2010–2019
அவரது ஆவி உங்களோடு இருக்க
ஏப்ரல் 2018


அவரது ஆவி உங்களோடு இருக்க

உங்களுக்கு தாராளமாக அனுப்பப்பட்டுள்ள ஆவியின் குரலை நீங்கள் கேட்க வேண்டும் என நான் என் முழு இருதயத்தோடும் ஜெபிக்கிறேன்.

என் சகோதர சகோதரிகளே, இந்த ஈஸ்டர் காலத்தில், அவரது சபையின் பொது மாநாட்டில், கர்த்தரின் ஓய்வுநாளில் இன்று உங்களுடன் பேசும் சந்தர்ப்பத்துக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நமது மீட்பராக இருக்க பூமிக்கு தாமாகவே வந்த, அவரது நேச குமாரனின் வரத்துக்காக நான் பரலோக பிதாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் நமது பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்து, உயிர்த்தெழுதலில் எழுந்தார் என அறிவதில் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவரது பாவநிவர்த்தியினிமித்தம், ஒரு அன்பான குடும்பத்தில் என்றென்றும் வாழ, ஒருநாளில் உயிர்த்தெழுப்பப்படுவேன் என அறிவதில் நான் தினமும் ஆசீர்வதிக்கப்படுகிறேன்.

நாம் அவற்றை அறியக்கூடிய ஒரே வழியில் நான் இவற்றை அறிவேன். ஒரு முறை அல்ல, அடிக்கடி அவை உண்மை என என் மனதிலும் இருதயத்திலும் பரிசுத்த ஆவியானவர் பேசியிருக்கிறார். அந்த தொடர்ந்த ஆறுதல் எனக்கு தேவைப்பட்டிருக்கிறது. நாம் அனைவரும் சோகத்தை அனுபவிக்கிறோம், அப்போது ஆவியின் உறுதிப்பாடு நமக்குத் தேவை. ஒருநாள் மருத்துவமனையில் என் அப்பாவோடு நின்றுகொண்டிருந்தபோது அதை நான் உணர்ந்திருக்கிறேன். என் அம்மா பலவீனமாக மூச்சு விடுவதை நான் பார்த்தேன், அப்புறம் அதுவும் இல்லை. நாங்கள் அவரது முகத்தைப் பார்த்தபோது, வேதனை விலகியதால் அவர் புன்னகைத்துக்கொண்டிருந்தார். சில அமைதியான தருணங்களுக்குப்பின் முதலில் என் அப்பா பேசினார். அவர் சொன்னார், “ஒரு சிறுமி வீட்டுக்குப் போயிருக்கிறாள்.”

அவர் மென்மையாகச் சொன்னார். அவர் சமாதானமாயிருப்பது போலத் தெரிந்தது. அவர் உண்மை என அறிந்த ஒன்றை அறிக்கை செய்தார். அவர் அமைதியாக அம்மாவின் சொந்த பொருட்களை சேகரிக்கத் தொடங்கினார். பல நாட்களாக அவருக்கு பணிவிடை செய்த ஒவ்வொரு செவிலியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி சொல்ல மருத்துமனை கூடத்திற்கு சென்றார்.

அவர் அந்த நாளில் செய்ததை செய்ய, அந்த தருணத்தில் உணரவும் அறியவும் பரிசுத்த ஆவியானவரின் தோழமையை பெற்றிருந்தார். அநேகர் போல “தங்களோடு அவரது ஆவியைப் பெற்றிருக்கும்படிக்கு” (கோ.உ 20:79) என்று அவர் அந்த வாக்குத்தத்தத்தை பெற்றிருந்தார்,.

இன்று என் நம்பிக்கை, உங்கள் வாஞ்சையையும், பரிசுத்த ஆவியானவரைப் பெறும் உங்கள் திறமையை அதிகரிப்பதும் ஆகும். அவர் தேவத்துத்தின் மூன்றாம் நபர் என்பதை நினைவில் வைத்திருங்கள். பிதாவும் குமாரனும உயிர்த்தெழுந்தவர்கள். பரிசுத்த ஆவியானவர் ஒரு ஆவி நபர். (கோ.உ 130:22பார்க்கவும்.) அவரைப் பெறுவதும் அவரை உங்கள் இருதயத்திலும் மனதிலும் வரவேற்பதும் உங்கள் தேர்வு.

