2010–2019
பணியில் இளம்பெண்கள்
ஏப்ரல் 2018


பணியில் இளம் பெண்கள்

சபையில் ஒவ்வொரு இளம் பெண்ணும் மதிக்கப்பட வேண்டும், சேவை செய்ய வாய்ப்புகள் உள்ளன, இப்பணிக்கு அளிக்க தகுதியுள்ள ஒன்று அவளிடம் உண்டு என உணர வேண்டும்.

ஒரு வருடத்துக்கு முன், மாநாட்டின், பொது ஆசாரியத்துவக் கூட்டத்தில், இரட்சிப்பின் பணியில் சாதிக்க ஆரோனிய மற்றும் மெல்கிசெதேக்கு ஆசாரியத்துவம் தரித்தவர்கள் பிரிக்க முடியாத பங்காளிகள் என விவரித்து சபையின் ஆண்களுக்கு ஆயர் ஜெரால்ட் காசே பேசினார். 1 இப்பூமியில் தேவ இராஜ்யத்தைக் கட்ட அவர்கள் ஆற்றும் பங்கைப் பார்க்க ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்து இருக்கிற இளைஞர்களுக்கு உதவ அந்த செய்தி மாபெரும் ஆசீர்வாதமாக இருந்திருக்கிறது. அவர்களது இணைந்த சேவை சபையை பெலப்படுத்தி, அவர்களது சேவை எவ்வளவு மதிப்புமிக்கது மற்றும் இப்பணி எவ்வளவு மகத்துவமானது என அவர்கள் பார்க்கும்போது, நமது வாலிபர்களின் இருதயங்களில் ஆழமான மனமாற்றத்தையும் ஒப்புக்கொடுத்தலையும் கொடுக்கிறது.

இன்று எப்படி சபையின் இளம்பெண்களும் தேவைப்படுகிறார்கள் என்றும், அவரது சபையிலும் மற்றும் அவர்களது குடும்பங்களிலும் கரத்தரின் பணியை நிறைவேற்ற தேவைப்படுகிறார்கள் என நான் பேசும்போது, என் குறிப்புகள் அச்செய்திக்கு பிற்சேர்க்கையாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.

ஆயர் காசே போல என் இளம்வயதில் ஒரு நல்ல பகுதியில், சபையின் சிறிய கிளையில் வளர்ந்தேன், வழக்கமாக பெரியவர்களால் செய்யப்பட்டிருக்க வேண்டிய கடமைகளையும் அழைப்புக்களையும் நிறைவேற்ற நான் அடிக்கடி கேட்டுக்கொள்ளப்பட்டேன். உதாரணமாக சபை இதழ்களின் பிரதிநிதியாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டேன், நான் கிளையிலிருந்தவர்களை அழைத்து, அவர்களது சந்தா முடியப்போகிறது என அறியப் பண்ணினேன். கூடுதலாக இளைஞர் திட்டத்திலிருந்த நாங்கள், எங்கள் சொந்த நிகழ்ச்சிகளையும், சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்த உதவ திட்டமிட முன்வந்தோம். நாங்கள் நாடகங்கள் எழுதினோம், கிளை விழாக்களில் மகிழ்விக்க பாடல் குழு உருவாக்கினோம், அனைத்து கிளை விழாக்களிலும் முழுமையாக பங்கேற்றோம். கிளை இசை நடத்துபவராக நான் அழைக்கப்பட்டேன், ஒவ்வொரு வாரமும் திருவிருந்து கூட்டத்தில் பாடலை நடத்தினேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிளையில் அனைவருக்கும் முன் நின்று, பாடல்கள் பாட அவர்களை வழிநடத்துவது 16 வயதுடையவளுக்கு எவ்வளவு பெரிய அனுபவமாக இருந்திருக்க முடியும், என நீங்கள் கற்பனை செய்ய முடிகிறதா? நான் தேவைப்படுவதாக உணர்ந்தேன், நான் செய்ய ஏதாவது இருக்கிறது என அறிந்தேன். ஜனங்கள் அங்கிருக்க என்னை சார்ந்திருந்தனர், நான் பயன்படும் உணர்வை நேசித்தேன். அந்த அனுபவம் இயேசு கிறிஸ்து மீது என் சாட்சியைக் கட்ட உதவியது, ஆயர் காசேவுக்குச் செய்ததுபோலவே, அது என் வாழ்க்கையை சுவிசேஷ சேவையில் நங்கூரமிட்டது.

