2010–2019
இன்னுமொரு நாள்
ஏப்ரல் 2018


இன்னுமொரு நாள்

நம் அனைவருக்கும் வாழ “இன்று” இருக்கிறது, நமது நாளை வெற்றிகரமானதாக ஆக்கும் திறவுகோல், தியாகம் செய்ய சித்தமாயிருப்பது.

சில ஆண்டுகளுக்கு முன், எனது நண்பர்கள் ப்ரிகாம் என்ற பெயருடைய ஒரு அழகான குழந்தையைப் பெற்றார்கள். அவனது பிறப்புக்குப் பின், ப்ரிகாமுக்கு ஹண்டர் சிண்ட்ரோம் என்ற அரிய வியாதி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது, அதன் அர்த்தம் ப்ரிகாம் கவலைப்படும் விதமாக குறுகிய நாட்களுக்குதான் வாழப்போகிறான் என்பதாகும். ஒரு நாள் ப்ரிகாமும் அவனது குடும்பமும் ஆலய முற்றத்திற்கு சென்றபோது, ப்ரிகாம் ஒரு குறிப்பிட்ட சொற்றொடரை சொன்னான், இருமுறை அவன் சொன்னான், “இன்னுமொரு நாள்.” அடுத்த நாளே ப்ரிகாம் மரித்தான்.

படம்
ப்ரிகாம்
படம்
ப்ரிகாமின் குடும்பம்
படம்
ப்ரிகாமின் கல்லறை

ப்ரிகாமின் கல்லறைக்கு நான் சில முறை சென்றிருக்கிறேன், நான் சென்ற ஒவ்வொரு முறையும் “இன்னுமொரு நாள்” என்ற சொற்றொடரை நினைத்துப் பார்க்கிறேன். அதன் அர்த்தம் என்ன, நான் வாழ ஒரே ஒரு நாள்தான் இருக்கிறது என அறிவது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும் என நான் ஆச்சரியப்படுகிறேன். எனது மனைவியையும், பிள்ளைகளையும், பிறரையும் எப்படி நடத்துவேன்? நான் எவ்வளவு பொறுமையோடும் தாழ்மையோடும் இருப்பேன்? என் சரீரத்தை எப்படி பராமரிப்பேன்? எவ்வளவு உருக்கமாக ஜெபித்து வேதத்தை ஆராய்வேன்? ஒரு விதத்தில் அல்லது இன்னொரு விதத்தில் நம் அனைவருக்கும் ஒரு நேரத்தில், “இன்னுமொரு நாள்” உணர்வு, நாம் பெற்றிருக்கிற நேரத்தை நாம் ஞானமாக பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வு பெறுவோம் என நான் நினைக்கிறேன்.

பழைய ஏற்பாட்டில் யூதாவின் இராஜாவாகிய எசேக்கியா இராஜாவின் கதையை நாம் வாசிக்கிறோம். எசேக்கியாவின் வாழ்க்கை முடியப்போகிறது என ஏசாயா தீர்க்கதரிசி அறிவித்தான். தீர்க்கதரிசியின் வார்த்தைகளை அவன் கேட்டபோது, எசேக்கியா ஜெபிக்கவும், கெஞ்சவும், கடுமையாக அழவும் தொடங்கினான். அந்த தருணத்தில் தேவன் எசேக்கியாவின் வாழ்க்கையில் 15 வருடங்களைக் கூட்டினார். (ஏசாயா 38:1–5பார்க்கவும்.)

நாம் வாழ குறுகிய காலமே இருக்கிறது எனச் சொல்லப்பட்டால், நாம் செய்த அல்லது வித்தியாசமாகச் செய்த காரியங்களின் பெயரால், நாமும் அதிக நாட்களுக்காகக் கெஞ்சலாம்.

நேரம் ஒரு பொருட்டின்றி, கர்த்தர் தன் ஞானத்தில், நாம் உறுதியாக நமபக்கூடிய ஒன்றை நமக்குக் கொடுக்க தீர்மானிக்கிறார், நம் அனைவருக்கும் வாழ ஒரு “இன்று” இருக்கிறது, நமது நாளை வெற்றிகரமாக ஆக்கும் திறவுகோல், தியாகம் செய்ய சித்தமாயிருப்பது.

கர்த்தர் சொன்னார், “இதோ மனுஷ குமாரன் வரும்வரை இப்பொழுது இது இன்று என அழைக்கப்படுகிறது, மெய்யாகவே அது தியாகத்தின் நாளாக இருக்கும்” (கோ.உ 64:23; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது).

