2010–2019
தூய அன்பு: ஒவ்வொரு உண்மையான சீஷனின் உண்மையான அடையாளம்
ஏப்ரல் 2018


தூய அன்பு: ஒவ்வொரு இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷனின் உண்மையான அடையாளம்

நம்மீது பிதா மற்றும் இரட்சகரின் அன்பு மற்றும் அவர்கள்மீதும் ஒருவருக்கொருவர்மீதும் நம்முடைய அன்பின் மேலேயே இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மையப்படுத்தப்பட்டிருக்கிறது.

தலைவர் தாமஸ் எஸ். மான்சனை நாம் நேசிக்கிறோம், அவரை இழந்திருக்கிறோம், தலைவர் ரசல் எம். நெல்சனை நாம் நேசிக்கிறோம், ஆதரிக்கிறோம். தலைவர் நெல்சனுக்கு என் இருதயத்தில் ஒரு விசேஷித்த இடமுண்டு.

நான் ஒரு இளம் தகப்பனாயிருந்தபோது, ஐந்து வயதாயிருந்த எங்கள் சிறிய மகன் ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு வந்து அவனுடைய தாயாரிடம் கேட்டான், “அப்பா என்ன மாதிரியான வேலை பார்க்கிறார்கள்?” அவனுடைய புதிய வகுப்புத் தோழர்கள் தங்களுடைய தகப்பன்களின் வேலைகளைப்பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர் என பின்னர் அவன் விவரித்தான். அவனுடைய தகப்பன் நகர காவல்நிலைய தலைமை அதிகாரி என ஒருவன் சொன்னான், ஒரு பெரிய கம்பனியில் அவனுடைய தகப்பன் தலைமையிலிருப்பதாக மற்றொருவன் பெருமையாக அறிவித்தான்.

ஆகவே அவனுடைய தகப்பனைப்பற்றி கேட்கப்பட்டபோது, “என்னுடைய தகப்பன் ஒரு அலுவலகத்தில் கம்யூட்டரில் வேலை செய்கிறார்” என என் மகன் எளிதாகச் சொன்னான். பின்னர் அவனுடைய பதில் அவனுடைய சிறு நண்பர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கவில்லை என கவனித்ததில் அவன் சொன்னான், “அப்படியே என்னுடைய தகப்பன் பிரபஞ்சத்தின் தலைவர்”.

அது உரையாடலின் முடிவு என நான் நம்புகிறேன். நான் என் மனைவியிடம் சொன்னேன், “இரட்சிப்பின் திட்டத்தின் சில அதிக விவரங்களையும் உண்மையில் யார் அதிகாரத்திலிருக்கிறார் என்பதையும் அவனுக்குக் கற்றுக்கொடுக்க இதுதான் நேரம்.”

நான் என் மனைவியிடம் சொன்னேன், “இரட்சிப்பின் திட்டத்தின் சில அதிக விவரங்களையும் உண்மையில் யார் அதிகாரத்திலிருக்கிறார் என்பதையும் அவனுக்குக் கற்றுக்கொடுக்க இதுதான் நேரம்.”

ஆனால் இரட்சிப்பின் திட்டத்தைப்பற்றி நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தபோது, இது அன்பின் திட்டமென அவர்கள் கற்றுக்கொண்டபோது, பரலோக பிதாவிடத்திலும் இரட்சகரிடத்திலும் அவர்களுடைய அன்பு வளர்ந்தது. நம்மீது பிதா மற்றும் இரட்சகரின் அன்பு மற்றும் அவர்கள்மீதும் ஒருவருக்கொருவர்மீதும் நம்முடைய அன்பிலேயே இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மையப்படுத்தப்பட்டிருக்கிறது.

மூப்பர் ஜெப்ரி ஆர்.ஹாலன்ட் சொன்னார், “முதல் பிரதான கற்பனையாயிருக்கிற, நமது முழு இருதயத்தோடும், ஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும் தேவனிடத்தில் அன்புகூருவது சகல நித்தியத்திற்கும் முதல் பிரதான கற்பனையாயிருக்கிறது. ஆனால், அவரது முழு இருதயத்தோடும், ஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும் தேவன் நம்மீது அன்புகூருகிறாரென்பது சகல நித்தியத்திற்கும் முதல் பிரதான சத்தியம். அந்த அன்பு நித்தியத்திற்கும் அஸ்திபாரக் கல்லாயிருக்கிறது, அதுவே நமது அன்றாட வாழ்க்கையின் அஸ்திபாரக் கல்லாயிருக்கவேண்டும். ” 1

நமது அன்றாட வாழ்க்கையின் அஸ்திபாரக் கல்லாயிருப்பதில் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷராயிருக்கும் ஒவ்வொருவருக்கும் தூய அன்பு தேவை.

“ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, பிதா தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுகிறவர்களாயிருக்கிற யாவர் மேலும் அவர் அருளின இந்த அன்பினால் நீங்கள் நிரப்பப்பட பிதாவிடத்தில் இருதயத்தின் முழு ஊக்கத்தோடும் ஜெபியுங்கள்”2 என தீர்க்கதரிசி மரோனி போதித்தான்.2

அன்பு உண்மையிலேயே ஒவ்வொரு உண்மையான சீஷனின் உண்மையான அடையாளம்.

உண்மையான சீஷர்கள் சேவை செய்ய விரும்புவார்கள். சேவை செய்வது உண்மையான அன்பின் ஒரு வெளிப்பாடென்றும் ஞானஸ்நானத்தில் அவர்கள் செய்த உடன்படிக்கை என்றும் அவர்கள் அறிவார்கள். 3 சபையில் அவர்களின் அழைப்புகளுக்கும் அல்லது சமுதாயத்தில் அவர்களின் பங்குக்கும் சமபந்தமில்லாமல், கர்த்தர்மீதும் ஒருவருக்கொருவர்மீதும் அன்பு செலுத்தவும் சேவை செய்யவும் ஒரு அதிகரித்த விருப்பத்தை அவர்கள் உணருவார்கள்.

உண்மையான சீஷர்களின் அன்பு மன்னிப்பதுவே. இரட்சகரின் பாவநிவர்த்தி நம் ஒவ்வொருவரின் பாவங்களையும் தவறுகளையும் மூடுகிறதென அவர்கள் அறிவார்கள். அவர் செலுத்திய கிரயத்தில் “எல்லா கிரயமும் அடங்கியிருக்கிறதென” அவர்கள் அறிவார்கள். பாவங்களுக்கு சம்பந்தப்பட்ட, ஆவிக்குரிய வரிகள், கட்டணங்கள், பத்திரங்கள், உத்தரவுகள், தவறுகள், அல்லது தவறான நடத்தைகள் எல்லாமுமே மூடப்படுகிறது. உண்மையான சீஷர்கள், மன்னிக்க வேகமாகவும் மன்னிப்பு கேட்பதில் வேகமாகவும் இருப்பார்கள்.

எனக்கன்பான சகோதர சகோதரிகளே, மன்னிப்பதற்கு பெலத்தைக்காண நீங்கள் போராடிக்கொண்டிருந்தால், மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்களென நினைக்காதிருங்கள், கர்த்தர் உங்களுக்கு என்ன செய்திருக்கிறாரென நினைத்துப்பாருங்கள், அப்போது அவரது பாவநிவர்த்தி மற்றும் மீட்பின் ஆசீர்வாதங்களில் நீங்கள் சமாதானத்தைக் காண்பீர்கள்.

தங்களுடைய இருதயத்தில் சமாதானத்துடன் கர்த்தருக்கு தங்களை ஒப்படைக்க உண்மையான சீஷர்கள் விரும்புவார்கள். அவரை அவர்கள் நேசிப்பதால் அவர்கள் அடக்கமுள்ளவர்களாகவும் தாழ்மையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள். அவர் என்ன செய்கிறாரென்பதில் மட்டுமல்ல எவ்வாறு எப்படி செய்கிறாரென்பதிலும் அவருடைய சித்தத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விசுவாசமிருக்கிறது. அவர்களுக்கு என்ன வேண்டுமென்பது எப்போதுமே உண்மையான ஆசீர்வாதங்களில் இல்லை, ஆனால் மாறாக அவர்களுக்கு என்ன வேண்டுமென கர்த்தர் விரும்புவதே, என உண்மையான சீஷர்கள் அறிந்திருக்கிறார்கள்.

