Scripture Stories
அந்தி-நேபி-லேகியர்


“அந்தி-நேபி-லேகியர்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

ஆல்மா 23–27

அந்தி-நேபி-லேகியர்

எதிரிகளை நேசிக்கத் தேர்ந்தெடுத்தவர்கள்

படம்
அம்மோன் ஒரு மரத்தடியில் மக்களுக்கு கற்பித்தல்

பல லாமானியர்கள் அம்மோன் மற்றும் அவனது சகோதரர்களிடமிருந்து தேவனைப் பற்றி கற்றுக்கொண்டனர். இந்த லாமனியர்கள் கர்த்தரில் பலமான நம்பிக்கை கொண்டிருந்தனர் மற்றும் தேவனின் கட்டளைகளைப் பின்பற்றினர். அவர்கள் ஒரு புதிய பெயரை விரும்பினர், எனவே அவர்கள் தங்களை லாமானியர் என்பதற்குப் பதிலாக அந்தி-நேபி-லேகியர் என்று தங்களையே அழைத்துக் கொண்டனர்.

ஆல்மா 23:3–7, 16–17

படம்
அம்மோன் கற்பிப்பதைக் கேட்கும் குடும்பங்கள்

அந்தி-நேபி-லேகியர் தேவன் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக மாறினர். தாங்கள் செய்த கெட்ட காரியங்களுக்காக மனந்திரும்பினார்கள். தேவன் தங்களை நேசிப்பதையும் மன்னிப்பதையும் அவர்கள் அறிந்தார்கள்.

ஆல்மா 24:8–14

படம்
அந்தி-நேபி-லேகியர் ஆயுதங்களை ஒரு திறந்த குழிக்குள் வீசுதல்

லாமானியர்கள் கோபப்பட்டு, அந்தி-நேபி-லேகியரைத் தாக்கத் தயாராகி வந்தனர். சண்டையிடுவதற்குப் பதிலாக, அந்தி-நேபி-லேகியர் தேவனிடம் வாக்குறுதி அளித்தனர். இனி மக்களை துன்புறுத்த மாட்டோம் என்றார்கள். இதைக் காட்ட அவர்கள் ஆயுதங்களை புதைத்தனர். அவர்கள் தங்கள் எதிரிகளை காயப்படுத்துவதற்கு அல்லது கொலை செய்வதற்குப் பதிலாக அவர்களை நேசிக்கத் தேர்ந்தெடுத்தனர்.

ஆல்மா 24:1–19; 26:31–34

படம்
கோபமான லாமானியர்கள் ஆயுதத்தை வைத்திருத்தல்

தேவனை நம்பாத லாமானியர்கள் அந்தி- நேபி-லேகியர்களை தாக்கினர்.

ஆல்மா 24:20

படம்
இரண்டு அந்தி-நேபி-லேகியர் முழங்கால்படியிட்டு ஜெபம் செய்தல்

தாங்கள் கொல்லப்பட்டால், தாங்கள் தேவனுடன் வாழ்வோம் என்று அந்தி-நேபி-லேகியர் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்கள் தேவனுக்கு அளித்த வாக்குறுதியைக் காத்துக் கொண்டனர், லாமனியர்களுடன் சண்டையிடவில்லை.

ஆல்மா 24:16, 21

படம்
லாமானியர்கள் தாக்குவதை நிறுத்துதல்

சண்டையிடுவதற்குப் பதிலாக, அந்தி-நேபி-லேகியர் ஜெபம் செய்தனர். லாமனியர்கள் இதைக் கண்டதும், அவர்களில் பலர் தாக்குவதை நிறுத்தினர். மக்களைக் கொன்றதற்காக அவர்கள் வருத்தப்பட்டனர். அந்த லாமானியர்களும் மக்களை மீண்டும் ஒருபோதும் காயப்படுத்த மாட்டார்கள். அவர்கள் அந்தி-நேபி-லேகியருடன் சேர்ந்தனர்.

ஆல்மா 24:21–27; 25:13–16

படம்
அம்மோன் மற்றும் அந்தி-நேபி-லேகியர் பயணம் செய்தல்

காலம் செல்லச் செல்ல, அதிகமானோர் தாக்கினர். அம்மோனும் அவனது சகோதரர்களும் அந்தி-நேபி-லேகியர்கள் துன்பப்படுவதைப் பார்த்து வருத்தப்பட்டனர். அவர்கள் ராஜாவிடம் தனது மக்களை நேபியர்களுடன் வாழ அழைத்துச் செல்லும்படி கேட்டார்கள். கர்த்தர் விரும்பினால் செல்வோம் என்று ராஜா கூறினான். அம்மோன் ஜெபித்தான். கர்த்தர் அவர்கள் போகவேண்டும் என்றும், அவர்களைப் பாதுகாப்பதாகவும் சொன்னார்.

ஆல்மா 27:2–15

படம்
நேபியர்கள் அந்தி-நேபி-லேகி மக்களை வாழ்த்துதல்

நேபியர்கள் அந்தி-நேபி-லேகியருக்கு நிலத்தைக் கொடுத்து அவர்களைப் பாதுகாத்தனர். பதிலுக்கு, அந்தி-நேபி-லேகியர் நேபியர்களுக்கு உணவு கொடுத்தனர். அந்தி-நேபி-லேகியர் பெரும் விசுவாசம்கொண்டு தேவனை நேசித்தார்கள். அவர்கள் எல்லோரிடமும் நேர்மையாக இருந்தார்கள் மற்றும் ஒருபோதும் சண்டையிட மாட்டோம் என்ற தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றினர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் விசுவாசமாக இருந்தனர்.

ஆல்மா 27:20–30