தியாகம் என்ற வார்த்தை sacer, என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது, அதன் அர்த்தம் “பரிசுத்தம்” மற்றும் facere, அதாவது “ஆக்க” வேறுவார்த்தைகளிலெனில், அவற்றுக்கு மரியாதை கொடுக்க, அவற்றை பரிசுத்தமாக்குவதாகும்,

தியாகம் பரலோகத்தின் ஆசிகளைக் கொடுக்கிறது (“Praise to the Man,” Hymns, no. 27).

தியாகம் என்ன விதங்களில் நமது நாட்களை அர்த்தமுள்ளதாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் ஆக்கும்?

முதலாவதாக, தனிப்பட்ட தியாகம் நம்மை பலப்படுத்தி, நாம் தியாகம் செய்பவைகளுக்கு மதிப்பளிக்கிக்கிறது.

சில வருடங்களுக்கு முன் உபவாச ஞாயிற்றுக்கிழமையில், ஒரு வயதான சகோதரி தன் சாட்சியைச் சொல்ல பிரசங்க பீடத்துக்கு வந்தார். அவர் இக்கிட்டோஸ் என்ற பட்டணத்தில் வாழ்ந்தார். அது பெரு நாட்டின் அமேசானில் உள்ளது. அவர் ஞானஸ்நானம் பெற்றதிலிருந்து பெருவின், லிமாவிலிருந்த ஆலயத்தில் உடன்படிக்கைகளைப் பெறுவதை தன் இலக்காக எப்போதும் வைத்திருந்ததாக அவர் எங்களிடம் சொன்னார். அவர் விசுவாசத்துடன் முழு தசமபாகத்தையும் செலுத்தி, தன் சொற்ப வருமானத்தை சேமித்தார்.

ஆலயத்துக்குச் சென்று அங்கு பரிசுத்த நியமங்களைப் பெறுவதில் அவரது மகிழ்ச்சி இந்த வார்த்தைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது: “கடைசியாக திரையைத் தாண்டி செல்ல நான் ஆயத்தமாயிருப்பதை உணர்கிறேன் என இன்று என்னால் சொல்ல முடியும். நான்தான் உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான பெண். நான் பணத்தை சேமித்தேன், எவ்வளவு தூரம் என உங்களுக்குத் தெரியாது, ஆலயம் செல்ல ஆற்றில் ஏழு நாட்கள் மற்றும் பேருந்தில் 18 மணி நேரம் பிரயாணம் செய்து, நான் இறுதியாக தேவனின் வீட்டில் இருந்தேன். அப்பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வரும்போது, நான் எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன், நான் ஆலயத்துக்கு வர தேவைப்பட்ட அனைத்து தியாகங்களுக்கும் பிறகு, நான் செய்த ஒவ்வொரு உடன்படிக்கையையும் எளிதாக எடுத்துக்கொள்ள நான் எதையும் அனுமதிக்க மாட்டேன், அது வீணானதாகும். இது ஒரு மிக ஆழமான ஒப்புக்கொடுத்தல்!

நமது தீர்மானங்களையும், உறுதிப்பாட்டையும் உந்துகிற, மதிப்பிட முடியாத ஆற்றல், தனிப்பட்ட தியாகம் என நான் இந்த அருமையான சகோதரியிடமிருந்து கற்றேன். தனிப்பட்ட தியாகம் நமது செயல்களையும், நமது ஒப்புக்கொடுத்தல்களையும், நமது உடன்படிக்கைகளையும் உந்திதள்ளி, பரிசுத்த காரியங்களுக்கு அர்த்தம் கொடுக்கிறது.

இரண்டாவதாக, பிறருக்காக நாம் செய்யும் தியாகங்களும், நமக்காக பிறர் செய்வதும், அனைவருக்கும் ஆசீர்வாதம் கிடைப்பதில் முடிகின்றன.

நான் பல் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது, எங்கள் உள்ளூர் பொருளாதாரத்தைப்பற்றிய கருத்து, உற்சாகமூட்டுவதாயில்லை. விலையேற்றம் ஒவ்வொரு நாளும் பண மதிப்பைக் குறைத்தது.

