Scripture Stories
இளம் இராணுவம்


“இளம் இராணுவம்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

ஆல்மா 53; 56–57

இளம் இராணுவம்

தேவனை நம்பிய மகன்கள்

படம்
இளம் வீரர்கள் கேடயங்கள், ஈட்டிகள் மற்றும் வாள்களை வைத்திருத்தல்

நேபியர்கள் லாமானியர்களுடன் போரில் ஈடுபட்டிருந்தனர், அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. அந்தி-நேபி-லேகியர் உதவ விரும்பினர். ஆனால் போரிட மாட்டோம் என்று கர்த்தரிடம் வாக்குக் கொடுத்திருந்தார்கள். அவர்களது இளம் மகன்களில் இரண்டாயிரம் பேர் அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை. அதற்கு பதிலாக, மகன்கள் தங்கள் குடும்பங்களை பாதுகாக்க போராடுவதாக உறுதியளித்தனர். இந்த மகன்கள் இளம் வீரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

ஆல்மா 53:8, 13–18, 22; 56:1–8

படம்
ஏலமன் இளம் வீரர்களை ஒரு நகரத்தை நோக்கி அழைத்துச் செல்கிறான்

இளம் வீரர்கள் ஏலமன் தீர்க்கதரிசியை தங்களை வழிநடத்தத் தேர்ந்தெடுத்தனர். பெரிய லாமானிய இராணுவத்துடன் ஒப்பிடும்போது அவர்கள் ஒரு சிறிய குழுவாக இருந்தனர். ஆனால் ஏலமனுக்கு தெரியும், இளம் வீரர்கள் நேர்மையானவர்கள், துணிச்சலானவர்கள், விசுவாசமிக்கவர்கள். ஏலமன் அவர்களை வழிநடத்திச் சென்றதால், அவர்கள் நேபியர்களுக்கு உதவச் சென்றனர்.

ஆல்மா 53:19–22; 56:9–10, 17, 19

படம்
இளம் வீரர்கள் நேபிய வீரர்களுடன் ஒரு கோட்டையைக் கட்டுதல், பெற்றோர்கள் உணவைக் கொண்டு வருதல்

நேபிய வீரர்கள் சோர்வாக இருந்தனர். ஆனால் இளம் போர்வீரர்கள் வந்தபோது, நேபியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இளம் இராணுவம் அவர்களுக்கு நம்பிக்கையையும் பலத்தையும் கொடுத்தது. ஒன்றாக, அவர்கள் லாமானியர்களை எதிர்த்துப் போராடத் தயாரானார்கள். இளம் வீரர்களின் பெற்றோரும் அவர்களுக்கு உணவு மற்றும் பொருட்களை கொண்டு வந்து உதவினார்கள்.

ஆல்மா 56:16–17, 19–20, 22, 27

படம்
நேபிய தலைவர்களும் இளம் வீரர்களும் கூடாரத்தில் சந்தித்தல்

லாமனியர்கள் பல நகரங்களைக் கைப்பற்றி, அவற்றில் தங்கள் படைகளை வைத்திருந்தனர். நேபிய தலைவர்கள் லாமனியர்களை நகரங்களில் ஒன்றை விட்டு வெளியேறச் செய்ய விரும்பினர். அவர்கள் ஒரு திட்டத்தை உருவாக்கி, இளம் வீரர்களிடம் உதவி கேட்டார்கள்.

ஆல்மா 56:18–30

படம்
லாமானிய இராணுவம் இளம் வீரர்களை நோக்கி ஆயுதங்களுடன் ஓடுதல்

இளம் வீரர்கள் அருகிலுள்ள நகரத்தில் வசிக்கும் நேபியர்களுக்கு உணவை எடுத்துச் செல்வது போல் நடித்தனர். லாமானியர்கள் சிறிய குழுவைக் கண்டதும், அவர்கள் தங்கள் நகரத்தை விட்டு வெளியேறி, இளம் வீரர்களைத் துரத்தினார்கள். அவர்களைப் பிடிப்பது எளிது என்று லாமானியர்கள் நினைத்தார்கள்.

ஆல்மா 56:30–36

படம்
இளம் வீரர்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்துச் செல்லுதல், ஒரு லாமானிய இராணுவம் அவர்களைப் பின்தொடர்தல், மற்றும் ஒரு நேபிய இராணுவம் லாமானிய இராணுவத்தைப் பின்தொடர்தல்

இளம் வீரர்கள் லாமானியர்களிடமிருந்து ஓடினர். பின்னர் ஒரு நேபிய இராணுவம் லாமனியர்களை துரத்தத் தொடங்கியது. லாமனியர்கள் நேபியர்கள் அவர்களை அடையும் முன் இளம் வீரர்களைப் பிடிக்க விரும்பினர். இளம் வீரர்கள் சிக்கலில் இருப்பதைக் கண்ட நேபியர்கள் அவர்களுக்கு உதவ வேகமாக அணிவகுத்துச் சென்றனர்.