அந்த மேலான ஆசீர்வாதங்களை நாம் பெறக்கூடிய நிபந்தனைகள், வாரந்தோறும் பேசப்படுகிற வார்த்தைகளில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் ஒருவேளை நமது இருதயங்களிலும் மனங்களிலும் அவை மூழ்குவதில்லை. நமக்கு அனுப்பப்பட்ட ஆவியை நம்மோடு கொண்டிருக்க நாம், இரட்சகரை “எப்போதும் நினைவுகூர்ந்து,” “அவரது கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும்.” (கோ.உ 20:77).

வருடத்தின் இந்த நேரம் இரட்சகரின் தியாகத்தையும், உயிர்த்தெழுந்தவராக கல்லறையிலிருந்து அவர் எழுந்ததையும் நினைவுகூர நமக்கு உதவுகிறது. நம்மில் அநேகர் அக்காட்சிகளை நமது நினைவில் வைத்திருக்கிறோம். ஒருமுறை நான் என் மனைவியுடன் எருசலேம் கல்லறையின் வெளியே நின்றுகொண்டிருந்தேன். சிலுவையிலறையப்பட்ட இரட்சகர் உயிர்த்தெழுந்த ஜீவிக்கும் கர்த்தராக வெளிவந்த கல்லறை அது என நான் நம்புகிறேன்.

அந்த மரியாதையுள்ள வழிகாட்டி தன் கைகளால் சமிக்ஞை காட்டி, எங்களிடம் சொன்னார், “வாருங்கள், காலியான கல்லறையைப் பாருங்கள்.”

நாங்கள் நுழைய குனிந்தோம். ஒரு சுவரருகில் ஒரு கல்லாலான பெஞ்சைப் பார்த்தோம். ஆனால் அன்று நாங்கள் பார்த்ததைப்போல உண்மையாகவே என் மனதுக்குள் மற்றொரு படம் வந்தது. அது அப்போஸ்தலர்களால் கல்லறையில் விட்டுச் செல்லப்பட்ட மரியாள். நான் அங்கு இருந்தது போலவே, தெளிவாக என் மனதுக்குள் பார்க்கவும் கேட்கவும் அனுமதித்த அதுவே அந்த ஆவி:

“மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அப்படி அழுது கொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,

“இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள் தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனும் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.

“அவர்கள் அவளை நோக்கி, ஸ்திரீயே ஏன் அழுகிறாய் என்றார்கள், அதற்கு அவள் என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

“இவைகளைச் சொல்லி பின்னால் திரும்பி இயேசு நிற்கிறதைக் கண்டாள். ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

“இயேசு அவளைப்பார்த்து, ஸ்திரீயே ஏன் அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய் என்றார், அவள் அவரை தோட்டக்காரர் என்று எண்ணி, ஐயா நீர் அவரை எடுத்துக்கொண்டு போனது உண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும். நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.

“இயேசு அவளை நோக்கி மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து ரபூனி என்றாள். அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

“இயேசு அவளை நோக்கி என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்துக்கு ஏறிப்போகவில்லை, நீ என் சகோதரரிடத்துக்குப் போய், நான் என் பிதாவினிடத்துக்கும், உங்கள் பிதாவினிடத்துக்கும், என் தேவனிடத்திற்கும், உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு, என்றார். (யோவான் 20:11–17).

மரியாள் கல்லறையில் என்ன உணர்ந்தாள் மற்றும் உயிர்த்தெழுந்த இரட்சகருடன் அவர்கள் நடந்தபோது, எம்மாவுக்குப் போகும் சாலையில் அந்த இரண்டு சீஷர்களும், அவரை எருசலேமுக்குப்போகும் வழிப்போக்கர்கள் என நினைத்து என்ன உணர்ந்தார்களோ, அதையே உணர அனுமதிக்குமாறு நான் ஜெபித்தேன்.

“அவர்கள் அவரை நோக்கி, நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்.

“அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.

“அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அவர்கள் அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்து போனார்.

“அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக் காட்டினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டனர். (லூக்கா 24:29–32).

