ஆலய பரிந்துரைக்கான நேர்காணல்கள்
ஆலயம் கர்த்தருடைய வீடு. ஆலயத்தில் பிரவேசித்து அங்கே நியமங்களில் பங்கேற்பது ஒரு புனிதமான சிலாக்கியமாகும். அதிகாரமுள்ள ஆசாரியத்துவ தலைவர்கள் வரையறுத்தவாறு ஆவிக்குரிய ரீதியில் ஆயத்தம் செய்து, தேவவனின் தராதரங்களின்படி வாழ முயலுபவர்களுக்கு இந்த சிலாக்கியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைத் தீர்மானிக்க, ஆசாரியத்துவத் தலைவர்கள் கீழேயுள்ள கேள்விகளைப் பயன்படுத்தி உறுப்பினரை நேர்காணல் செய்கிறார்கள்.
ஆலய பரிந்துரைக்கான நேர்காணல் கேள்விகள்
-
நித்திய பிதாவாகிய தேவன், அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவர் குறித்து நீங்கள் விசுவாசமும் சாட்சியமும் பெற்றிருக்கிறீர்களா?
-
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியிலும் உங்கள் இரட்சகரும் மீட்பருமாகிய அவருடைய பாத்திரம் குறித்து நீங்கள் சாட்சியம் பெற்றிருக்கிறீர்களா?
-
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் குறித்து நீங்கள் சாட்சியம் பெற்றிருக்கிறீர்களா?
-
நீங்கள் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவரை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும் மற்றும் ஆசாரியத்துவத்தின் சகல திறவுகோல்களையும் கையாள பூமியிலுள்ள ஒரே நபராகவும் ஆதரிக்கிறீர்களா?
நீங்கள் பிரதான தலைமையின் அங்கத்தினர்கள், மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் ஆதரிக்கிறீர்களா?
நீங்கள் சபையின் பிற பொது அதிகாரிகளையும், உள்ளூர் தலைவர்களையும் ஆதரிக்கிறீர்களா?
-
அவருக்கு முன்பாக சகல காரியங்களும் “சுத்தமாகச் செய்யப்படுவதாக” என கர்த்தர் சொல்லியிருக்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:41).
நீங்கள் உங்கள் சிந்தனையிலும் நடத்தையிலும் ஒழுக்க தூய்மைக்கு முயற்சிக்கிறீர்களா?
நீங்கள் கற்புடமை நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிகிறீர்களா?
-
நீங்கள் உங்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் பிறருடன் உங்களுடைய தனிப்பட்ட மற்றும் பொது நடத்தையில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பின்பற்றுகிறீர்களா?
-
நீங்கள் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைக்கு எதிரான எந்த போதனைகளையும், நடைமுறைகள் அல்லது கோட்பாட்டை ஆதரிக்கிறீர்களா அல்லது ஊக்குவிக்கிறீர்களா?
-
நீங்கள் வீ்ட்டிலும் சபையிலும் ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்கவும், உங்கள் கூட்டங்களில் பங்கேற்கவும், திருவிருந்திற்கு ஆயத்தப்படவும் தகுதியுடன் பங்கெடுக்கவும், சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணங்களுடனும் கட்டளைகளுடனும் இணக்கத்துடன் உங்கள் வாழ்க்கையை வாழ முயற்சிக்கிறீர்களா?
-
நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும் நேர்மையாயிருக்க நீங்கள் முயற்சிக்கிறீர்களா?
-
நீங்கள் முழு தசமபாகம் செலுத்துபவரா?
பதிலி ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல்களைச் செய்ய பரிந்துரை கோரும் புதிய உறுப்பினர்களுக்கு: நீங்கள் தசமபாகம் செலுத்த வேண்டும் என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிய விருப்பமாக இருக்கிறீர்களா?
-
நீங்கள் ஞானவார்த்தையை புரிந்துகொண்டு அதற்குக் கீழ்ப்படிகிறீர்களா?