உண்மையான சீஷர்கள் உலகத்தைவிட கர்த்தரை அதிகமாக நேசிக்கிறார்கள், தங்களுடைய விசுவாசத்தில் திடமாயும் அசைக்கப்படாதவர்களுமாயிருக்கிறார்கள். மாறிக்கொண்டும் குழப்பத்திலுமிருக்கிற உலகத்தில் அவர்கள் பெலமாகவும் உறுதியாகவுமிருக்கின்றனர். பரிசுத்த ஆவியின் மற்றும் தீர்க்கதரிசிகளின் குரலுக்கு செவிகொடுக்க உண்மையான சீஷர்கள் விரும்பி, உலகத்தின் குரல்களால் அவர்கள் குழப்பமடைவதில்லை. “பரிசுத்த ஸ்தலங்களில்” 4 நிற்கவும், அவர்கள் நிற்கிற இடங்களை பரிசுத்தமாகச் செய்யவும் உண்மையான சீஷர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் போகுமிடமெல்லாம் மற்றவர்களின் இருதயங்களுக்கு கர்த்தரின் அன்பையும் சமாதானத்தையும் அவர்கள் கொண்டுவருகிறார்கள். கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய உண்மையான சீஷர்கள் விரும்பி, கர்த்தரை அவர்கள் நேசிப்பதால் அவர்கள் கீழ்ப்படிகிறார்கள். அவர்கள் நேசித்து தங்கள் உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுவதில் அவர்களுடைய இருதயங்கள் புதுப்பிக்கப்பட்டு அவர்களுடைய இயற்கையான தன்மையே மாறுகிறது.

தூய அன்பு இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷனின் உண்மையான அடையாளம்.

தூய அன்பைப்பற்றி என்னுடைய தாயிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அவர் சபையின் அங்கத்தினரில்லை.

அநேக ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள், புற்றுநோயால் போராடிக்கொண்டிருந்த என் தாயை நான் சந்தித்தேன். அவர் மரிக்கப்போகிறாரென எனக்குத் தெரியும் ஆனால் அவர் போராடிக்கொண்டிருந்தது எனக்குக் கவலையாயிருந்தது. நான் எதுவும் சொல்லவில்லை, என்னை நன்றாகத் தெரிந்திருந்து, அவர் சொன்னார், “நீ கவலைப்படுவதை என்னால் பார்க்கமுடிகிறது.”

பின்னர் நான் ஆச்சரியப்படுகிற மாதிரி ஒரு தாழ்ந்த குரலில் அவர் சொன்னார், “எப்படி ஜெபிப்பதென்று எனக்கு நீ கற்றுக்கொடுக்கமுடியமா? நான் உனக்காக ஜெபிக்க விரும்புகிறேன். ‘அன்பான பரலோக பிதாவே’ என்று சொல்லி நீ ஆரம்பிப்பாய் என்று எனக்குத் தெரியும், ஆனால் பின்னர் நான் என்ன சொல்லவேண்டும்?”

அவருடைய படுக்கைக்கு அருகில் நான் முழங்கால்படியிட்டு அவர் எனக்காக ஜெபித்தபோது இதற்கு முன்பு உணராத ஒரு அன்பை நான் உணர்ந்தேன். அது எளிதான, உண்மையான தூய அன்பாயிருந்தது. இரட்சிப்பின் திட்டத்தைப்பற்றி அவருக்குத் தெரியாதிருந்தாலும்கூட, அவருடைய மகனுக்காக ஒரு தாயின் அன்பின் திட்டமான, அவருடைய அன்பின் திட்டம் அவருடைய இருதயத்திற்குள் அவருக்கிருந்தது. அவர் வேதனையிலிருந்து, ஜெபிப்பதற்குக்கூட பெலனைக் காண போராடிக்கொண்டிருந்தார். அவருடைய குரலை என்னால் கேட்கக்கூடமுடியவில்லை ஆனால் நிச்சயமாக அவருடைய அன்பை நான் உணர்ந்தேன்.

இத்தகைய வேதனையில் யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு எவ்வாறு ஜெபிக்கமுடியும்? இவரே தேவையிலிருப்பவர் என நினைத்துக்கொண்டிருந்தது எனக்கு நினைவில் வந்தது.

பின்னர் பதில் என் மனதிற்குள் தெளிவாய் வந்தது. அவர் என்னை அந்த அளவிற்கு நேசித்ததால் அவரைப்பற்றியே அவர் மறந்துவிட்டார். அவருடைய அந்த ஆபத்தான மணிநேரத்தில் அவரைவிட என்னை அவர் அதிகமாக நேசித்தார்.