ஒவ்வொரு அங்கத்தினரும் அவன் மற்றும் அவள் இருவரும்எவ்வளவு தேவைப்படுகிறார்கள் என அறிய வேண்டும். ஒவ்வொருவரும் வழங்க முக்கியமான ஒன்றை வைத்திருக்கின்றனர், இந்த முக்கிய பணியை முன்னெடுக்க உதவுகிற தனித்துவமான திறமைகளையும் தாலந்துகளையும் கொண்டிருக்கின்றனர். நமது வாலிபர்களுக்கு எப்போதும் நன்கு பார்க்கவும், தெளிவாகவும், தெரிகிற கோட்பாடும் உடன்படிக்கைகளில் விவரிக்கப்பட்டுள்ள ஆசாரியத்துவக் கடமைகள் பெற்றுள்ளனர். அவர்கள் ஞானஸ்நானம் பெற்றதிலிருந்து, “துக்கப்படுவோரோடு துக்கப்படவும், ஆறுதல் தேவைப்படுவோருக்கு ஆறுதலளிக்கவும், மரணம் வரை எல்லா நேரங்களிலும் எல்லாவற்றிலும் நீங்கள் இருக்கிற எல்லா இடங்களிலும் தேவனின் சாட்சியாயிருக்கவும்,” இளம் பெண்கள் உடன்படிக்கையின் பொறுப்புகள் பெற்றுள்ளனர் என சபையின் இளம்பெண்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும், அவர்களது தலைவர்களுக்கும் குறைவாகத் தோன்றலாம். 2அவர்கள் வகுப்புத் தலைமைகளிலும், இளைஞர் ஆலோசனைக்குழுக்களிலும், பிற அழைப்புக்களிலும் சேவை செய்யும்போது, தொகுதிகளிலும் கிளைகளிலும் இப்பொறுப்புக்களை நிறைவேற்ற இளம்பெண்களுக்கு சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. சபையிலுள்ள ஒவ்வொரு இளம்பெண்ணும் மதிக்கப்படுவதாக உணர்ந்து, சேவை செய்ய சந்தர்ப்பங்கள் பெற்று, இப்பணிக்கு செய்ய ஏதோவொன்று தன்னிடம் இருக்கிறது என உணர வேண்டும்.

சபையை நிர்வகித்தல் என்ற கையேடு 2ல், நமது தொகுதியின் இரட்சிப்பின் பணி, “அங்கத்தினர் ஊழியப்பணி, மனம் மாறியோர் தக்கவைக்கப்படுதல், குறைவான ஆர்வமுள்ளோரை ஆர்வமூட்டல், ஆலய மற்றும் குடும்ப பணி மற்றும் சுவிசேஷத்தைப் போதித்தல்” உள்ளிட்டவை என நாம் அறிகிறோம்.3 தொகுதியில் இப்பணி தங்கள் தொகுதிகளுக்கு ஆசாரியத்துவ திறவுகோல்களைத் தரித்திருக்கும் நமது விசுவாசமிக்க ஆயர்களால் வழிநடத்தப்படுகிறது. அநேக வருடங்களாக நமது தலைமை இக்கேள்வியைக் கேட்கிறார்கள், “குறிப்பிடப்பட்டுள்ள எந்த பகுதிகளில் நமது இளம்பெண்கள் ஈடுபடுத்தப்பட முடியாது? ” பதிலானது, இப்பணியின் அனைத்து பகுதிகளிலும் செயலாற்ற அவர்களிடம் ஏதோவொன்று இருக்கிறது.

உதாரணமாக அண்மையில் நான் லாஸ் வேகாஸ் பகுதியில் தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாற்று ஆலோசகர்களாக அழைக்கப்பட்ட பல இளம் பெண்களை சந்தித்தேன். தங்கள் தொகுதி அங்கத்தினர்கள் அவர்களது முன்னோர்களை கண்டுபிடிக்க கற்பிக்கவும் உதவவும் முடிந்ததற்காக அவர்கள் உற்சாகத்தால் பிரகாசித்தனர். அவர்கள் மதிப்புமிக்க கணினி அறிவு பெற்றிருந்தனர், குடும்ப தேடலை எப்படி பயன்படுத்துவது என அறிந்திருந்தனர், பிறருடன் அந்த அறிவை பகிர உற்சாகமுடனிருந்தார்கள். ஆலயத்தில் அவர்களுக்காக அத்தியாவசிய இரட்சிக்கும் நியமங்கள் நிறைவேற்றப்படும்படிக்கு, நமது மரித்த முன்னோர்களின் பெயர்களை தேடுவதன் முக்கியத்துவம் பற்றிய புரிதலும் சாட்சிகளும் பெற்றிருந்தார்கள் என்பது தெளிவானது.