70 வருடங்களுக்கு முன், அந்த வார்த்தைகளில் சில, நான் கலந்து கொண்ட திருவிருந்து கூட்டத்தில் திரும்ப திரும்ப பாடப்பட்டன. அந்த நாட்களில் திருவிருந்து கூட்டங்கள் மாலையில் நடத்தப்பட்டன. வெளியே இருட்டாக இருந்தது. கூட்டம் அந்த பரிட்சயமான வார்த்தைகளைப் பாடியது. அவற்றை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால் எனது நீடித்த நினைவு, ஒரு குறிப்பிட்ட நாளின் உணர்வைப்பற்றியது. அது என்னை இரட்சகருக்கு நெருக்கமாக இழுக்கிறது. ஒருவேளை அந்த வார்த்தைகளை நான் சொன்னால் அது நம் அனைவருக்கும் திரும்ப வரும்:

என்னோடிரும், இது மாலை நேரம்.

இன்று கடந்து விட்டது;

மாலை நிழல் விழுகிறதே;

இரவு வருகிறது.

என் இதயத்தில் விருந்தினராய்,

என் வீட்டிலிரும்.

என்னோடிரும் இது மாலை நேரம்,

இன்று என்னோடு நடவும்

என்னிதயத்தை எரிய விட்டீர்,

உம்மோடு பேசுகையில்.

உம் வார்த்தை என்னை நிரப்பியது

உம்மருகில் என்னை வைத்தீர்.

இரட்சகரே இன்றிரவு தங்கும்.

இதோ, மாலை நேரம்.

இரட்சகரே இன்றிரவு தங்கும்.

இதோ மாலை நேரம். 1

நிகழ்வுளை விட மிக அருமையான நினைவு, பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களைத் தொட்டு, சத்தியத்தைத் தொடர்ந்து உறுதி செய்வதாகும். நம் கண்களால் பார்க்கிற அல்லது பேசப்பட்ட மற்றும் வாசிக்கப்பட்ட வார்த்தைகளை விட அருமையானது, ஆவியின் அமர்ந்த குரலைத் தொடர்ந்து வரும் உணர்வுகளை நினைப்பதாகும். எம்மாவுக்குச் சென்ற சாலையில் சென்ற பயணிகள் இருதயத்தில் மென்மையாக ஆனால் தவறில்லாமல் எரிந்தது போல, அண்மையில் நான் அதை உணர்ந்திருக்கிறேன். அடிக்கடி அது இலகுவான உறுதியான உணர்வாகும்.

அந்த வரத்தை எப்படி கேட்பது என நமக்கு உண்மையான வழிகாட்டுதல்கள் இருப்பது மற்றும், பரிசுத்த ஆவியானவரை தோழனாக பெறும் விலையில்லா வாக்குத்தத்தம் நமக்கிருக்கிறது. இந்த வார்த்தைகள் நமது தலையில் அவரது கைகளை வைத்து கர்த்தரின் அதிகாரமளிக்கப்பட்ட ஊழியரால் சொல்லப்படுகின்றன. “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.” அந்த தருணத்தில் அவர் அனுப்பப்படுவார் என்ற உறுதி உங்களுக்கும் எனக்கும் உண்டு. ஆனால் நமது பொறுப்பு வாழ்நாள் முழுவதும் ஆவியின் ஊழியத்தைப் பெற நமது இருதயங்களைத் திறந்து வைக்க தெரிந்து கொள்வதுதான்.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் அனுபவங்கள் ஒரு வழிகாட்டுதல் கொடுக்கின்றன. அவர் செல்ல வேண்டிய பாதை என அறிய அவரது சொந்த ஞானம் போதுமானதில்லை என்ற முடிவுடன்தான் அவர் தன் ஊழியத்தைத் தொடங்கி தொடர்ந்தார். அவர் தேவனுக்கு முன்பாக தாழ்மையாக இருக்க தெரிந்துகொண்டார்.

அடுத்து, தேவனிடம் கேட்க ஜோசப் தெரிந்து கொண்டார். தேவன் பதிலளிப்பார் என்ற விசுவாசத்துடன் அவர் ஜெபித்தார். அவர் ஒரு வாலிபனாக இருக்கும்போது அப்பதில் வந்தது. தேவன் தனது சபையை எப்படி ஸ்தாபிப்பார் என அறிய அவர் விரும்பியபோது செய்திகள் வந்தன. பரிசுத்த ஆவியானவர் அவரை வாழ்நாள் முழுவதும் தேற்றி வழிநடத்தினார்.

