Scripture Stories
ஏனோஸ்


“ஏனோஸ்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

“ஏனோஸ்,” மார்மன் புஸ்தகக் கதைகள்

ஏனோஸ் 1

ஏனோஸ்

கர்த்தரிடம் வல்லமையாக ஜெபித்தல்

படம்
ஏனோஸ் வேட்டையாடுதல்

யாக்கோபு தனது மகன் ஏனோஸிடம் தகடுகளைக் கொடுத்தான். யாக்கோபு எழுதியது போல் ஏனோஸ் அவைகள் மீது எழுதினான். ஒரு நாள், ஏனோஸ் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான் தேவனைப் பற்றி தன் தந்தை போதித்ததை அவன் நினைவு கூர்ந்தான். கர்த்தரைப் பின்பற்றுவது அவனுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று யாக்கோபு ஏனோஸுக்குக் போதித்திருந்தான்.

யாக்கோபு 7:27; ஏனோஸ் 1:2–3

படம்
ஏனோஸ் பகலில் ஜெபித்தல்

ஏனோஸ் தன் தகப்பன் பேசிய காரியத்தின் மகிழ்ச்சியை உணர விரும்பினான். கர்த்தரிடம் பிரார்த்தனை செய்ய முடிவு செய்தான் பகல் முழுவதும் மற்றும் இரவிலும் ஜெபம் செய்தான்.

ஏனோஸ் 1:3-4

படம்
ஏனோஸ் மேலே பார்த்தல்

அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக கர்த்தர் ஏனோஸிடம் கூறினார். ஏனோஸ் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். ஏனோஸ் இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தினிமித்தம் ஆசீர்வதிக்கப்பட்டான்.

ஏனோஸ் 1:3, 5–8

படம்
ஏனோஸ் இரவில் ஜெபித்தல்

இந்த மகிழ்ச்சியை நேபியர்களும் பெற வேண்டுமென்று ஏனோஸ் விரும்பினான். அவன் தொடர்ந்து ஜெபித்தான். நேபியர்களும் அதே மகிழ்ச்சியை உணரும்படி கர்த்தரிடம் அவன் வேண்டினான்.

ஏனோஸ் 1:9

படம்
ஏனோஸ் மகிழ்ச்சியாக இருத்தல்

கர்த்தர் ஏனோஸிடம் நேபியர்கள் தம் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் அவர்களுடன் இருப்பேன் என்று கூறினார். ஏனோஸ் இதைக் கேட்டபோது, ​​கர்த்தர் மீதான அவனுடைய விசுவாசம் மேலும் பலமடைந்தது.

ஏனோஸ் 1:10–11

படம்
தங்கத் தகடுகளின் மேல் ஏனோஸ் எழுதுதல்

ஏனோஸ் மீண்டும் ஜெபித்தான். லாமனியர்களை ஆசீர்வதிக்குமாறும், தகடுகளில் எழுதப்பட்டதைப் பாதுகாக்குமாறும் கர்த்தரிடம் அவன் கேட்டான். லாமனியர்கள் தகடுகளைப் படித்து கர்த்தரை நம்ப வேண்டும் என்று அவன் விரும்பினான். லாமானியர்கள் ஒரு நாள் எழுதியவைகளைப் படிப்பார்கள் என்று கர்த்தர் ஏனோஸுக்கு வாக்குறுதி அளித்தார்.

ஏனோஸ் 1:11–17