வீடுகளை பிரதிஷ்டை பண்ணுதல்
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தினால் சபை உறுப்பினர்கள் தங்கள் வீடுகளை பிரதிஷ்டை பண்ணலாம். ஒரு வீட்டை பிரதிஷ்டை பண்ணுவதற்கு ஒரு மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்:
-
ஜெபம் செய்வதுபோல் பரலோக பிதாவை அழைக்கிறார்.
-
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தினால் செயல்படுவதாக கூறுகிறார்.
-
பரிசுத்த ஆவியின் இருப்பிடமாக வீட்டை ஒரு பரிசுத்தமான இடம் என்று பிரதிஷ்டை செய்கிறார் மற்றும் ஆவியின் வழிநடத்துதலின்படி மற்ற வார்த்தைகளை கொடுக்கிறார்.
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முடிக்கிறார்.