2010–2019
கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
ஏப்ரல் 2018


கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்

நமக்கு விரோதமாக மீறுதல் செய்தவர்களை இலவசமாக மன்னிக்க நாம் கற்றுக்கொள்ளும்போது, நாம் சொல்ல முடியாத சமாதானம்பெற்று நமது இரட்சகரோடு பங்காளிகளாக முடியும்.

“வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.

“கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு,

“உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,

“அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.

“அந்த ஸ்திரீகள் பயப்பட்டு தலை கவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில் அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுவதென்ன?

“அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.” 1

நமக்காக இயேசு கிறிஸ்து என்ன செய்தாரென்பதை ஒரு விசேஷித்த வழியில், நாளை ஈஸ்டர் ஓய்வுநாளில் நாம் நினைவுகூருவோம். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”2இறுதியாக என்றென்றும் ஜீவிக்க அவரைப்போன்று நாம் உயிர்த்தெழுவோம்.

மனந்திரும்புதலின் சந்தர்ப்பத்தையும் பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொண்டால், இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த பாவநிவர்த்தியின் அற்புதத்தின் மூலமாக, நமது பாவங்களுக்கும் தவறுதல்களுக்கும் மன்னிப்பின் வரத்தைக்கூட நாம் பெறலாம். அவசியமான நியமங்களைப் பெற்றுக்கொள்வதால், உடன்படிக்கைகளை கைக்கொள்ளுவதால், கற்பனைகளுக்குக்குக் கீழ்படிவதால் நித்திய ஜீவனையும் மேன்மையையும் நாம் அடையலாம்.

நமது இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவிடமிருந்து நமக்கு வழங்கப்படுகிற ஒரு அத்தியாவசியமான, விலைமதிப்பற்ற வரமான மன்னிப்பைப்பற்றி இன்று கவனம் செலுத்த நான் விரும்புகிறேன்.

ஐடஹோ போக்கடெல்லாவில், 1982 டிசம்பர் மாத ஒரு இரவில் எங்கள் வீட்டிற்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பால் எனது மனைவி டெரியும் நானும் எழுந்தோம். தொலைபேசியில் நான் பேசியபோது அழுகை சத்தம் மட்டுமே எனக்குக் கேட்டது. இறுதியாக என்னுடைய சகோதரியின் போராடுகிற குரல் சொன்னது, “டாமி மரித்துவிட்டான்.”

மணிக்கு 85 மைல்கள் (135கி.மீ) வேகத்தில், மதுஅருந்தி வண்டியோட்டி வந்த 20 வயதான ஒரு வாகனஓட்டி, டென்வெர் கோலராடாவின் நகர்புறத்தில் நிறுத்த விளக்கைத் தாண்டி மிகவேகமாக வண்டியோட்டி வந்தான். என்னுடைய சகோதரன் டாமி ஓட்டி வந்த காரில் அவனது கார் மிகப்பயங்கரமாக மோதி, அங்கேயே டாமியும் அவனது மனைவி ஜோனும் கொல்லப்பட்டனர். கிறிஸ்துமஸ் விருந்திற்குப் பிறகு இளைய மகளின் வீட்டிற்கு அவர்கள் வந்துகொண்டிருந்தனர்.

எனது மனைவியும் நானும் உடனடியாக டென்வருக்கு விமானத்தில் சென்று, அமரர் அறைக்குப் போனோம். என்னுடைய பெற்றோரும் உடன்பிறந்தவர்களும் ஒன்றுகூடி எங்களுக்கு அன்பான டாமி மற்றும் ஜோனின் இழப்பிற்காக துக்கித்தோம். ஒரு புத்திகெட்ட குற்றச்செயலுக்கு நாங்கள் அவர்களை இழந்தோம். எங்களுடைய இருதயங்கள் நொறுங்கி, அந்தக் குற்றவாளி மீதுள்ள கோபம் என்னுள் வளர்ந்தது.

ஐக்கிய நாடுகளின் நீதித்துறையில் ஒரு வக்கீலாக டாமி பணிபுரிந்து, அமெரிக்காவின் பூர்வீக நிலத்தையும் வரக்கூடிய ஆண்டுகளில் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் ஒரு திறமையான வக்கீலின் பாதையிலிருந்தான்.

