2010–2019
“எப்போதும் அவர்களோடிருந்து அவர்களைப் பெலப்படுத்துங்கள்”
ஏப்ரல் 2018


“எப்போதும் அவர்களோடிருந்து அவர்களைப் பெலப்படுத்துங்கள்”

ஒருவருக்கொருவர் மீது இருதயப்பூர்வமான அக்கறையின் ஆழ்ந்த ஒப்புக்கொடுத்தலுடன் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இந்த மாநாட்டை விட்டுப் போவார்கள் என்பது, இன்று நமது ஜெபமாகும்.

ரால்ப் வால்டோ எமெர்சன் சொன்னதைச் சுருக்கிச் சொன்னால், வாழ்க்கையின் மிகவும் நினைவுகூரத்தக்க தருணங்கள், நாம் வெளிப்படுத்தல் விரைவாக வருவதை உணரும்போதுதான். 1 இவ்வாரக் கடைசியில் இன்னும் எத்தனை “விரைவுகளைக்” கையாளப் போகிறோம் என எனக்குத் தெரியவில்லை. நம்மில் சிலர் பலவீனமான இருதயங்களுடையவர்கள். ஆனால் நான் அதைப்பற்றி நினைக்கும்போது, அதை நீங்கள் கவனித்துக் கொள்வீர்கள். என்ன ஒரு தீர்க்கதரிசி!

கடந்த இரவிலும், இன்று காலையும் தலைவர் நெல்சனின் அதிசயமான அறிவிப்புக்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில், தொடக்கத்திலிருந்தே இச்சபையை வழிநடத்தியிருக்கிற வெளிப்படுத்தல்களில், இந்த அனுசரிப்புகள் உதாரணங்கள் என நான் என் சொந்த சாட்சியை கூறுகிறேன். இச்சமயத்தில் அவரது பணியை விரைவுபடுத்த அவை அதிகமான சான்றாகும். 2

இக்காரியங்களின் விவரங்களை அறிய ஆவலாக இருப்பவர்கள் அனைவரும், தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள், மாநாட்டின் இக்கூட்டத்தின் நிறைவில், ஒரு ஒழுங்கு தொடங்கும், மின்னஞ்சல் விலாசம் எங்களிடமிருக்கும் சபை அங்கத்தினர் அனைவருக்கும், பிரதான தலைமையிலிருந்து ஒரு கடிதம் அனுப்புகிற முறையில் இருப்பதில்லை என்பதும் அதில் அடக்கம். அனைத்து ஆசாரியத்துவத் தலைவர்களுக்கும், துணைக்குழு தலைவர்களுக்கும் கேள்விகளும் பதில்களும் அடங்கிய ஒரு ஏழு பக்க பதிப்பு இணைக்கப்பட்டிருக்கும். கடைசியாக இச்சாதனங்கள் ministering.lds.org-ல் உடனடியாக வெளியிடப்படும். “கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்.” 3

இப்போது தலைவர் ரசல் எம். நெல்சன் எனக்கும், சகோதரி ஜீன் பி. பிங்காமுக்கும் கொடுத்துள்ள அற்புதமான பொறுப்புக்குப் போவோம். சகோதர சகோதரிகளே, குழுமங்கள் மற்றும் துணைக்குழுக்களின் பணிகள் அமைப்பு ரீதியாக முதிர்ச்சியடையும்போது, அவருடைய பூலோக ஊழியத்தின் இறுதியில் இரட்சகரால் தெளிவாகச் சொல்லப்பட்ட உண்மையான சீஷத்துவத்துக்கு எந்த இயந்திரத்தனமுமில்லாமல், வழக்கமான உணர்வில்லாமல் நாம் தனிப்பட்டவர்களாக, தனியாக எழுவதில் இது தொடருகிறது. இன்னமும் கபடமற்ற, ஒருவகையான குழப்பத்திலிருந்த சிறுமந்தையாக அவரைப் பின்பற்றுபவர்களை விட்டுப்போக அவர் ஆயத்தப்பட்டபோது, அவர்கள் செய்யவேண்டிய ஒரு டஜன் நிர்வாகப் பட்டியலை அவர் கொடுக்கவில்லை அல்லது மூன்று பிரதிகளாக நிரப்பப்பட ஒரு சில அறிக்கைகளைக் கொடுக்கவில்லை. இல்லை, அவர் ஒரு அடிப்படை கற்பனையாக அவர்களுடைய பணிகளை தொகுத்தளித்தார். அவர் சொன்னார், “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள். 4

