ஆசாரியத்துவத்தை அருளுதல் மற்றும் அலுவலில் நியமித்தல்
ஆசாரியத்துவத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன: ஆரோனிய மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் ஒரு நபரின் மீது ஆசாரியத்துவம் அருளப்படும்போது, அவர் அந்த ஆசாரியத்துவத்தின் ஒரு அலுவலிலும் நியமிக்கப்படுகிறார். இந்த ஆசாரியத்துவங்களில் ஏதேனும் ஒன்று அருளப்பட்டபின்பு, அந்த மனுஷர் அந்த ஆசாரியத்துவத்தின் பிற அலுவல்களில் மட்டுமே நியமிக்கப்படவேண்டியதாயிருக்கிறது.
பிணையத் தலைவர் அல்லது மெல்கிசேதேக்கு. ஆசாரியத்துவம் தரித்திருப்பவர் அவருடைய வழிநடத்துதலின் கீழ் மூப்பரின் அலுவலுக்கு ஒரு மனுஷரை நியமிக்கலாம். மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் மட்டுமே அந்த வட்டத்தில் நிற்கலாம்.
பிணையத் தலைவர் அல்லது பிரதான ஆசாரியன் அவருடைய வழிநடத்துதலின் கீழ் பிரதான ஆசாரிய அலுவலுக்கு ஒரு மனுஷரை நியமிக்கலாம். பிரதான ஆசாரியன் மட்டுமே அந்த வட்டத்தில் நிற்கலாம்.
ஒரு ஆசாரியன் அல்லது மெல்கிசேதேக்கு. ஆசாரியத்துவம் தரித்திருப்பவர் ஒரு சகோதரரை உதவிக்காரர் அல்லது ஆசிரியர் அல்லது ஆசாரியர் அலுவலுக்கோ நியமிக்கலாம். அவர் ஆயரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆயரோ அல்லது அவர் நியமித்த ஒருவர் அங்கிருக்கவேண்டும்.
ஒரு ஆரோனிய ஆசாரியத்துவ நியமத்தில் பங்கேற்பதற்கு, ஒரு நபர் ஆசாரியராகவோ அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவராகவோ இருக்க வேண்டும்.
ஆசாரியத்துவ நியமத்தை அருளுவதற்கும் மற்றும் ஒரு நபரை ஆசாரியத்துவ அலுவலில் நியமிப்பதற்கு, ஒன்று அல்லது மேற்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் தங்கள் கைகளை லேசாக அந்த நபரின் தலையில் வைப்பார்கள். பின்னர் குரலாக செயல்படுபவர்:
-
அந்நபரை அவருடைய முழுப்பெயரால் அழைக்கிறார்.
-
நியமத்தை நிறைவேற்றுவதற்கான தன்னுடைய தனித்துவமான அதிகாரத்தை (ஆரோனிய அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம்) சொல்கிறார்.
-
முன்னரே அருளப்படாதிருந்தாலொழிய ஆரோனிய அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை அருளுகிறார்.
-
ஆரோனிய அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அலுவலில் அந்த நபரை நியமித்து அந்த அலுவலின் உரிமைகள், வல்லமைகள் மற்றும் அதிகாரங்களை வழங்குகிறார்.
-
ஆவியினால் வழிநடத்தப்பட்டபடி ஆசீர்வாதத்தின் வார்த்தைகளை கொடுக்கிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முடிக்கிறார்.
பொருத்தமான ஆசாரியத்துவம் அருளப்பட்ட ஒரு நபருக்கு ஆசாரியத்துவத்தின் அலுவலில் அவரை நியமிப்பதற்கு நியமம் செய்பவர் படி 3ஐ தவிர்க்கிறார்.