-
(ஒரு பிள்ளை அல்லது இளைஞரை நேர்காணல் செய்யும் போது இந்த கேள்வி தவிர்க்கப்படுகிறது.) முன்னாள் வாழ்க்கைத்துணை அல்லது பிள்ளைகளுக்குப் பணம் கொடுக்கவேண்டியது அல்லது வேறு விதமான பொறுப்புகள் உங்களுக்கிருக்கிறதா?
ஆம், என்றால் அந்த பொறுப்புகளை தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்களா?
-
(தரிப்பித்தலைப் பெறாத உறுப்பினர் ஒருவரை நேர்காணல் செய்யும்போது இந்தக் கேள்வி தவிர்க்கப்படுகிறது.) நீங்கள் ஆலயத்தில் செய்த உடன்படிக்கைகளை நீங்கள் கைக்கொள்ளுகிறீர்களா?
-
(தரிப்பித்தலைப் பெறாத உறுப்பினர் ஒருவரை நேர்காணல் செய்யும்போது இந்தக் கேள்வி தவிர்க்கப்படுகிறது.) ஆயத்த நியமங்களில் அறிவுறுத்தியது போல வஸ்திரம் அணியும் உங்கள் பரிசுத்த சிலாக்கியத்தை நீங்கள் மதிக்கிறீர்களா? (ஒவ்வொரு அங்கத்தினருக்கும் கீழே உள்ள “ஆலய வஸ்திரம் அணிதல்” அறிக்கையை வாசியுங்கள்.)
-
உங்கள் மனந்திரும்புதலின் பகுதியாக ஆசாரியத்துவ அதிகாரமுள்ளவர்களுடன் தீர்க்கப்படவேண்டிய கடுமையான பாவங்கள் ஏதாவது உங்கள் வாழ்க்கையில் உண்டா?
-
கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவும் ஆலய நியமங்களில் பங்கேற்கவும் நீங்கள் தகுதியுள்ளவர் என உங்களை கருதுகிறீர்களா?
ஆலய வஸ்திரம் அணிதல்
பிரதான தலைமை வஸ்திரம் அணிவதற்கான கீழ் வரும் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
“பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வஸ்திரம் நமக்கு ஆலயத்தின் திரையை நினைவூட்டுகிறது, அத்திரை இயேசு கிறிஸ்துவின் அடையாளமாயிருக்கிறது. நீங்கள் உங்கள் வஸ்திரத்தை அணியும்போது, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த அடையாளத்தை அணிகிறீர்கள். அதை அணிவது அவரைப் பின்பற்ற வேண்டுமென்ற உங்களுடைய உள்ளார்ந்த ஒப்புக்கொடுத்தலின் புற வெளிப்பாடாயிருக்கிறது. இந்த வஸ்திரம் உங்களுடைய ஆலய உடன்படிக்கைகளின் நினைவுகூர்தலுமாயிருக்கிறது. உங்கள் வாழ்க்கை முழுவதுமாய் இந்த வஸ்திரத்தை இராப்பகலாய் அணிந்திருக்க வேண்டும். அந்த வஸ்திரத்தை அணிந்துகொண்டு நியாயமாய் செய்யமுடியாத செயல்களுக்காக அதை அகற்றும்போது, முடிந்தவரை உடனே அணியமுற்படவும். ஆயத்த நியமங்களில் அறிவுறுத்தப்பட்டபடி, வஸ்திரம் அணிவதற்கான அந்த பரிசுத்த சிலாக்கியம் உள்ளிட்ட உடன்படிக்கைகளை கைக்கொள்ளும்போது நீங்கள் இரட்சகரின் இரக்கத்தையும், பாதுகாப்பையும், பெலனையும், வல்லமையையும் அதிகமாக பெறுவீர்கள்.”
கூடுதல் வழிகாட்டுதல்
ஆசாரியத்துவ தலைவர் உறுப்பினருக்கு அவன் அல்லது அவளது பரிந்துரையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். அதை மற்றவருக்கு கடனாக கொடுக்கக்கூடாது மற்றும் அது தொலைந்தோ அல்லது திருடப்பட்டுப் போனாலோ உடனே அளித்தவரிடம் புகார் செய்யவேண்டும்.