Scripture Stories
ஒலிவ மரங்கள்


“ஒலிவ மரங்கள்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

யாக்கோபு 5–6

ஒலிவ மரங்கள்

கர்த்தரின் மக்கள் மீது அவரின் அன்பு

படம்
யாக்கோபு பேசும்போது ஒலிவ மரங்களின் படம் காட்டப்பட்டுள்ளது

யாக்கோபு கர்த்தரின் தீர்க்கதரிசி. கர்த்தர் தம் மக்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை நேபியர்களுக்கு போதிக்க விரும்பினார். யாக்கோபு அவர்களுக்கு ஒலிவ மரங்களின் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிய கதையைச் சொன்னான். திராட்சைத் தோட்டத்தின் எஜமானனும் அவருடைய வேலைக்காரர்களும், இணைந்து திராட்சைத் தோட்டத்தைப் பராமரிக்க வேலை செய்தார்கள்

யாக்கோபு 5:1-4, 7; 6:4-5

படம்
திராட்சைத் தோட்டத்தின் எஜமானன் ஒலிவ மரத்தின் அருகே மண்வெட்டியைக் கொண்டு தோண்டுதல்

எஜமானனிடம் ஒரு விசேஷமான ஒலிவமரம் இருந்தது, அது நல்ல கனிகளைக் கொடுத்தது. இந்த மரம் கர்த்தரின் மக்கள் அல்லது இஸ்ரவேல் குடும்பத்தைப் போன்றது என்று யாக்கோபு கூறினான். மக்களின் கிரியைகள் போல் கனி இருந்தது. எஜமானன் அந்த மரத்தை அதிகமாகக் கவனித்துக் கொண்டார். அதன் வேர்களைப் போஷித்து அதன் கிளைகளை கத்தரித்து வளர உதவினார். வாழ்வதற்குத் தேவையானதைக் கொடுத்தார்

யாக்கோபு 5:1-3, 5; 6:1,7

படம்
ஒலிவ மரம் இறக்கத் தொடங்குதல்

சிறிது காலம் கழித்து, அவரது விசேஷித்த மரம் இறக்கத் தொடங்கியது ஒரு சில கிளைகளே ஆரோக்கியமாக இருந்தன. இது எஜமானனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அது நல்ல கனியாக வளர வேண்டும் என்று அவர் விரும்பினார்.

யாக்கோபு 5:3, 6-8

படம்
திராட்சைத் தோட்டத்தின் எஜமானன் ஆரோக்கியமான கிளைகளை வெட்டி அகற்றுதல்.

ஆரோக்கியமான கிளைகளைக் காப்பாற்ற, அவற்றை அகற்றி மற்ற மரங்களுடன் எஜமானன் இணைத்தார். பின்னர் மற்ற மரங்களின் ஆரோக்கியமான கிளைகளை அதற்கு மாற்றினான்.

யாக்கோபு 5:7-14

படம்
திராட்சைத் தோட்டத்தின் எஜமானனும் வேலையாட்களும் ஒலிவ மரங்களைப் பராமரித்தல்

நீண்ட காலம் கழிந்தது எஜமானனும் வேலையாட்களும் அடிக்கடி திராட்சைத் தோட்டத்திற்கு வந்தனர். அவர்கள் எஜமானனின் விசேஷமான மரத்தைப் பராமரித்தனர். திராட்சைத் தோட்டம் முழுவதும் விசேஷித்த கிளையுடன் பரவியிருந்த மரங்களையும் அவர்கள் கவனித்துக் கொண்டனர். பெரும்பாலான விளைந்த கனிகள் நன்றாக இருந்தன நல்ல கனி எஜமானனையும் வேலையாட்களையும் மகிழ்வித்தது.

யாக்கோபு 5:15-29,31

படம்
திராட்சைத் தோட்டத்தின் எஜமானன் ஒலிவ மரங்களைப் பற்றி வேலைக்காரனிடம் பேசுதல்.

