நியமங்களும் பிரகடனங்களும்
திருவிருந்து


திருவிருந்து

தேவனை ஆராதிக்கவும் திருவிருந்தை புசிக்கவும் சபை உறுப்பினர்கள் ஓய்வு நாளில் சந்திக்கிறார்கள். இந்த நியமத்தின் போது, அவர்கள் இரட்சகரின் மாம்சம் மற்றும் இரத்தத்தின் பலியை நினைவுகூரவும் மற்றும் பரிசுத்த உடன்படிக்கைகளை புதுப்பிக்கவும் அப்பத்தையும் தண்ணீரையும் புசிக்கிறார்கள்.

  • ஆசாரியர்கள் மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் திருவிருந்தை ஆசீர்வதிக்கலாம்.

  • உதவிக்காரர்கள், ஆசிரியர்கள், ஆசாரியர்கள் மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் திருவிருந்தை பரிமாறலாம்.

  1. அப்பத்தை ஆசீர்வதிக்கும் நபர் முழங்கால்படியிட்டு அப்பத்திற்கான திருவிருந்து ஜெபத்தை சொல்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77 பார்க்கவும்).

    நித்திய பிதாவாகிய தேவனே, இந்த அப்பத்தில் பங்கெடுக்கிற யாவருடைய ஆத்துமாக்களுக்காகவும், அவர்கள் உம்முடைய குமாரனுடைய சரீரத்தின் நினைவுகூர்தலில் புசிக்கவும், அவருடைய ஆவியை அவர்கள் எப்பொழுதும் தங்களோடே கொண்டிருக்கும்படி, உம்முடைய குமாரனுடைய நாமத்தை தங்கள் மீது எடுத்துக்கொள்ளவும், அவரை எப்பொழுதும் நினைவுகூரவும், தங்களுக்கு அவர் கொடுத்திருக்கிற அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவும், மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று, நித்திய பிதாவாகிய தேவனே உம்மிடத்தில் சாட்சி பகரவும், இதை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்துமாறு உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக்கொள்கிறோம். ஆமென்.

  2. தண்ணீரை ஆசீர்வதிக்கும் நபர் முழங்கால்படியிட்டு தண்ணீருக்கான திருவிருந்து ஜெபத்தை சொல்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:79 ஐ பார்க்கவும்).

    நித்திய பிதாவாகிய தேவனே, இந்த தண்ணீரை பானம் பண்ணுகிற யாவருடைய ஆத்துமாக்களுக்காவும், அவர்களுக்காக சிந்தப்பட்ட உமது குமாரனுடைய இரத்தத்தின் நினைவுகூர்தலில் அவர்கள் இதைச் செய்யவும், அவருடைய ஆவியை அவர்கள் தங்களோடே கொண்டிருக்கும்படி அவரை எப்பொழுதும் நினைவுகூருகிறார்கள் என்று, நித்திய பிதாவாகிய தேவனே, உம்மிடத்தில் அவர்கள் சாட்சி பகரவும், இதை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்துமாறு, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக்கொள்கிறோம். ஆமென்.