நியமங்களும் பிரகடனங்களும்
திடப்படுத்தல்


திடப்படுத்தல் மற்றும் பரிசுத்த ஆவியின் வரம்

ஒரு நபர் ஞானஸ்நானம் பெற்ற பின் அவன் அல்லது அவள், கைகளை வைப்பதால் சபை உறுப்பினராக திடப்படுத்தப்பட்டு பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுகிறார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:41; அப்போஸ்தலர் 19:1–6 பார்க்கவும்). இந்த இரண்டு நியமங்களும் பூர்த்தி செய்யப்பட்டு சரியாக பதிவு செய்யப்பட்ட பின்னர் அந்த நபர் சபையின் உறுப்பினராகிறார் (யோவான் 3:5; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 33:11; 3 நேபி 27:20 பார்க்கவும்).

ஆயத்தின் வழிகாட்டுதலின் கீழ், ஒன்று அல்லது பல மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தரித்திருப்பவர்கள் திடப்படுத்தலில் பங்கேற்கலாம். அவர்கள் தங்கள் கைகளை மெதுவாக அந்த நபரின் தலையில் வைப்பார்கள். பின்னர் குரலாக செயல்படுபவர்:

  1. நபரை அவன் அல்லது அவளது முழுப் பெயரால் அழைக்கிறார்.

  2. மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ அதிகாரத்தால் நியமம் செய்யப்படுகிறது என்று கூறுகிறார்.

  3. அந்நபரை பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினராக திடப்படுத்துகிறார்.

  4. “பரிசுத்த ஆவியைப் பெறுங்கள்” (“பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுங்கள்”) என்று அல்ல.

  5. ஆவியால் வழிநடத்தப்படுகிறபடி ஆசீர்வாதத்தின் வார்த்தைகளை கொடுக்கிறார்.

  6. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முடிக்கிறார்.