நான் அறுவைச் சிகிச்சை பயிற்சியில் சேர இருந்த வருடத்தை நினைக்கிறேன். அந்த பருவத்தில் சேரும் முன் தேவையான அனைத்து அறுவைச் சிகிச்சை கருவிகளையும் நான் வைத்திருக்க வேண்டும். தேவையான பணத்தை நாங்கள் சேமித்தோம். ஆனால் ஒருநாள் ஒரு காரியம் நடந்தது. நாங்கள் கருவியை வாங்க சென்றோம், அனைத்து கருவிகளையும் நாங்கள் வாங்க என் பெற்றோர் சேமித்த பணம் முழுவதும் இரண்டு அறுவைச் சிகிச்சை குறடுகள் வாங்க மட்டுமே போதுமானதாக இருந்தது என அறிந்தோம். நாங்கள் வெறும் கையோடும், கல்லூரியில் ஒரு பருவத்தை இழக்கும் எண்ணத்தில் கனத்த இருதயத்தோடும் வீடு திரும்பினோம். எனினும் திடீரென என் அம்மா சொன்னார், “டெய்லர் என்னோடு வா; நாம் வெளியே போகலாம்.”

நகைகளை வாங்கவும் விற்கவும் உள்ள அநேக இடங்கள் இருக்கிற நகருக்கு நாங்கள் போனோம். நாங்கள் கடைக்குள் சென்றதும் ‘உன் அப்பாவிடமிருந்து என் அருமை மகளுக்கு” என எழுதப்பட்டிருந்த ஒரு அழகிய தங்க கையணி இருந்த சிறிய வெல்வெட் பையை தன் கைப்பையிலிருந்து எடுத்தார். அவரது ஒரு பிறந்த நாளின்போது, அது அவருக்கு என் தாத்தா கொடுத்த கையணி. பின்பு என் கண்களுக்கு முன்பதாகவே அவர் அதை விற்றார்.

அவர் பணத்தைப் பெற்றபோது, அவர் என்னிடம் சொன்னார், “நான் நம்புகிற ஒரு காரியம், நீ ஒரு பல் மருத்துவராகப் போகிறாய். உனக்குத் தேவைப்படுகிற அனைத்து கருவிகளையும் வாங்கு.” அப்போதிலிருந்து நான் எப்படிப்பட்ட மாணவனானேன் என உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நான் சிறந்த மாணவனாக இருக்கவும் எனது படிப்பை சீக்கிரம் முடிக்கவும் விரும்பினேன். ஏனெனில் அவர் செய்த உயர்ந்த விலையுடைய தியாகத்தை நான் அறிவேன்.

நமக்காக நமக்கு அன்பானவர்கள் செய்கிற தியாகம் பாலைவனத்தின் நடுவில் குளிர்ந்த தண்ணீர் போல நம்மை புத்துணர்வு பெறச் செய்யும் என நான் கற்றேன். அப்படிப்பட்ட தியாகம் நம்பிக்கையும் தூண்டுதலும் கொடுக்கிறது.

மூன்றாவதாக நாம் செய்யும் எந்த தியாகமும் தேவ குமாரனின் தியாகத்தோடு ஒப்பிட்டால் சிறியதாகும்.

தேவ குமாரனின் தியாகத்தோடு ஒப்பிட்டால், அருமையான கையணியின் மதிப்பு கூட எவ்வளவு? அந்த எல்லையில்லா தியாகத்தை நாம் எப்படி கனம் பண்ண முடியும்? நாம் வாழவும் விசுவாசமாயிருக்கவும் நமக்கு ஒரு நாள் இருக்கிறது என நாம் ஒவ்வொரு நாளும் நினைக்கலாம். அமுலேக் போதித்தான்: “ஆம் இனிமேலும் உங்கள் இருதயங்களை கடினப்படப் பண்ணாமல் வரும்படி விரும்புகிறேன். இதோ, இதுவே உங்களின் இரட்சிப்பின் காலமும் நாளுமாயிருக்கிறது. ஆகையால் நீங்கள் மனந்திரும்பி உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருந்தால், உடனே அந்த மீட்பின் திட்டம் உங்களில் நிலைகொள்ளும்.” (ஆல்மா 34:31). வேறு வார்த்தைகளிலெனில், நாம் கர்த்தருக்கு நொருங்குண்ட இருதயம் மற்றும் நருங்குண்ட ஆவியின் தியாகத்தைக் கொடுத்தால், உடனே மகிழ்ச்சியின் மாபெரும் திட்டத்தின் ஆசீர்வாதங்கள் நமது வாழ்க்கையில் வெளிப்படுகின்றன.

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தால் மீட்பின் திட்டம் சாத்தியமாகிறது. அவர் தாமே விவரித்தபடி, பலி “அனைத்திலும் உயர்வானவராகிய என்னையே, வேதனையினிமித்தம் நடுங்கவும், ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் சிந்தவும், சரீரத்திலும் ஆவியிலும் பாடனுபவிக்கவும் நான் கசப்பான பாத்திரத்தில் பானம்பண்ணாமலும் குறுகிவிடாமலும் இருக்கப் பண்ணியது” (கோ.உ 19:18).