இப்போது, அன்பான சகோதர சகோதரிகளே, இதைத்தானே இரட்சகர் செய்தார் நிச்சயமாக, ஒரு நித்திய மற்றும் பரந்த தோற்றத்தில் செய்தார். ஆனால் அவருடைய மிகுந்த வேதனைக்கு மத்தியில், அந்த இரவில், தோட்டத்தில், நம்மால் கற்பனை செய்யமுடியாத, புரிந்துகொள்ளமுடியாத ஒரு வழியில் போராடிக்கொண்டிருந்த அவருக்குத்தான் உதவி தேவையாயிருந்தது. ஆனால், இறுதியில், அவர் தன்னைப்பற்றி மறந்து, நமக்காக முழுக் கிரயத்தையும் செலுத்தும்வரை நமக்காக ஜெபித்தார். அவரால் எப்படிச் செய்யமுடிந்தது? அவரை அனுப்பிய அவருடைய பிதாவிடமும் நம்மிடமும் அவருக்கிருந்த தூய அன்பினாலேயே. அவரைவிட அவருடைய பிதாவையும் நம்மையும் அவர் அதிகமாக நேசிக்கிறார்.

அவர் செய்யாத ஒன்றிற்காக அவர் கிரயம் செலுத்தினார். அவர் செய்யாத பாவங்களுக்காக அவர் கிரயம் செலுத்தினார். ஏன்? தூய அன்பு. முழுக்கிரயத்தையும் செலுத்தியதில், நாம் மனந்திரும்பினால், அவர் செலுத்தியதற்கான ஆசீர்வாதங்களை நமக்குக் கொடுக்கிற இடத்தில் அவர் இருந்தார். இதை ஏன் அவர் கொடுக்கிறார்? மீண்டும் எப்போதும் தூய அன்பு.

தூய அன்பு இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷனின் உண்மையான அடையாளம்.

தலைவர் தாமஸ் எஸ்.மான்சன் சொன்னார், “அவர்கள் நமது குடும்பத்தினராய், நமது நண்பர்களாய், நமக்கு தெரிந்தவர்களாய், அல்லது முற்றிலுமாக அந்நியர்களாயிருக்கிற, தேவனுடைய பிள்ளைகள் அனைவரிடமும் அன்பைக் காட்டுவதை இந்த நாளிலே இப்போதே நாம் ஆரம்பிப்போம். ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் எழும்போது, நம் வழியில் எது வந்தாலும், அன்புடனும் இரக்கத்துடனும் செயல்பட நாம் தீர்மானிப்போமாக.” 5

சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் அன்பின் சுவிசேஷம். அன்பைப்பற்றியதே கற்பனைகளில் மகத்தான கற்பனை. என்னைப் பொறுத்தவரையில் எல்லாமுமே அன்பைப்பற்றியதே. நமக்காக தன்னுடைய குமாரனை பலியாகக் கொடுத்த பிதாவின் அன்பு. நமக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த இரட்சகரின் அன்பு. அவனுடைய அல்லது அவளுடைய பிள்ளைகளுக்காக எதையும் கொடுக்கிற தாய் அல்லது தகப்பனின் அன்பு. நம்மில் அநேகருக்குத் தெரியாமல் அமைதியாக சேவை செய்து ஆனால் கர்த்தருக்கு நன்றாகத் தெரிந்த அவர்களின் அன்பு. எல்லோரையும் எப்போதும் மன்னிக்கிறவர்களின் அன்பு. அவர்கள் பெறுவதைவிட அதிகமாகக் கொடுக்கிறவர்களின் அன்பு.

என்னுடைய பரலோக பிதாவை நான் நேசிக்கிறேன். என்னுடைய இரட்சகரை நான் நேசிக்கிறேன். சுவிசேஷத்தை நான் நேசிக்கிறேன். இந்த சபையை நேசிக்கிறேன். என்னுடைய குடும்பத்தை நான் நேசிக்கிறேன். இந்த அற்புதமான வாழ்க்கையை நான் நேசிக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் எல்லாமுமே அன்பைப்பற்றியதுதான்.

இரட்சகரைப்பற்றி நினைவுகூருகிற இந்த நாள் நம் ஒவ்வொருவருக்கும் ஆவியின் புதுப்பித்தலின் நாளாயிருப்பதாக. நமது “அன்றாட வாழ்க்கையின் அஸ்திபாரக்கல்லான” முழு அன்பான வாழ்க்கையின் ஆரம்பமாக இந்த நாளிருப்பதாக.

இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு உண்மையான சீஷனின் உண்மையான அடையாளத்துடன் கிறிஸ்துவின் தூய அன்பால் நமது இருதயங்கள் நிரப்பப்படுவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இது எனது ஜெபம், ஆமென்.