அது கடினமாக இருந்தபோது உணர்த்துதலுக்கு கீழ்ப்படிந்தார். உதாரணமாக, அவர்கள் அவருக்கு மிக அவசியம் தேவைப்பட்டபோது, பன்னிருவரை இங்கிலாந்துக்கு அனுப்ப அவர் வழிநடத்துதல் பெற்றார். அவர் அவர்களை அனுப்பினார்.

அவர் சிறையிலடைக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டபோது அவர் ஆவியானவரிடமிருந்து திருத்தத்தையும் ஆறுதலையும் ஏற்றுக்கொண்டார். கார்த்தேஜுக்கு செல்லும்போது கூட, பூலோகத்தில் அபாயத்தை எதிர்கொள்கிறார் என அறிந்தும் அவர் கீழ்ப்படிந்தார்.

தொடர்ந்த ஆவிக்குரிய வழிநடத்தல்களும், ஆறுதலும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து எப்படி பெறுவது என தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் ஒரு உதாரணம் ஏற்படுத்தினார்.

அவர் செய்த முதல் தேர்வு தேவனுக்கு முன்பாக தாழ்மையாயிருப்பது ஆகும்.

இரண்டாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் ஜெபிப்பது.

மூன்றாவது அப்படியே கீழ்ப்படிவது. கீழ்ப்படிதல் என்பது வேகமாக செயலாற்றுவதாக இருக்கலாம். ஆயத்தமாக என்பதாகவும் இருக்கலாம். அல்லது மேலும் வழிநடத்துதலுக்காக பொறுமையோடு காத்திருப்பதாக இருக்கலாம்.

நான்காவது, பிறரின் தேவைகளையும் இருதயத்தையும் அறியவும், கர்த்தருக்காக அவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என அறிய ஜெபிப்பதாகும். அவர் சிறையிலிருந்தபோது கஷ்டத்திலிருந்த பரிசுத்தவான்களுக்காக ஜோசப் ஜெபித்தார். தேவனின் தீர்க்கதரிசிகள் ஜெபிக்கும்போதும், உணர்த்துதலுக்காக கேடகும்போதும், வழிநடத்தப்பட்டு செயல் படுத்தும்போதும் கவனிக்கும் சந்தர்ப்பம் எனக்கிருந்தது.

அவர்களது ஜெபங்கள் எவ்வளவு அடிக்கடி தாங்கள் நேசிக்கிற மற்றும் சேவை செய்கிற ஜனங்களைப்பற்றி இருந்தது என நான் பார்த்திருக்கிறேன். பிறர் மீது அவர்களது அக்கறை, உணர்த்துதல் பெற அவர்களது இருதயங்களைத் திறந்தது போல் தெரிகிறது. உங்களுக்கும் அது உண்மையாக இருக்கலாம்.

உணர்த்துதல், கர்த்தருக்காக பிறருக்கு ஊழியம் செய்ய நமக்கு உதவும். என்னைப்போல நீங்களும் உங்கள் அனுபவத்தில் அதைப் பார்த்திருக்கிறீர்கள். தன் வாழ்க்கையில் என் மனைவி பெரும் அழுத்தத்தில் இருந்தபோது, எனது ஆயர் ஒருமுறை என்னிடம் சொன்னார், “தொகுதியில் உதவி தேவைப்படுகிற ஒருவரைப்பற்றி நான் கேள்விப்பட்டு, உதவ நான் செல்லும்போது, அங்கு உங்கள் மனைவி எனக்கு முன்பாக இருப்பதை ஒவ்வொரு முறையும் நான் காண்கிறேன். அவர் அதை எப்படிச் செய்கிறார்?”