அந்த சுவிசேஷ கருத்துக்கு நெருக்கமாய் நம்மை நகர்த்துகிற ஒரு முயற்சியில், புதிதாக அறிவிக்கப்பட்ட ஆசாரியத்துவம் மற்றும் ஒத்தாசைச் சங்க ஊழியம் செய்தலின் கருத்து பிறவற்றுடன் பின்வரும் அம்சங்களையும் கொண்டிருக்கும். அற்புதமான வெற்றியுடன் அவைகளில் சில அம்சங்களை ஏற்கனவே ஒத்தாசைச் சங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. 5

  • நாம் இனி ஒருபோதும் வீட்டுப்போதகம் மற்றும் விசாரிப்புப்போதகம் என்ற சொல்லைப் பயன்படுத்தமாட்டோம். நமது ஊழியத்தின் அதிக முயற்சி வீட்டைவிட சூழ்நிலைகளிலிருப்பது சிறிது பாகமாயிருப்பதால் கொஞ்சமும், அந்த வகையில் தேவையிருந்தால் நிச்சயமாக ஒரு பாடம் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியதிருந்தாலும் ஆயத்தப்படுத்தப்பட்ட பாடத்தால் போதித்தல் நமது தொடர்பை விவரிக்க முடியாதிருப்பதும் சிறிது பாகமாயிருப்பதாலுமே. ஆல்மாவின் காலத்தில் “அவர்கள் தங்கள் ஜனத்தைக் காத்து, நீதிக்குரிய காரியங்களால் அவர்களைப் போஷித்தார்கள்” என ஜனங்களைக்குறித்து சொல்லப்பட்டதைப்போல ஊழியத்தின் நோக்கம் இருக்கும். 6

  • முடிந்தவரை வீடுகளை நாம் சந்திப்போம், ஆனால் அதிக எண்ணிக்கை போன்ற உள்ளூர் சூழ்நிலைகள், அதிக தூரம், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் பிற சவாலளிக்கும் நிபந்தனைகள், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வீட்டையும் சந்திப்பதைத் தடுக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு பிரதான தலைமை ஆலோசனையளித்ததைப்போல, உங்களால் முடிந்த சிறப்பானதைச் செய்யுங்கள். 7 கூடுதலாக உண்மையான சந்திப்புகளுக்காக நீங்கள் ஏற்பாடு செய்திருந்தது எதுவாயிருந்தாலும், அந்த காலஅட்டவணை, தொலைபேசி அழைப்புகள், எழுதப்பட்ட குறிப்புகள், உரைகள், மின்அஞ்சல்கள், காணொலி உரையாடல்கள், சபைக்கூட்டங்களில் உரையாடல்கள், பகிர்நதுகொள்ளப்பட்ட சமுக நடவடிக்கைகள், உலகத்தின் சமுக ஊடகங்களிலிருந்து வருகிற சாத்தியங்கள் பிறசேர்க்கைகள். ஆயினும், இந்த விரிவான புதிய பார்வைக்காக, சமீபத்தில் நான் கண்ட, ஒரு வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த சோக வாசகத்தை நான் வலியுறுத்தவேண்டும். “நான் ஒலியை எழுப்பினால் நீங்கள் வீட்டில் போதிக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்று அந்த வாசகத்திலிருந்தது. தயவுசெய்து சகோதரரே, (சபையின் சகோதரர்களிடம் பேசினால் சகோதரிகள் ஒருபோதும் வருத்தப்படக்கூடாது) இந்த சரிசெய்தலில், நாம் குறைவாயில்லை, அதிகக் கவனமாகவும் அக்கறையாகவுமிருக்கவேண்டும்.