சில காலம் கடந்துபோன பின்பு வாகன படுகொலைக்கு பொறுப்பானவன் என கண்டுபிடிக்கப்பட்ட வாலிபனுக்காக விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. துக்கத்திலும் வருத்தத்திலுமிருந்த எனது பெற்றோரும் எனது மூத்த சகோதரியுமான கேட்டியும் விசாரணைக்குப் போயிருந்தனர். குடிகார வாகன ஓட்டியின் பெற்றோரும் அங்கிருந்தனர், விசாரணை முடிவுற்றபோது அவர்கள் ஒரு பெஞ்சில் அமர்ந்து அழுதார்கள். எனது பெற்றோரும் சகோதரியும் பக்கத்திலேயே அமர்ந்து தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின்னர் எனது பெற்றோரும் சகோதரியும் எழுந்து வாகனஓட்டியின் பெற்றோரை நோக்கி நடந்து ஆறுதல் மற்றும் மன்னிப்பின் வார்த்தைகளைக் கூறினர். ஆண்கள் கை குலுக்கினர், பெண்கள் கைகளைப் பிடித்துக்கொண்டனர், அங்கே ஆழமான துக்கமிருந்தது, எல்லோர் கண்களிலும் கண்ணீர் வழிந்து, இரண்டு குடும்பங்களும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது தெரிந்தது. அம்மாவும், அப்பாவும், கேட்டியும் தங்களுடைய அமைதியான பெலத்துடனும் துணிவுடனும் வழிநடத்தி மன்னிப்பென்றால் என்னவென்பதை எங்கள் குடும்பத்திற்கு காட்டினார்கள்.

அந்த நேரத்தில் மன்னிப்பின் அந்த அணுகுமுறை எங்கள் இருதயங்களை மிருதுவாக்க காரணமாகி குணமாக்குதலுக்கான பாதையைத் திறந்தது. இறுதியில் மன்னிப்பின் இருதயத்தை எவ்வாறு கொண்டிருப்பதென்பதை நான் கற்றுக்கொண்டேன். சமாதானப் பிரபுவின் உதவியால் மட்டுமே என்னுடைய வேதனையான சுமை நீக்கப்பட்டது. டாமையும் ஜோனையும் என் உள்ளம் எப்போதுமே தவற விட்டதாக நினைக்கிறது. ஆனால் கட்டுப்படுத்த முடியாத சந்தோஷத்துடன் அவர்களை நினைவுகூர இப்போது மன்னிப்பு என்னை அனுமதிக்கிறது. மீண்டும் நாங்கள் ஒரு குடும்பமாக ஒன்று சேர்ந்திருப்போம் என நான் அறிவேன்.

சட்டவிரோதமான நடத்தையை நாங்கள் மன்னித்தோமென நான் சொல்லவில்லை. தங்களுடைய குற்ற நடவடிக்கைகளுக்கும், சமூக தவறுதல்களுக்கும் தனிப்பட்டவர்கள் பொறுப்பேற்கிறார்களென்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம். ஆயினும், தேவனுடைய குமாரர்களாக, குமாரத்திகளாக, நாம் இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுகிறோம். நமது மன்னிப்பிற்கு மற்றவர்கள் தகுதியில்லாதவர்களாக தோன்றுகிறபோதும்கூட நாம் மன்னிப்பவர்களாயிருக்கவேண்டும்.

இரட்சகர் இவ்வாறாக போதித்தார்.

“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரம பிதா உங்களுக்கும் மன்னிப்பார்:

“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” 3

நமக்கு விரோதமாக குற்றஞ்செய்கிறவர்களை இலவசமாக நாம் மன்னிக்க கற்றுக்கொள்ளும்போது கற்பனைக்கடங்காத சமாதானத்தை நாம் அனைவரும் பெற்று நம் இரட்சகரோடு பங்காளியாவோம். இந்த பங்காளியாகுதல் ஒரு தவறுசெய்ய முடியாதபடியும், ஒருபோதும் மறக்கமுடியாத விதமாகவும் நமது வாழ்க்கையில் இரட்சகரின் வல்லமையை, கொண்டு வருகிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறாகச் சொன்னான்.

