நோய்வாய்ப்பட்டவருக்கு நிர்வகித்தல்
“கைகளை வைத்து” நோய்வாய்ப்பட்டவருக்கு நிர்வகித்தல் இரண்டு பகுதியாகும்: எண்ணை அபிஷேகம் மற்றும் அபிஷேகத்தை ஆசீர்வாதத்தால் முத்திரித்தல். பரிசுத்தப்படுத்தப்பட்ட எண்ணை கிடைக்கவில்லையென்றால், அபிஷேகம் இல்லாமல் ஒரு ஆசீர்வாதம் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தினால் கொடுக்கப்படலாம்.
எண்ணை அபிஷேகம் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவரால் செய்யப்படுகிறது. அவர்:
-
ஒரு துளி பரிசுத்தப்படுத்தப்பட்ட எண்ணையை நபரின் தலையில் வைக்கிறார்.
-
தன்னுடைய கையை லேசாக நபரின் தலையில் வைத்து நபரை அவன் அல்லது அவளின் முழுப் பெயரால் அழைக்கிறார்.
-
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தினால் செயல்படுவதாக கூறுகிறார்.
-
நோய்வாய்ப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவரின் அபிஷேகம் மற்றும் ஆசீர்வாதத்திற்காக பரிசுத்தப்படுத்தப்பட்ட எண்ணையை அவர் அபிஷேகம் செய்வதாக கூறுகிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முடிக்கிறார்.
அபிஷேகத்தை முத்திரிப்பதற்கு, ஒன்று அல்லது மேற்பட்ட மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் நபரின் தலையில் லேசாக கையை வைக்கிறார்கள். பின்னர் அபிஷேகத்தை முத்திரிப்பவர்:
-
நபரை அவன் அல்லது அவளின் முழுப் பெயரால் அழைக்கிறார்.
-
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தினால் அபிஷேகத்தை முத்திரிப்பதாக கூறுகிறார்.
-
ஆவியின் வழிநடத்துதலின்படி ஆசீர்வாத வார்த்தைகளை கொடுக்கிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முடிக்கிறார்.