  • ஊழியத்தின், இந்த புதிய, அதிக சுவிசேஷ அடிப்படையின் கருத்துடன், அறிவிப்பு என்ன சொல்கிறதென்பதைப்பற்றி நீங்கள் குழப்பமடைகிறீர்களென நான் உணருகிறேன். நல்லது, இளைப்பாறுங்கள் ஏனெனில் என் பற்களின் தோல் தடிமனின் அளவில் மிகக்குறைவாக நான் செய்த அறிவிப்பு இந்த மாதத்தின் 31வது நாளில், இல்லை. இங்கேயும்கூட நாம் முதிர்ச்சியடைய முயல்கிறோம். தொகுதியில் ஊழியம் செய்கிற கூட்டாளிகளுடன் தலைவர்களுக்கிருந்த நேர்காணல்களின் எண்ணிக்கை, அளிக்கப்பட்ட ஒரே அறிக்கைதான் இந்த காலாண்டில் எழுதப்படுவது. அது எளிதாகத் தோன்றினாலும் என் நண்பர்களே, அந்த நேர்காணல்கள் மிகவும் முக்கியமானவை. அந்த தகவல் இல்லாமல் தன் ஜனத்தின் ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகார நிலைமைகள் பற்றி தேவையான தகவலைப் பெற ஆயருக்கு வேறு வழியில்லை. நினைவு கொள்ளுங்கள், ஊழியம் செய்யும் சகோதரர்கள் ஆயத்துக்கும் மூப்பர்கள் குழுமத் தலைவருக்கும் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள், அவர்கள் இவர்களுக்குப் பதிலாக இல்லை. ஒரு ஆயர் மற்றும் குழுமத் தலைவரின் திறவுகோல்கள் இந்த ஊழியம் செய்யும் கருத்தை விட அதிகமானவை.

  • கடந்த காலத்தில் நீங்கள் சமர்ப்பித்த எதிலிருந்தும் இந்த அறிக்கை வித்தியாசமானதால், சபைத் தலைமையகத்திலுள்ள நாங்கள், உங்கள் ஜனங்களுடன் நீங்கள் எப்படி அல்லது எங்கு அல்லது எப்போது தொடர்புகொள்கிறீர்கள் என அறிய வேண்டியதில்லை என்பதை அழுத்தமாக தெரிவிக்கிறேன் . நீங்கள் அதைச் செய்கிறீர்கள்மற்றும் உங்களால் முடிந்த எல்லாவகையிலும் அவர்களை ஆசீர்வதிக்கிறீர்கள் என மட்டுமே நாங்கள் அறியவும் கவனிக்கவும் வேண்டும்.

சகோதர சகோதரிகளே, தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியை வெளிக்காட்டவும், இலகுவாக்கும்படி ஒருவருக்கொருவரின் பாரங்களை சுமக்கவும், 8 திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும்9 ஊழியம் செய்ய, திருமணமானவர்களுக்கும், திருமணமாகாதவர்களுக்கும், பெலமானவர்களுக்கும், கலக்கமடைந்தவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், உறுதியானவர்களுக்கும் சந்தோஷமானவர்களுக்கும் துக்கமானவர்களுக்கும், சுருக்கத்தில் நம் அனைவருக்கும், சபை மொத்தமாக நமக்கு இங்கே பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு சந்தர்ப்பமிருக்கிறது. ஏனெனில் நட்பின் அன்பான கரங்களை உணரவும் விசுவாசத்தின் ஒரு உறுதியான அறிவிப்பைக் கேட்பதுவும் நம் அனைவருக்கும் தேவையாயிருக்கிறது. ஆயினும், ஒரு துணிவான புதிய பரிசுத்த வழியில் ஒருவருக்கொருவர் அக்கறையாயிருக்க இதை நாம் ஒரு அழைப்பாக பார்க்காதவரை, தலைவர் நெல்சன் இப்போது சொன்னதுபோல ஒரு புதிய பெயர், புதிய இணக்கம், சில அறிக்கைகள் நமது சேவையில் ஒரு துளிஅளவும் வித்தியாசத்தை உண்டாக்காது என நான் உங்களை எச்சரிக்கிறேன். மிக இயற்கையாக அன்பின் விதியில் வாழுதலை நோக்கி நம் கண்களை நாம் உயர்த்தும்போது, பல ஆண்டுகளாக அந்த வழியில் சேவை செய்கிற தலைமுறைகளுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். நமது சகோதரர்களோடும் சகோதரிகளோடுமிருந்து “அவர்களை பெலப்படுத்த” 10 கர்த்தரின் கற்பனையை திரளானோர் அதிகமாக பற்றிக்கொள்கிற நம்பிக்கைகளில் அத்தகைய அர்ப்பணிப்பின் ஒரு சமீபத்திய உதாரணத்தை நான் கொடுக்கிறேன்.