இந்த தியாகத்தினிமித்தம், உருக்கமான மனந்திரும்புதலின் முறையைத் தொடர்ந்து நமது தவறுகள் மற்றும் பாவங்களின் பாரத்தை நாம் உணர முடிகிறது. உண்மையில் குற்ற உணர்வு, வெட்கம், வேதனை, துயரம் மற்றும் நம்மைக் குறைவாக எண்ணுதல், தெளிவான மனசாட்சி, மகிழ்ச்சி, சந்தோஷம், மற்றும் நம்பிக்கையால் மாற்றப்படுகிறது.

அதே சமயம் அவரது தியாகத்தை நாம் கனம்பண்ணி, நன்றியுடையவர்களாக இருக்கும்போது, பாவத்திலிருந்து விலகியிருக்கவும், எப்போதையும் விட உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்ளவும், தேவனின் சிறந்த பிள்ளைகளாக ஆழமான வாஞ்சையை அதிகமாகப் பெற முடியும்.

பின்பு, ஈனோஸ் போல அவனது பாவங்களிலிருந்து மன்னிப்பு பெற்ற பிறகு தியாகம் பண்ண நாம் வாஞ்சையும், நமது சகோதர சகோதரிகளின் நலத்தை நாடுகிறதையும் நாம் உணர முடியும். (ஈனோஸ் 1:9 பார்க்கவும்). “ஒரு சண்டையை சரி செய்யுங்கள், மறந்துபோன ஒரு நண்பனைத் தேடுங்கள், சந்தேகத்தை அகற்றி, அதை விசுவாசத்தால் மாற்றுங்கள். ... ஒரு மென்மையான பதில் கொடுங்கள். இளைஞர்களை ஊக்குவியுங்கள். சொல்லிலும் செயலிலும் உங்கள் விசுவாசத்தைத் தெரிவியுங்கள். வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்ளுங்கள். வெறுப்பை விட்டு விடுங்கள். சத்துருவை மன்னியுங்கள். குற்றத்தை ஒப்புக்கொள்ளுங்கள். புரிந்துகொள்ள முயலுங்கள். பிறரிடம் உங்கள் எதிர்பார்ப்பை பரிசோதனை செய்யுங்கள். மற்றொருவரை முதன்மையாக கருதுங்கள். தயவாயிருங்கள். மென்மையாயிருங்கள். கொஞ்சம் அதிகம் சிரியுங்கள். நன்றி தெரிவியுங்கள். அயலானுக்கு வரவேற்பு கொடுங்கள். ஒரு பிள்ளையின் இருதயத்தை மகிழ்வியுங்கள். உங்கள் அன்பை சொல்லுங்கள், மீண்டும் பேசுங்கள், என நமக்கு தலைவர் ஹோவார்ட் டபிள்யூ. ஹண்டர் கொடுத்த அழைப்பைப் பின்பற்ற ஒவ்வொரு இன்னுமொரு நாளும் நாம் சித்தமாயிருப்போம்.” (Teachings of Presidents of the Church: Howard W. Hunter [2015], 32; adapted from “What We Think Christmas Is,” McCall’s, Dec. 1959, 82–83).

தனிப்பட்ட தியாகமான, நாம் பிறருக்காக செய்கிற அல்லது பிறர் நமக்கு செய்கிற தியாகத்தால் நமது நாட்களை அந்த உள்ளுணர்வுடனும் பெலனுடனும் நிரப்புவோமாக. ஒரே பேறானவர் நமக்குக் கொடுக்கிற தியாகத்தில் சமாதானமும் சந்தோஷமும் சிறப்பாக அனுபவிப்போமாக. ஆம், மனுஷர் ஜீவித்திருக்கவே, நீங்களாகிய மனுஷர் மகிழ்ச்சி பெறவே ஆதாம் வீழ்ந்தான், என நாம் வாசிக்கும்போது, அந்த சமாதானம் குறிப்பிடப்படுகிறது. (2 நெப்பி 2:25 பார்க்கவும்). இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் தியாகம் மற்றும் பாவநிவர்த்தி மட்டுமே கொடுக்கக்கூடிய அந்த மகிழ்ச்சியே உண்மையான மகிழ்ச்சி.

இன்னுமொரு நாள் வாழ நாம் சந்தர்ப்பம் பெறும்போதெல்லாம், நாம் அவரைப் பின்பற்றவும், நாம் அவரை நம்பவும், அவரை நேசிக்கவும், அவரது தியாகத்தால் தெரிவிக்கப்பட்ட அன்பை நாம் உணரவும் வேண்டும் என்பதே எனது ஜெபம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.