நியமங்களும் பிரகடனங்களும்
பிள்ளைகளுக்கு பெயர் சூட்டி ஆசீர்வதித்தல்


பிள்ளைகளுக்கு பெயர் சூட்டி ஆசீர்வதித்தல்

பெற்றோர்கள் இருக்கும் தொகுதியில் நடக்கும் உபவாசம் மற்றும் சாட்சிக் கூட்டத்தில் அவர்களுடைய பிள்ளைகள் பெயர் சூட்டப்பட்டு ஆசீர்வதிக்கப்படுவார்கள். பிள்ளையின் ஆசீர்வாதத்திற்கான வழக்கமான நேரம் மற்றும் இடத்தின் விதிவிலக்குகள் ஆயரால் அங்கீகரிக்கப்படவேண்டும்.

பிள்ளைக்கு பெயர் சூட்டி ஆசீர்வதிக்க மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் ஆயரின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு வட்டத்தில் கூடுகிறார்கள். அவர்கள் பிள்ளையை ஏந்தி, அல்லது ஒரு பெரிய பிள்ளையின் தலையில் மெதுவாக கைகளை வைப்பார்கள். பிறகு குரலாக செயல்படுபவர்

  1. ஜெபம் செய்வதுபோல் பரலோக பிதாவை அழைக்கிறார்.

  2. மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ அதிகாரத்தினால் ஆசீர்வாதம் நிறைவேற்றப்படுகிறது என்று சொல்கிறார்.

  3. பிள்ளைக்கு ஒரு பெயர் கொடுக்கிறார்.

  4. பிள்ளையை அழைக்கிறார்.

  5. ஆவியின் வழிகாட்டுதலின்படி பிள்ளைக்கு ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறார்.

  6. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முடிக்கிறார்.