கடந்த ஜனுவரி 14ல் ஒரு ஞாயிறில் மாலை 5.00 மணிக்கு சிறிது நேரத்திற்குப்பின், ஆயத்துவத்தில் சேவை செய்துகொண்டிருந்த பிரெட்டின் சுறுசுறுப்பான நாளுக்குப் பின்பு, தங்களுடைய ஐந்து பிள்ளைகளை கிறிஸ்டியனின் சுறுசுறுப்பான பகல் கவனிப்புக்குப் பின், அரிசோனாவிலுள்ள டெம்பேயில் தங்கள் வீட்டில் என்னுடைய இளம் நண்பர்களான பிரெட்டும், கிறிஸ்டின் ஹாம்பிலினும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

முந்திய ஆண்டில் மார்பு புற்றுநோயிலிருந்து வெற்றிகரமாக பிழைத்து வந்ததாகத் தோன்றிய கிறிஸ்டியன் திடீரென பேச்சில்லாதவளானாள். 911 எண் அழைக்கப்பட்டு ஒரு அவசர உதவிக்குழு அவளை நினைவுக்குக் கொண்டுவர கடுமையாக முயற்சித்துக்கொண்டிருந்தனர். பிரெட், கெஞ்சி ஜெபித்துக்கொண்டிருந்தபோது, வேகமாக இரண்டுபேரை தொலைபேசியில் அழைத்தார். ஒரு அழைப்பு, பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டுதல் செய்து அவருடைய தாயாருக்கு, மற்றொன்று, அவருடைய வீட்டுப்போதகர் எட்வின் போட்டருக்கு. பின் நடந்த உரையாடல்கள் முழுமையாக பினவருபவை.

அழைப்பு அடையாளத்தை வைத்து எட்வின் கேட்டார், “பிரெட் என்ன விஷயம்?”

“நீங்கள் இங்கே, இப்போதே—நீங்கள் எனக்குத் தேவை!” என சத்தமாக பிரெட் சொன்னார்.

பிரெட் கணக்கிட முடியாத சில நிமிடங்களுக்குள், அவருடைய ஆசாரியத்துவ கூட்டாளி அவருக்குப் பக்கத்தில் பிள்ளைகளைக் கவனித்துக்கொண்டு நிற்க, பிரெட்டின் மனைவியை சுமந்து சென்ற அவசர மருத்துவ வாகனத்திற்குப் பின்னால், சகோதரர் ஹாம்பிலினை அழைத்துக்கொண்டு வண்டியோட்டிச் சென்றார். அங்கே, முதலில் அவள் கண்களை மூடி 40 நிமிடங்களுக்குக் குறைவான நேரத்தில், கிறிஸ்டின் மரித்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

பிரெட் துயரமடைய, எட்வின் அவரை கரங்களால் அணைத்துக்கொண்டு நீண்டநேரமாக, மிகநீண்டநேரமாக அவரோடு அழுதார். பின்னர், கூடிவிட்ட பிற குடும்பத்தினருடன் பிரெட் துக்கப்பட, பிரெட்டை விட்டுவிட்டு என்ன நடந்ததென ஆயருக்குக் கூறும்படியாக அவருடைய வீட்டிற்கு எட்வின் வண்டியோட்டிச் சென்றார். மருத்துவமனைக்கு ஒரு அற்புதமான ஆயர் உடனடியாகப் புறப்பட்டபோது ஹாம்லின் வீட்டிற்கு எட்வின் சென்றார். பின்னர், அவரும் வேகமாக வந்து சேர்ந்த அவரது மனைவி சார்லோட்டாவும், இப்போது தாயை இழந்த 3லிருந்து 12வயது வரையுள்ள ஹாம்பிலினின் ஐந்து பிள்ளைகளுடன் விளையாடி, அவர்கள் அவர்களுக்கு இரவு உணவைக் கொடுத்து, அவர்களுக்கு பாடல்பாடி படுக்கைக்குச் செல்ல அவர்கள் ஆயத்தப்பட உதவினார்கள்.

பின்பு பிரெட் என்னிடம் சொன்னார், “நான் அழைத்தவுடன் எட்வின் வந்தது இந்தக் கதையின் ஒரு ஆச்சரியமான பகுதியில்லையா. ஒரு அவசரத்திற்கு உதவுவதற்கு விரும்புகிற மக்கள் எப்போதுமே இருக்கிறார்கள். இல்லை, இந்தக் கதையின் ஆச்சரியப் பகுதி அவரை நான் நினைத்ததுதான். அங்கே அநேக மக்கள் சுற்றியிருந்தனர். மூன்று மைல்களுக்குக் குறைவான தூரத்தில் கிறிஸ்டினின் சகோதரர் ஒருவரும் சகோதரியும் வசித்துவந்தனர். நமக்கு ஒரு சிறந்த ஆயர், மிகச் சிறந்தவர் இருக்கிறார். ஆனால் எனக்கு உதவி தேவைப்பட்டபோது அவரை அழைக்க நான் உடனடியாக நினைத்தேன் என்ற அளவில் எட்வினுக்கும் எனக்கும் உறவிருந்தது. தேவனிடத்தில் நம்மை நெருக்கமாக கொண்டுபோக நமக்குதவுகிற அன்பு செலுத்த, சேவை செய்ய, நமது சகோதர சகோதரிகளுடன் உறவுகளை வளர்க்கவேண்டுமென்ற இரண்டாவது கற்பனையில் சிறப்பாக வாழ ஒரு அமைக்கப்பட்ட வழியை சபை நமக்களித்திருக்கிறது 11.”

