Scripture Stories
லியஹோனா மற்றும் உடைந்த வில்


“லியஹோனா மற்றும் உடைந்த வில்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

1 நேபி 16

லியஹோனா மற்றும் உடைந்த வில்

கர்த்தரின் உதவியை நாடுதல்

படம்
நெருப்பைச் சுற்றி குடும்பங்கள் அமர்ந்திருத்தல்

லேகி மற்றும் இஸ்மவேலின் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வனாந்தரத்தில் பயணம் செய்தனர். கர்த்தர் அவர்களை தேசத்தின் சிறந்த பகுதிகள் வழியாக நடத்தினார். அவர்கள் வழியில் வேட்டையாடி உணவு சேகரிக்க வேண்டியிருந்தது அது ஒரு கடினமான பயணம்.

1 நேபி 16:14; 17:1,14

படம்
சூரிய உதயத்தை லேகி பார்த்தல்

அவர்கள் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் குடும்பங்களை நல்ல தேசத்திற்கு அழைத்துச் செல்வதாக கர்த்தர் வாக்குறுதி அளித்தார். நிலத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் அவர்களை வழிநடத்துவார்.

1 நேபி 2:20; 10:13; 17:13-14

படம்
லேகி லியஹோனாவை வைத்திருத்தல்

ஒரு நாள் காலை, லேகி தனது கூடாரத்திற்கு வெளியே ஒரு பித்தளை உருண்டையைக் கண்டு ஆச்சரியப்பட்டான். அந்த உருண்டை லியஹோனா என்று அழைக்கப்பட்டது லியஹோனாவின் உள்ளே, ஒரு அம்பு குழு பயணிக்க வேண்டிய வழியை சுட்டிக்காட்டியது. சில நேரங்களில் அவர்கள் லியஹோனாவில் எழுதப்பட்ட கர்த்தரின் செய்திகளைக் கண்டனர். இப்படித்தான் கர்த்தர் அவர்களை வழிநடத்தினார்.

1 நேபி 16:10,16, 26-29; ஆல்மா 37:38

படம்
உடைந்த வில்லுடன் நேபி மற்றும் லாமனும் லெமுவேலும் குறை கூறுதல்

ஒரு நாள் நேபி வேட்டையாடிக்கொண்டிருந்தபோது, ​​அவனது உருக்கு வில் முறிந்தது. வில் இல்லாமல் குடும்பத்தினருக்கு உணவு கிடைக்காது. நேபியின் சகோதரர்கள் அவன் மீதும் கர்த்தர் மீதும் கோபம் கொண்டார்கள்.

1 நேபி 16:18-21

படம்
உடைந்த வில்லைப் பிடித்துக் கொண்டிருக்கும் நேபி, லேகி வருந்துதல்

அவர்கள் அனைவரும் மிகவும் சோர்வாகவும் பசியுடனும் இருந்தனர். அவர்களில் சிலர் வருத்தமடைந்து குறை கூறினர். அவர்கள் பட்டினி கிடக்கவேண்டுமென்று பயந்தார்கள். லேகியும் கர்த்தரிடம் முறையிட்டான்.

1 நேபி 16:19–22, 35

படம்
சுத்தியலையும் உளியையும் நேபி வைத்திருத்தல்

நேபி மரத்தினாலான ஒரு புதிய வில்லையும் ஒரு அம்பையும் செய்தான். உணவைக் கண்டுபிடிக்க கர்த்தர் உதவுவார் என்ற விசுவாசம் அவனுக்கு இருந்தது.

1 நேபி 16:23.

படம்
லேகியும் நேபியும் லியஹோனாவைப் பார்த்தல்

வேட்டையாட எங்கு செல்ல வேண்டும் என்று நேபி லேகியிடம் கேட்டான். குறை கூறியதற்காக லேகி வருத்தப்பட்டான். அவன் மனந்திரும்பி கர்த்தரிடம் உதவி கேட்டான். லியஹோனாவைப் பார்க்கும்படி கர்த்தர் லேகியிடம் கூறினார். அதில் ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. கர்த்தரில் விசுவாசம் வைத்து, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் மட்டுமே லியஹோனா வேலை செய்தது என்பதை குடும்பங்கள் அறிந்துகொண்டன.

1 நேபி 16:23-29

படம்
வேட்டையாடிய ஒரு விலங்கை நேபி சுமந்து செல்வதை லேகியின் குடும்பத்தினர் பார்த்துக்கொண்டிருத்தல்.

அவர்களின் பயணங்களின் போது அவர்களுக்கு உதவுவதற்காக கர்த்தர் சில சமயங்களில் லியஹோனாவின் செய்தியை மாற்றினார். எங்கு வேட்டையாடுவது என்பதை அறிய லியஹோனா நேபிக்கு உதவியது. அவன் உண்பதற்காக உணவைத் திரும்பக் கொண்டு வந்தான், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். மனந்திரும்பி கர்த்தருக்கு நன்றி செலுத்தினர்.

1 நேபி 16:28-32