2010–2019
நாமனைவரும் முன்னேறிச் செல்வோமாக
ஏப்ரல் 2018


நாமனைவரும் முன்னேறிச் செல்வோமாக

கடந்த இந்த இரண்டு நாட்களில் நீங்கள் என்ன உணர்ந்தீர்களென நினைவுகூர்ந்து சிந்தனை செய்யும்போது, கீழ்ப்படிவதற்கான உங்கள் விருப்பம் அதிகரிக்கும்.

என் அன்பு சகோதர சகோதரிகளே, நாம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டின் நிறைவுக்கு வரும்போது, அவரது வழிகாட்டுதலுக்கும், உணர்த்துதலான செல்வாக்குக்கும் கர்த்தருக்கு நன்றி சொல்ல நான் உங்களோடு இணைந்து கொள்கிறேன். இசை அழகாகவும் உயர்த்துவதாகவும் இருந்தது. செய்திகள் அறிவுறுத்துவதாகவும் இருந்தது மட்டுமின்றி அவை வாழ்க்கையை மாற்றுவதாகவும் இருந்தன!

பயபக்தியான கூட்டத்தில் நாம் புதிய தலைமையை ஆதரித்தோம். இரண்டு மாபெரும் மனிதர்கள் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். எட்டு புதிய பொது அதிகாரி எழுபதின்மர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

முன்னேறிச் செல்ல நமது புதுப்பிக்கப்பட்ட தீர்மானங்களையும், நமது சவால்களையும், நமது பொறுப்பையும் ஒரு அபிமான பாடல் சுருக்கி கூறுகிறது:

கர்த்தரின் பணியில் நாமனைவரும் முன்னேறிச் செல்வோமாக,

வாழ்க்கை முடியும்போது நாம் பிரதிபலன் அடையும்படிக்கு;

உரிமைக்கான போரில் வாள் சுழற்றுவோமாக,

சத்திய பராக்கிரம வாள்.

சத்துரு கேலி பேசினாலும் பயப்படாதீர்;

கர்த்தர் நம் பட்சத்திலிருப்பதால் தைரியம் கொள்வீர்.

துன்மார்க்கர் சொல்வதை நாம் கேட்பதில்லை,

கர்த்தரை மட்டுமே பணிவோம்.1

அடுத்த ஆறு மாதங்களில், அடிக்கடி, திரும்பத் திரும்பக் கூட, இம்மாநாட்டுச் செய்திகளை படிக்குமாறு நான் உங்களை அறிவுறுத்துகிறேன். உங்கள் குடும்ப இல்ல மாலைகளிலும், உங்கள் சுவிசேஷ போதனையிலும், குடும்பத்தோடும் நமது விசுவாசத்தைச் சாராத உங்கள் நண்பர்களுடனும் உரையாடல்களிலும், இச்செய்திகளைச் சேர்க்கும் வழிகளை விழிப்போடு தேடுங்கள். அன்புடன் கொடுக்கப்படும்போது, இம்மாநாட்டில் போதிக்கப்பட்ட சத்தியங்களுக்கு அநேக நல்ல ஜனங்கள் பதிலளிப்பார்கள். கடந்த இந்த இரண்டு நாட்களில் நீங்கள் நினைவுகொண்டு, சிந்திக்கும்போது கீழ்ப்படிய உங்கள் வாஞ்சை அதிகரிக்கும்.

ஊழியம் செய்வதில் ஒரு புது யுகத்தின் ஆரம்பத்தை இந்த பொது மாநாடு குறிக்கிறது. நாம் ஒருவருக்கொருவரைக் கவனிப்பதின் வழியில் முக்கிய அனுசரித்தலை கர்த்தர் செய்தார். மூத்த மற்றும் இளம் சகோதரிகளும் சகோதரர்களும் ஒரு புதிய பரிசுத்த வழியில் ஒருவருக்கொருவர் சேவை செய்வார்கள். உலக முழுவதிலுமுள்ள ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் வாழ்க்கையை ஆசீர்வதிக்க மூப்பர் குழுமம் பெலப்படுத்தப்படும். பொருத்தமாக பணிக்கப்பட்டு, அவர்களோடு இணைந்துகொள்ள இளம் சகோதரிகளுக்கு தருணமளித்து, ஒத்தாசைச் சங்க சகோதரிகள் தங்களின் தனித்துவமான, அன்பான வழியில் ஊழியம் செய்வதில் தொடருவார்கள்.

உலகத்துக்கு நமது செய்தி எளிமையானதும் உண்மையானதும் கூட, திரையின் இருபக்கங்களிலும் உள்ள எல்லா தேவ பிள்ளைகளையும், தங்களுடைய இரட்சகரண்டை வரவும், பரிசுத்த ஆலயங்களின் ஆசீர்வாதத்தைப் பெறவும், நீடித்த மகிழச்சி பெறவும், நித்திய ஜீவனுக்கு தகுதி பெறவும் நாங்கள் அழைக்கிறோம். 2

கர்த்தரின் வீட்டில் நாம் செய்யும் உடன்படிக்கைகளுக்கும், நாம் பெறுகிற நியமங்களுக்கும், நமது முழு இசைவு இறுதியான மேன்மைப்படுதலுக்கு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில், செயல்பட்டுக்கொண்டிருக்கும் 159 ஆலயங்கள் நமக்கிருக்கின்றன, கூடுதலாக ஆலயங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சபையின் பரந்துவரும் அங்கத்தினர்களுக்கு ஆலயங்களைப் பக்கத்தில் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம். ஆகவே ஏழு அதிக ஆலயங்களைக் கட்ட திட்டங்களை அறிவிப்பதில் இப்போது நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பின்வரும் இடங்களில் அந்த ஆலயங்கள் கட்டப்படும்: சால்டா, அர்ஜென்டினா; பெங்களூரு, இந்தியா; மனகுவா, நிகாரகுவா; ககயான் டிஒரோ, பிலிப்பைன்ஸ்; லேடன், யூட்டா; ரிச்மன்ட, வெர்ஜீனியா; மற்றும் இன்னமும் தீர்மானக்கப்படாத ரஷியாவிலுள்ள ஒரு பெரிய நகரம்.

எனக்கன்பான சகோதர சகோதரிகளே, இந்த ஆலயங்களைக் கட்டுதல் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவராதிருக்கலாம், ஆனால், ஆலயத்தில் உங்களின் நேரம், நிச்சயமாக மாற்றத்தைக் கொண்டுவரும். நீங்கள் ஆலயத்தில் அதிக நேரம் செலவிடும்படிக்கு, நீங்கள் ஒதுக்கி வைக்கும்படியான காரியங்களை அடையாளம் காண நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். உங்கள் வீடுகளில் அதிக இணக்கமும் அன்பும் இருக்கவும், நித்திய குடும்ப உறவுகளைப் பராமரிக்க ஆழமான வாஞ்சை பெறவும், நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் அதிக விசுவாசத்துடனும், அவரது உண்மையான சீஷர்களாக அவரைப் பின்பற்ற அதிக திறமைக்காகவும் நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்.

நாம் சர்வ வல்ல தேவனின் பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என நான் இப்போது சொல்வது போல, சாட்சி சொல்ல உங்கள் குரல்களை உயர்த்த நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். அவரது அபிஷேகிக்கப்பட்ட ஊழியக்காரர்களைக் கொண்டு வழிநடத்தப்படுகிற இது, அவரது சபை. உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பைத் தெரிவித்து இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திலே நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.