இந்த அனுபவம் பற்றி எட்வின் சொன்னார், மூப்பர் ஹாலண்ட், நான் அவர்களுக்கு இருந்ததைவிட நீண்ட காலமாக பிரெட் எங்கள் குடும்பத்துக்கு வீட்டுப்போதகராக இருக்கிறார் என்பது இந்த அனைத்திலுமுள்ள விஷயம். அந்த நேரத்தில் அவரது கடமையைவிட ஒரு நண்பராக அவர் எங்களை சந்தித்தார். சுருக்கமாக, எவ்வாறு ஒரு உற்சாகமுள்ள, ஈடுபாடுள்ள ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர் இருக்கவேண்டுமென்பதற்கு அவர் ஒரு பெரிய எடுத்துக்காட்டாயிருந்தார். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் ஒரு செய்தியை எங்களுக்குக்கொண்டுவர கடமைப்பட்டவராக நான் அவரைப் பார்க்கவில்லை, என் மனைவியும் எங்கள் பையன்களும், நாங்கள், எங்களை ஆசீர்வதிக்க இந்த உலகத்தில் எதையும் செய்யக்கூடிய, தெருமூலையில் வசித்துவந்த அவரை ஒரு நண்பராக நாங்கள் நினைத்தோம். அவருக்குச் செய்யவேண்டியதில் மிகக்குறைவானதை என்னால் அவருக்கு செய்யமுடிந்ததில் எனக்கு சந்தோஷம்.” 12

சகோதர சகோதரிகளே, நமது வரலாறு முழுவதிலும் விசுவாசத்துடன் இந்த வழியில் அன்பு செலுத்தி, சேவை செய்த ஒவ்வொரு வகுப்பு ஆசிரியருக்கும் தொகுதி ஆசிரியருக்கும், வீட்டுப்போதகர்களுக்கும், விசாரிப்புப்போதகர்களுக்கும் வணக்கம் சொல்வதில் நான் உங்களோடு சேர்ந்துகொள்கிறேன். ஒருவருக்கொருவர்மீது இருதயப்பூர்வமான அக்கறையின் ஆழமான பொறுப்புடன், அப்படிச்செய்ய கிறிஸ்துவின் தூய அன்பினால் மட்டுமே ஊக்குவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆணும் பெண்ணும், நமது மூத்த இளம் ஆண்களும், பெண்களும், இந்த மாநாட்டை விட்டுப் போவார்கள் என்பது, இன்று நமது ஜெபம். நமது குறைபாடுகள் மற்றும் போதாமைகள் என நாம் அனைவரும் உணர்கிற—நம் அனைவருக்கும் இருக்கிற சவால்கள் இருப்பினும், ஜெபங்களுக்குப் பதிலளித்தல், ஆறுதலைக் கொடுத்தல், கண்ணீரைத் துடைத்தல், அவருடைய விலையேறப்பெற்ற பிள்ளைகளின் ஆத்துமாக்களை மேன்மையடையச் செய்தல் போன்ற அவருடைய தடைகளுள்ள வேலையுடன், திராட்சைத் தோட்டத்தின் கரத்தருடன்13 தோளொடு தோள் சேர்த்து தேவனுக்கு ஒரு உதவிக்கரம் கொடுப்போமாக. 14 நாம் அதைச் செய்யும்போது, நாம் எல்லோரும் இருக்க வேண்டிய விதமாக கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக அதிகமாயிருப்போம். இந்த ஈஸ்டர் ஞாயிறில் அவர் நம்மில் அன்பாயிருக்கிறதுபோல நாமும் ஒருவரிலொருவர் அன்பாயிருப்போமாக. 15 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன், ஆமென்.