ஆல்மா 56:36–41

படம்
ஒரு இளம் வீரன் மற்ற படைகளை பார்த்து கவலை அடைதல்

சிறிது நேரம் கழித்து, இளம் வீரர்களால் லாமானியர்களைப் பார்க்க முடியவில்லை. நேபியர்கள் லாமானியர்களை நெருங்கி சண்டையிடுகிறார்களா என்று அவர்கள் யோசிக்க ஆரம்பித்தனர்.

ஆல்மா 56:42–43

படம்
ஏலமன் தன் வாளை உயர்த்துதல்

ஏலமன் கவலைப்பட்டான். லாமானியர்கள் அவர்களைப் பிடிக்க முயற்சிக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். அவர்கள் லாமானியர்களுடன் சண்டையிடுவார்களா என்று அவன் தனது இளம் வீரர்களைக் கேட்டான்.

ஆல்மா 56:43–44

படம்
இளம் வீரர்கள் தங்கள் வாள்களை உயர்த்துதல்

இளம் வீரர்கள் தங்கள் தாய்மார்கள் கற்பித்ததை நினைவு கூர்ந்தனர். அவர்களின் தாய்மார்கள் தேவனை நம்புவதற்கும், சந்தேகப்படாமல் இருப்பதற்கும் கற்றுக் கொடுத்தார்கள், ஏனென்றால் அவர் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பார். இந்த மகன்கள் தேவனை நம்பினர், மேலும் தங்கள் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கான வாக்குறுதியைக் காப்பாற்ற விரும்பினர். ஏலமனிடம் சென்று போராடத் தயார் என்று சொன்னார்கள்.

ஆல்மா 56:46–48

படம்
ஏலமன் இளம் வீரர்களுடன் அணிவகுத்துச் செல்லுதல்

ஏலமன் அவர்களின் தைரியத்தைக் கண்டு வியந்தான். லாமானியர்களுடன் போரிட அவர்களை மீண்டும் வழிநடத்திச் சென்றான்.

ஆல்மா 56:45, 49

படம்
ஏலமனும் இளம் வீரர்களும் ஆயுதங்களுடன் மலைப்பகுதியில் நிற்றல்

லாமானியர்களும் நேபியர்களும் சண்டையிடுவதை இளம் வீரர்கள் பார்த்தனர். நேபியர்கள் சோர்வாக இருந்தனர். இளம் வீரர்கள் வந்தபோது அவர்கள் தோற்கவிருந்தனர்.

ஆல்மா 56:49–52

படம்
லாமானிய வீரர்கள் பயத்துடன் பார்த்தல்

இளம் வீரர்கள் தேவ பலத்துடன் போரிட்டனர். லாமானியர்கள் அவர்களுக்குப் பயந்து போரை நிறுத்தினார்கள். இளம் வீரர்கள் போரில் வெற்றி பெற உதவினார்கள்!

ஆல்மா 56:52–54, 56

படம்
ஏலமன் இளம் வீரர்களிடம் கையை நீட்டுதல்

போரில், பல நேபியர்களும் லாமானியர்களும் இறந்தனர். ஏலமன் தனது இளம் வீரர்களில் சிலர் இறந்திருக்கலாம் என்று கவலைப்பட்டான். ஆனால் போருக்குப் பிறகு, ஏலமன் அனைவரையும் எண்ணினான். இளம் வீரர்கள் யாரும் கொல்லப்படாததைக் கண்டு அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். தேவன் அவர்களைப் பாதுகாத்தார்.

ஆல்மா 56:55–56

படம்
இளம் வீரர்கள் காயமடைந்து அனைவரும் ஒன்றாக நிற்றல்

அதிகமான மகன்கள் இளம் வீரர்களுடன் சேர்ந்தனர். அவர்கள் நேபியர்கள் போரிட உதவிக் கொண்டே இருந்தார்கள். இந்த மற்ற போர்களில், இளம் வீரர்கள் அனைவரும் காயமடைந்தனர், ஆனால் அவர்களில் யாரும் மரிக்கவில்லை. தாய்மார்கள் கற்பித்ததை அவர்கள் நினைவு கூர்ந்தனர். அவர்கள் தேவனை நம்பினார்கள், அவர் அவர்களைப் பாதுகாத்தார்.

ஆல்மா 57:6, 19–27; 58:39–40