Scripture Stories
ராணியின் விசுவாசம்


“ராணியின் விசுவாசம்”மார்மன் புஸ்தக கதைகள் (2023)

“ராணியின் விசுவாசம்”மார்மன் புஸ்தக கதைகள்

ஆல்மா 18-19

ராணியின் விசுவாசம்

கிறிஸ்துவில் சந்தோஷத்தைக் காணுதல்

படம்
ராணியின் கணவர் தரையில் விழுதல்.

லாமானியர்களின் ராணி தனது கணவர் லாமோனி ராஜாவுடன் ஆட்சி செய்தாள். ராஜா, அம்மோன் என்ற நேபியரிடம் கர்த்தரைப் பற்றி போதிக்குமாறு கூறினான். அம்மோன் கூறியதை ராஜா நம்பினான். ராஜா முழங்கால்படியிட்டு கர்த்தரிடம் மன்னிப்புக் கோரினான். ஜெபித்த பின்பு, ​​​​ராஜா பூமியில் விழுந்தான். அவன் மரித்ததைப்போல தோற்றமளித்தது.

ஆல்மா 18:21, 24–42

படம்
ராணி விழுந்த தன் கணவனைப் பார்த்தல்

ராஜாவின் வேலையாட்கள் அரசியிடம் அவனைக் கொண்டு சென்றனர். அவர்கள் அவனைப் படுக்கையில் கிடத்தினார்கள். இரண்டு இரவும் பகலும் அசையாமல் அங்கேயே கிடந்தான்

ஆல்மா 18:43

படம்
ராணி வேலைக்காரனிடம் பேசுதல்

அவ்வேளையில், ராணியும் அவளுடைய பிள்ளைகளும் மிகவும் சோகமாக இருந்தனர். அவர்கள் ராஜாவுடன் இருந்து அவனைப் பார்த்து அழுதனர். ராஜாவை அடக்கம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறினார்கள். ஆனால் ராணி முதலாவதாக அம்மோனிடம் பேச விரும்பினாள். அவனிடம் தேவ வல்லமை இருப்பதை அவள் அறிந்திருந்தாள். ராணியின் வேலைக்காரர்கள் அம்மோனை ராணியிடம் வரச் சொன்னார்கள்.

ஆல்மா 18:43; 19:1–3, 5

படம்
ராணி அம்மோனிடம் பேசுதல்

அம்மோன் தேவனின் தீர்க்கதரிசி என்று கேள்விப்பட்டதாக ராணி அவனிடம் கூறினாள். அவள் அம்மோனை ராஜாவைப் பார்க்குமாறு கூறினாள். ராஜா உயிருடன் இருப்பதை அம்மோன் அறிந்தான். தேவ வல்லமையே ராஜாவைத் தூங்க வைத்தது. அம்மோன் ராணியிடம் அவளின் கணவன் மறுநாள் எழுந்திருப்பானென்று கூறினான்.

ஆல்மா 19:3-8

படம்
ராணி தன் தலையை கணவன் மீது சரித்தாள்

ராணி அம்மோனை நம்பினாள் மற்றும் தேவன் மீது மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தாள். மறுநாள் கணவன் எழுந்திருப்பான் என்று நம்பினாள். மிகுந்த விசுவாசத்தினிமித்தம் அவள் ஆசீர்வதிக்கப்பட்டதாக அம்மோன் கூறினான். தனது சொந்த மக்களை விட ராணிக்கு அதிக விசுவாசம் இருப்பதாக கூறினான். ராணி இரவு முழுவதும் தன் கணவன் அருகிலேயே இருந்து அவனைக் கண்காணித்தாள்

ஆல்மா 19:9-11

படம்
ராணியின் கணவன் எழுந்ததால் அவள் மகிழ்ச்சியடைதல்.

மறுநாள், ராஜா எழுந்தான். தான் இயேசு கிறிஸ்துவை பார்த்ததாக அவன் ராணியிடம் கூறினான். ராணியும் ராஜாவும் இயேசு தங்களை எவ்வளவு நேசித்தார் என்பதை அறிந்து, மகிழ்ச்சியில் திளைத்தனர்.

ஆல்மா 19:12-13