“ஆகையால் நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவராய் உருக்கமான இரக்கத்தையும் தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;

“ஒருவரையொருவர் தாங்கி ... கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். 4

கர்த்தரே இவ்வாறாக அறிவித்தார்:

“ஆகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் ஒருவரையொருவர் மன்னிக்கவேண்டும், ஏனெனில் தன்னுடைய சகோதரனுடைய தப்பிதங்களை மன்னிக்காதவன் கர்த்தருக்கு முன்பாக குற்றவாளியாக நிற்கிறான், ஏனெனில் அவனில் இன்னமும் பெரிய பாவமிருக்கிறது.

“கர்த்தராகிய நான் மன்னிக்கவேண்டியவர்களை மன்னிப்பேன், ஆனால் நீங்கள் சகல மனுஷர்களையும் மன்னிக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.”5

நமது இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் போதனைகள் தெளிவாயிருக்கின்றன, மன்னிப்பைப்பெற அவன் அல்லது அவள் நம்பிக்கையாயிருந்தால் மற்றவர்களை மன்னிக்க பாவிகள் மனதுள்ளவர்களாயிருக்கவேண்டும்.6

சகோதர, சகோதரிகளே, நமது வாழ்க்கையில் நம்மை புண்படுத்தியவர்களிருக்கிறார்களா? வெறுப்பு மற்றும் கோபத்தின் முழுமையாக நியாயப்படுத்தப்பட்டதாகத் தோன்றுகிற உணர்வுகளை நாம் மனதிலேயே வைத்திருக்கிறோமா? மன்னிப்பிலிருந்தும் விட்டுவிடுவதிலிருந்தும் பெருமை நம்மை தடுக்கவிடுகிறோமா? முழுமையாக மன்னிக்கவும் நமக்குள்ளேயே குணமாக்குதல் நடைபெறவும் நம் அனைவரையும் நான் அழைக்கிறேன். மன்னிப்பு இன்று வராவிட்டாலும்கூட, அதை நாம் விரும்பி அதற்காக முயற்சி செய்யும்போது, என்னுடைய சகோதரனின் மரணத்திற்குப் பின் இறுதியாக அது எனக்கு வந்ததைப்போல அது வருமென்பதை அறிந்துகொள்ளுங்கள்.

மன்னிப்பின் அத்தியாவசிய ஒரு பகுதி நம்மையே நாம் மன்னிப்பதில் அடங்கியிருக்கிறதென்பதையும் நினைவுகூருங்கள்.

“இதோ, தனது பாவங்களுக்காக மனந்திரும்புகிறவன் மன்னிக்கப்படுகிறான், கர்த்தராகிய நான் அவற்றை இனிமேலும் நினைவுகூரமாட்டேன்”7 என கர்த்தர் சொன்னார்.

இயேசு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டை நினைவுகூரவும் பின்பற்றவும் இந்நாளில் நான் நம் யாவரையும் வேண்டுகிறேன். கொல்கதாவில் சிலுவையில் அவரது வியாகுலத்தில் இந்த வார்த்தைகளை அவர் சொன்னார், “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.”8

என்னுடைய பெற்றோர் மற்றும் மூத்த சகோதரியைப்போல மன்னிப்பின் எண்ணத்தைக் கொண்டிருந்து அதில் செயல்படுவதால் இரட்சகரின் வாக்களிப்பை நாம் உணரமுடியும். “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.”9

இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு செவிசாய்த்து, மற்றவர்களை மன்னிப்பதால் அவரது எடுத்துக்காட்டைப் பின்பற்றும்போது இந்த சமாதானம் நமது வாழ்க்கையில் வருமென்று நான் சாட்சியளிக்கிறேன். நாம் மன்னிக்கும்போது, இரட்சகர் நம்மைப் பெலப்படுத்துவார் என்றும், அவரது வல்லமையும் சந்தோஷமும் நமது வாழ்க்கையில் பாய்ந்தோடுமென்றும் நான் வாக்களிக்கிறேன்.

கல்லறை வெறுமையாயிருக்கிறது. கிறிஸ்து ஜீவிக்கிறார். நான் அவரை அறிவேன். நான் அவரை நேசிக்கிறேன். அனைத்துக் காரியங்களையும் குணமாக்க போதுமான பெலப்படுத்தும் வல்லமையான அவருடைய கிருபைக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் ஆமென்.