நியமங்களும் பிரகடனங்களும்
கல்லறைகளை பிரதிஷ்டை பண்ணுதல்


கல்லறைகளை பிரதிஷ்டை பண்ணுதல்

ஒரு கல்லறையை பிரதிஷ்டை பண்ணுவதற்கு, ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்:

  1. ஜெபம் செய்வதுபோல் பரலோக பிதாவை அழைக்கிறார்.

  2. மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தினால் செயல்படுவதாக கூறுகிறார்.

  3. புதைகுழியை இறந்தவரின் உடல் ஓய்வெடுக்கும் இடமாக பிரதிஷ்டை பண்ணி அர்ப்பணிக்கிறார்.

  4. உயிர்த்தெழுதல் வரை (பொருத்தமான இடத்தில்) அந்த இடம் பரிசுத்தமடையவும் பாதுகாக்கப்படவும் ஜெபம் செய்கிறார்.

  5. குடும்பத்திற்கு ஆறுதலளிக்குமாறு பரலோகப் பிதாவிடம் கேட்கிறார், மற்றும் ஆவியின் வழிநடத்துதலின்படி எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்.

  6. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முடிக்கிறார்.

சபை உறுப்பினரின் உடல் தகனம் செய்யப்பட்டால், தலைமை தாங்கும் தலைவர் அஸ்தி வைத்திருக்கும் இடத்தை பிரதிஷ்டை பண்ண வேண்டுமா என்று தனது தீர்ப்பைப் பயன்படுத்தி முடிவெடுக்கிறார்.