அழைப்புகளில் சேவை செய்ய உறுப்பினர்களை பணித்தல்
பெரும்பாலான சபை நிலைகளுக்கு அழைக்கப்பட்டு ஆதரிக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்த பதவிகளில் சேவை செய்வதற்கு பணிக்கப்படவேண்டும்.(யோவான் 15:16; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:11). பணித்தலின்போது, அந்த நபர் (1) அழைப்பில் செயல்பட அதிகாரம் மற்றும் (2) ஆவியின் வழிநடத்தல்படி ஆசீர்வாதத்தின் வார்த்தைகள் கொடுக்கப்படுகிறார்.
பிணையத் தலைவர்கள், ஆயர்கள், மற்றும் குழுமத் தலைவர்கள் பணிக்கப்படும்போது, தலைமையின் திறவுகோல்களை பெறுகிறார்கள். இருந்தாலும், திறவுகோல் என்ற வார்த்தை உறுப்பினர்களை மற்ற அழைப்புகளில் சேவை செய்வதற்கு நியமிக்கும்போது உபயோகப்படுத்தக்கூடாது, தலைமைகளின் ஆலோசகர்கள் உட்பட.
ஒன்று அல்லது மேற்பட்ட அதிகாரமுடைய மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் அந்நபரின் தலையில் லேசாக கையை வைக்கிறார்கள். பின்னர் குரலாக செயல்படுபவர்:
-
அந்த நபரை அவன் அல்லது அவளின் முழுப்பெயரால் அழைக்கிறார்.
-
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தினால் செயல்படுவதாக கூறுகிறார்.
-
பிணையம், தொகுதி, குழுமம் அல்லது வகுப்பின் அழைப்பிற்கு நபரை பணிக்கிறார்.
-
அந்த நபர் அவைகளை பெற வேண்டுமாயின் திறவுகோல்களை அருளுகிறார்.
-
ஆவியின் வழிநடத்துதலின்படி ஆசீர்வாத வார்த்தைகளை கொடுக்கிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முடிக்கிறார்.