கர்த்தரின் இராஜ்யத்தில் பெரிய ஊழியக்காரர்கள் போல அவர் இருக்கிறார். அவர்கள் இரண்டு காரியங்கள் செய்வது போல் தோன்றுகிறது. பெரும் தலைவர்கள் கிட்டத்தட்ட அகலாத தோழர்களாக பரிசுத்த ஆவியானவர் இருக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். கிறிஸ்துவின் பரிபூரண அன்பாகிய தயாளமாகிய வரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். கர்த்தரில் அனபினிமித்தம் அவர்களுக்கு அவர்கள் சேவை செய்வதால், அவர்களில் அந்த வரங்கள் வளர்ந்திருக்கின்றன.

நமது சேவையில் ஜெபமும், உணர்த்துதலும், கர்த்தரின் அன்பும் ஒன்றாகக் கிரியை செய்யும் விதம் இந்த வார்த்தைகளில் பூரணமாக விவரிக்கப்பட்டிருக்கிறது:

“என் நாமத்தில் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால், என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

“நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்கு சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

“உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால், அதைப் பெற்றுக்கொள்ள மாட்டாது. அவர் உங்களுக்குள்ளே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருக்கிறபடியால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

“நான் உங்களைத் திக்கற்றவர்களாய் விடேன், உங்களிடத்தில் வருவேன்.

“இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் பிழைக்கிறபடியால் நீங்களும் பிழைப்பீர்கள்.

“நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை நீங்கள் அறிவீரகள்.

“என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு, அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான். என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான். நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.” (யோவான் 14:14–21).

இந்நேரத்தில் பிதா உங்களையும், உங்கள் உணர்வுகளையும் உங்களைச் சுற்றியிருக்கிறவர்களின் ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகார தேவைகளையும் அறிவார், என எனது சொந்த சாட்சியளிக்கிறேன். வரம்பெற்றிருக்கிற, ஆசீர்வாதம் கேட்கிற, அதற்குத் தகுதியாயிருக்க நாடுகிற அனைவருக்கும் பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியை அனுப்புகிறார்கள் என நான் சாட்சியளிக்கிறேன். பிதாவோ, குமாரனோ, அல்லது பரிசுத்த ஆவியானவரோ நமது வாழ்க்கையில் வலிய வருவதில்லை. நாம் தெரிந்து கொள்ள சுதந்தரவாளிகள். கர்த்தர் அனைவருக்கும் சொல்லியிருக்கிறார்

“இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன்.

“நான் ஜெயங்கொண்டு என் பிதாவுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்திலே என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்.

“ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார். (வெளிப்படுத்தல் 3:20–22).

தாராளமாக உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆவியின் குரலை நீங்கள் கேட்பீர்கள் என என் முழு இருதயத்தோடும் ஜெபிக்கிறேன். அவரைப் பெற்றுக்கொள்ள நீங்கள் எப்போதும் திறக்க வேண்டும் என ஜெபிக்கிறேன். நீங்கள் உண்மையான நோக்கத்தோடும், உணர்த்துதலுக்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசத்துடனும் கேட்டால், கர்த்தரின் வழியிலும் அவரது நேரத்திலும் நீங்கள் அதைப் பெறுவீர்கள். இளம் ஜோசப் ஸ்மித்துக்கு அவர் அதைக் கொடுத்தார். இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற தலைவர் ரசல் எம். நெல்சனுக்கும் அதைச் செய்கிறார். அவருக்காக தேவனின் பிற பிள்ளைகளுக்கு சேவை செய்ய வழியில் அவர் உங்களை வைத்திருக்கிறார். நான் என் கண்களால் பார்த்தது மட்டுமல்ல, ஆனால் என் இருதயத்தில் அதிக வல்லமையாக கிசுகிசுத்ததால் அதை நான் அறிவேன்.

உலகத்திலுள்ள தேவனின் எல்லா பிள்ளைகள் மீதும் மற்றும் ஆவி உலகத்திலுள்ள அவரது பிள்ளைகள் மீதும் பிதா மற்றும் அவரது நேச குமாரனின் அன்பை நான் உணர்ந்திருக்கிறேன். நான் பரிசுத்த ஆவியானவரின் தேறுதலையும் வழிகாட்டுதலையும் உணர்ந்திருக்கிறேன். உங்கள் தோழனாக உங்களோடு ஆவியை இடைவிடாமல் பெற்றிருக்கும் மகிழ்ச்சியைப் பெற நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. “Abide with Me; ’Tis Eventide,” Hymns, no. 165.