Scripture Stories
கொரியாந்தன்


“கொரியாந்தன்”மார்மன் புஸ்தக கதைகள் (2023)

ஆல்மா 39–42

கொரியாந்தன்

கர்த்தரிடம் மீண்டும் திரும்புதல்

படம்
கொரியாந்தன் மக்களுக்கு போதித்தல்

கொரியாந்தன் ஆல்மாவின் மகன்களில் ஒருவன். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சோரமியர் என்று அழைக்கப்படும் ஒரு குழுவினருக்கு போதிக்க தனது தந்தை, தனது சகோதரன் சிப்லோன் மற்றும் பிறருடன் சென்றான்.

ஆல்மா 31:5-7; 32:1

படம்
கொரியாந்தன் மக்களுடன் குடித்தல்

கொரியாந்தன் மக்களுடன் இருந்தபோது, ​​பாவம் செய்ய தூண்டப்பட்டான். கர்த்தருக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக,தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமான காரியங்களைச் செய்வதைத் தேர்ந்தெடுத்தான். அவன் செய்த காரியத்தின் காரணமாக, ஆல்மாவும் அவனுடைய மகன்களும் போதித்ததை சில சோராமியர்கள் நம்பவில்லை.

ஆல்மா 39:2–5, 11–12

படம்
ஆல்மா கொரியாந்தனுடன் பேசுதல்.

மனந்திரும்பி மன்னிப்புக்காக கர்த்தரிடம் திரும்புமாறு ஆல்மா கொரியாந்தனை அழைத்தான். கர்த்தரின் திட்டத்தின் நிலைகளைக் குறித்து கொரியாந்தன் கவலைப்பட்டான். மகிழ்ச்சியின் திட்டம், கிறிஸ்துவின் பாவ நிவர்த்தி, உயிர்த்தெழுதல் மற்றும் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றிப் புரிந்துகொள்ள ஆல்மா தனது மகனுக்கு உதவினான். கர்த்தருக்கு செய்ய வேண்டிய ஒரு வேலை இருக்கிறது என்பதை ஆல்மா அவனுக்கு நினைவூட்டினான்.

ஆல்மா 39:7–9, 13–19; 40–42

படம்
கொரியாந்தன் மக்களுக்கு போதித்தல்

கொரியாந்தன் தன் தந்தைக்கு செவிகொடுத்தல். இயேசுவின் மீது விசுவாசம் வைத்து, தனது பாவங்களை நினைத்து மனம் வருந்தினான். கர்த்தர் நீதியுள்ளவர், அன்பானவர், இரக்கமுள்ளவர் என்பதை அவன் கற்றுக்கொண்டான். கொரியாந்தன் தனது தந்தை மற்றும் சகோதரருடன் இணைந்து மீண்டும் போதித்தான். மனந்திரும்புதலில் மகிழ்ச்சி மற்றும் சமாதானம், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் வாழுதல் பற்றி அவர்கள் அநேகருக்கு போதித்தார்கள்.

ஆல்மா 42:30–31; 43:1–2; 48:17–18