சிறிது காலம் கழித்து, ஒவ்வொரு மரமும் அதிகக் கனிகள் கொடுத்தன. ஆனால் இப்போது அனைத்து கனிகளும் மோசமாக இருந்தது. எஜமானன் மிகவும் வருத்தப்பட்டார். அவர் தனது திராட்சைத் தோட்டத்தையோ அதன் கனிகளையோ இழக்க விரும்பவில்லை! அவர் தனது மரங்கள் வளர கடினமாக உழைத்தார். வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தார். வேலைக்காரனுடன் பேசி, தொடர்ந்து முயற்சி செய்ய முற்பட்டார்.

யாக்கோபு 5:29-51

படம்
வேலையாள் ஆரோக்கியமான கிளையை வெட்டி அகற்றுகிறான்.

தன் திராட்சைத் தோட்டத்தைக் காப்பாற்ற, அந்தச் விசேஷித்த மரத்திலிருந்து அகற்றிய கிளைகளைச் சேகரிக்கச் சொன்னார் எஜமானன். அவைகளை மீண்டும் விசேஷித்த மரத்தில் இணைக்கச் சொன்னார்.

யாக்கோபு 5:51-60

படம்
ஆரோக்கியமான கிளைகள் வெவ்வேறு ஒலிவ மரங்களுடன் இணைக்கப்பட்டன.

எஜமானன் தம் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யும் கடைசி காலம் இதுவாகும். உதவிக்கு மற்ற வேலைக்காரர்களை அழைத்தார். அனைவரும் ஒன்றிணைந்து கிளைகளை ஒன்று கூட்டி சேர்த்தனர்.

யாக்கோபு 5:61-72

படம்
ஆரோக்கியமான கனிகள் கொண்ட ஒலிவ மரக் கிளைகள்

எல்லா மரங்களையும் பராமரித்தார்கள் அவர்கள் கெட்ட கிளைகளை அகற்றி நல்லவற்றை வைத்திருந்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு, எஜமானின் விசேஷித்த மரம் மீண்டும் நல்ல கனிகளைக் கொடுத்தது. மற்ற மரங்களும் விசேஷ மரத்தின் கனிகளைப் போலவே நல்ல கணிகளைக் கொடுத்தன. எஜமானன் மகிழ்ச்சி அடைந்தார். அவருடைய மரங்கள் பாதுகாக்கப்பட்டன! அவைகள் அனைத்தும்ம் அவர்களுக்கு கிடைக்கவேண்டுமென அவர் விரும்பிய கனியை வளர்த்தன.

யாக்கோபு 5:73-75

படம்
திராட்சைத் தோட்டத்தின் எஜமானனும் வேலையாட்களும் ஒரு பெரிய ஆரோக்கியமான ஒலிவ மரத்தைப் பார்த்தல்.

எஜமானன் வேலையாட்களுக்கு நன்றி கூறினார். கடினமாக உழைத்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்ததற்காக அவர்கள் பாக்கியவான்கள் என்று அவர்களிடம் கூறினார். அவர் அவர்களுடன் கனிகளைப் பகிர்ந்து கொண்டார், அது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. பலகாலம் எஜமானன் கனியை அனுபவித்து மகிழ்ந்தார்.

யாக்கோபு 5:75-77

படம்
இயேசு கிறிஸ்துவின் படம் காட்டப்பட்ட பொழுதில் யாக்கோபு பேசுதல்

யாக்கோபு ஒலிவ மரங்களின் கதையை சொல்லி முடித்தான். திராட்சைத் தோட்டத்தின் எஜமானன் தம் மரங்களைக் கவனித்துக்கொள்வது போல் கர்த்தர் அவர்களைக் கவனித்துக்கொள்கிறார் என்பதை அவன் மக்களுக்குப் போதித்தான். யாக்கோபு அனைவரையும் மனந்திரும்பி கர்த்தரிடம் நெருங்கி வரும்படி கேட்டுக் கொண்டான். கர்த்தரை நேசிக்கவும் சேவை செய்யவும் அவன் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான், ஏனென்றால் கர்த்தர் எப்போதும் அவர்களுக்கு உதவுகிறார்.

யாக்கோபு 6:1-5, 7, 11