Scripture Stories
கிதியோன், ஆல்மா, மற்றும் நிகோர்


“கிதியோன், ஆல்மா, மற்றும் நிகோர்”மார்மன் புஸ்தக கதைகள் (2023)

“கிதியோன், ஆல்மா, மற்றும் நிகோர்”மார்மன் புஸ்தக கதைகள்

ஆல்மா 1

கிதியோன், ஆல்மா, மற்றும் நிகோர்

தேவனின் வார்த்தைகளால் சத்தியத்தைப் பாதுகாத்தல்

படம்
இளைய ஆல்மா தன் தந்தைக்கு செவி கொடுத்தல்

நேபியர்கள் தங்கள் தலைமை நியாயாதிபதிபாய் இளைய ஆல்மாவைத் தேர்ந்தெடுத்தனர். ஆல்மா சபையின் பிரதான ஆசாரியனாகவும் இருந்தான்.

மோசியா 29:41-44

படம்
நிகோர் வானத்தைச் சுட்டிக்காட்டுதல்

நிகோர் என்ற மனுஷன் தேவனுடைய வார்த்தை என்று அவன் நம்பக்கூடியதை மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினான். ஆனால் மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படியவோ மனந்திரும்பவோ தேவையில்லை என்று அவர்களுக்குப் போதித்தான்.

ஆல்மா 1:2–4, 15

படம்
மக்கள் நிகோரிடம் பணத்தை கொண்டு வருதல்

நிகோர் கூறியதை அநேகர் விரும்பினர் மற்றும் நம்பினர். பணம் கொடுத்து, அவனை மக்கள் பாராட்ட வேண்டுமென்று விரும்பினான். மற்றவர்களை விட தான் சிறந்தவன் என்று நினைத்தான். அவன் தனது சொந்த சபையை உருவாக்கினான், அநேகர் அவனுக்கு செவிசாய்த்தனர்.

ஆல்மா 1:3, 5-6

படம்
நிகோர் கிதியோனுடன் விவாதித்தல்

ஒரு நாள், நிகோர் கிதியோன் என்ற முதியவரை சந்தித்தான். கிதியோன் தேவனின் சபையில் ஆசிரியராக இருந்தான் மற்றும் அநேக நன்மைகளைச் செய்திருந்தான். மக்கள் சபையை விட்டு விலக வேண்டும் என்று நிகோர் விரும்பினான், எனவே கிதியோனுடன் விவாதித்தான். நிகோர் சத்தியத்தை போதிக்கவில்லை என்பதைக் காட்ட கிதியோன் தேவனின் வார்த்தைகளைப் பயன்படுத்தினான். நிகோர் கோபமடைந்தான்! தன் வாளால் கிதியோனைக் கொன்றான்.

ஆல்மா 1:7–9, 13

படம்
நிகோர் ஆல்மாவுடன் விவாதித்தல்

நிகோரை நியாயந்தீர்க்க, ஆல்மாவிடம் மக்கள் அழைத்துச் சென்றனர். தான் செய்ததை நியாயப்படுத்த நிகோர் முயன்றான். தான் தண்டிக்கப்பட அவன் விரும்பவில்லை

ஆல்மா 1:10-11

படம்
ஆல்மா தீர்ப்பு வழங்குதல்

நிகோரின் போதனைகள் தவறானவை என்றும் மக்களை பாதிக்கலாம் என்றும் ஆல்மா கூறினான். ஆல்மா சட்டத்தைப் பின்பற்றினான் நிகோர் கிதியோனைக் கொன்றதால், நிகோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆல்மா 1:12-15

படம்
ஆல்மா மக்களைப் பற்றி சிந்தித்தல்.

இறப்பதற்கு முன்பு, தான் பொய் சொன்னதாக நிகோர் மக்களிடம் கூறினான். அவன் தேவனுடைய வார்த்தையைப் போதிக்கவில்லை. நிகோர் தான் தவறு செய்ததாகச் சொன்னாலும், பலர் அவனைப் பின்பற்றினார்கள். புகழையும் பணத்தையும் பெறுவதற்காக மக்களிடம் பொய் கூறினார்கள். ஆனால் மற்றவர்கள் ஆல்மாவின் பேச்சைக் கேட்டார்கள். அவர்கள் ஏழைகளைக் கவனித்துக் கொண்டனர் மற்றும், தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடித்தனர்

ஆல்மா 1:15–16, 25–30