நியமங்களும் பிரகடனங்களும்
ஞானஸ்நானம்


ஞானஸ்நானம்

ஒரு நபருக்கு சபையில் உறுப்பினராவதற்கும் பரிசுத்த ஆவியை பெறுவதற்கும் அதிகாரம் உடையவரால் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுவது அவசியம். மேன்மையடைதலை நாடும் அனைவரும் இந்த நியமங்களைப் பெறுவதன் மூலம் இரட்சகரின் உதாரணத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

ஞானஸ்நான நியமம் ஆசாரியர் அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தரித்திருப்பவரால் செய்யப்படுகிறது.

தலைமை தாங்கும் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சாட்சிகள் ஒவ்வொரு ஞானஸ்நானமும் முறையாக நிறைவேற்றப்படுகிறதா என உறுதி செய்கிறார்கள். ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட உறுப்பினர்களான பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் உட்பட சாட்சிகளாக சேவை செய்யலாம்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:73 ல் கொடுக்கப்பட்டுள்ளபடி வார்த்தைகள் சரியாக பேசப்படவில்லை என்றால் ஞானஸ்நானம் மீண்டும் செய்யப்படவேண்டும். நபரின் உடலோ, தலைமுடியோ, அல்லது ஆடையோ முழுவதுமாக மூழ்கவில்லையென்றாலும் அது மீண்டும் செய்யப்படவேண்டும்.

ஞானஸ்நான நியமத்தை நிறைவேற்றுவதற்கு, ஒரு ஆசாரியர் அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்தை தரித்திருப்பவர்:

  1. ஞானஸ்நானம் பெறும் நபருடன் தண்ணீரில் நிற்கிறார்.

  2. தன்னுடைய இடது கையால் நபரின் வலது மணிக்கட்டை பிடிப்பார் (வசதி மற்றும் பாதுகாப்புக்காக). ஞானஸ்நானம் பெறும் நபர் ஆசாரியத்துவம் தரித்திருப்பவரின் இடது மணிக்கட்டை தன்னுடைய இடது கையால் பிடிக்கிறார்.

  3. அவர் வலது கரத்தை செங்கோணத்திற்கு உயர்த்துகிறார்.

  4. நபரின் முழுப்பெயரையும் கூறி சொல்கிறார், “இயேசு கிறிஸ்துவினால் ஆணையிடப்பட்டவனாய் நான் உனக்கு பிதா மற்றும், குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன், ஆமென்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:73).

  5. அந்நபர் தன் மூக்கை தனது வலது கையால் பிடிக்கிறார் (வசதிக்காக); பிறகு தன்னுடைய வலது கையை நபரின் முதுகில் மேல்புறத்தில் வைத்து நபரை முழுவதுமாக ஆடை உட்பட மூழ்க வைக்கிறார்.

  6. நபருக்கு தண்ணீரிலிருந்து வெளியே வர உதவுகிறார்.