்தான் அவன் சாத்தானால் ஏமாற்றப்பட்டதை மக்களிடம் கூறினான். தேவனிடத்தில் பொய் சொன்னதாக அவன் கூறினான். இயேசு உண்மையானவர் என்பதை அவன் அவ்வளவு காலமும் அறிந்திருந்தான். பின்னர் சேரெம் மரித்தான். மக்கள் வேதத்தை வாசித்தார்கள் இயேசுவை நம்பினார்கள்.

யாக்கோபு 7:15-23