நியமங்களும் பிரகடனங்களும்
எண்ணையை பரிசுத்தப்படுத்துதல்


எண்ணையை பரிசுத்தப்படுத்துதல்

நோய்வாய்ப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டவருக்கு அபிஷேகம் செய்வதற்குமுன் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர் ஒலிவ எண்ணையை பரிசுத்தப்படுத்தவேண்டும் (யாக்கோபு 5:14 பார்க்கவும்) மற்ற எந்த எண்ணையும் உபயோகிக்கலாகாது.

எண்ணையை பரிசுத்தப்படுத்த மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்:

  1. திறந்த கொள்கலனிலுள்ள ஒலிவ எண்ணையை பிடிக்கிறார்.

  2. ஜெபம் செய்வதுபோல் பரலோக பிதாவை அழைக்கிறார்.

  3. மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தினால் செயல்படுவதாக கூறுகிறார்.

  4. எண்ணையை பரிசுத்தப்படுத்துகிறார் (கொள்கலனை அல்ல) மற்றும் அதை நோய்வாய்ப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவரின் அபிஷேகம் மற்றும் ஆசீர்வாதத்திற்காக வைக்கிறார்.

  5. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முடிக்கிறார்.