பல மாதங்களுக்கு முன்பு, ஒரு கருத்தை இரண்டு 14 வயது இளம்பெண்களிடம் சோதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு உண்மையான தொகுதி ஆலோசனைக்குழு நிகழச்சி நிரல் பிரதிகளை பெற்று எம்மாவுக்கும் மாகிக்கும் ஆளுக்கொரு பிரதி கொடுத்தேன். அவர்களை நிகழ்ச்சி நிரலை வாசிக்கச்சொல்லி தொகுதி ஆலோசனைக்குழுவிலுள்ள செயல் திட்டங்களில் அவர்கள் செய்யக்கூடிய எதாவது இருக்கிறதா எனக் கேட்டேன். தொகுதிக்கு ஒரு புதிய குடும்பம் வருகிறார்கள் என எம்மா கண்டு, அவர்கள் வரவும் பெட்டிகளைப் பிரிக்கவும் தான் உதவ முடியும் என்று சொன்னாள். குடும்பத்திலுள்ள பிள்ளைகளுடன் சிநேகம் ஏற்படுத்தி, புதிய பள்ளியை அவர்களுக்கு சுற்றிக்காட்டலாம் என அவள் நினைத்தாள். ஒரு தொகுதி இரவு விருந்து வரவிருக்கிறது, தனது சேவைகளைக் கொடுக்க பல வழிகள் உள்ளன என கண்டாள்.

தொகுதியில் சந்திப்புகளும் ஐக்கியமும் தேவைப்படுகிற பல வயதான ஜனங்கள் இருக்கிறார்கள் என மாகி கண்டாள். இந்த வயதான அற்புதமான அங்கத்தினர்களுக்கு உதவ சந்திக்க தான் விரும்புவதாக அவள் சொன்னாள். சமூக ஊடக கணக்குகளை எப்படி உருவாக்கி பயன்படுத்தலாம் என அங்கத்தினர்களுக்கு தன்னால் உதவ முடியும் என அவள் நினைத்தாள். அந்த நிகழ்ச்சி நிரலில் ஒன்று மட்டும் இல்லை, இந்த இரண்டு இளம்பெண்களும் எதற்கு உதவி செய்ய முடியாதென்பது.

தொகுதி ஆலோசனைக்குழுவிலுள்ளோர் அல்லது தொகுதியில் எந்த அழைப்பிலும் இருப்பவர்கள், நமது தொகுதிகளுக்குள் உள்ள அநேக தேவைகளை நிரப்ப இந்த இளம்பெண்கள் மதிப்பு மிக்க ஆதாரங்களாக பார்க்கிறார்களா, யாராவது உதவ தேவைப்படுகிற ஒரு நீண்ட பட்டியல் வழக்கமாக இருக்கிறது, தொகுதியின் வயது வந்தவர்கள் மட்டுமே அந்த தேவைகளை நிறைவேற்ற முடியும் என நாம் அடிக்கடி நினைக்கிறோம். நமது ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்தவர்கள் தங்கள் தகப்பன்களுடனும், பிற மெல்கிசெதேக்கு ஆசாரியத்துவ மனிதர்களுடனும் பிரயாசப்பட அழைக்கப்பட்டிருப்பது போல, நமது இளம் பெண்களும் தங்கள் தாய்மாருடனும் அல்லது பிற தலைசிறந்த சகோதரிகளுடனும், தொகுதி அங்கத்தினர்களின் தேவைகளுக்கு சேவை செய்யவும் பணிவிடை செய்யவும் அழைக்கப்படலாம். ஞாயிற்றுக்கிழமைகளில், சபைக்கு வருவது மட்டுமின்றி அதிகம் செய்ய அவர்கள் ஆற்றலும் ஆர்வமும், சித்தமும் உடையவர்கள்!

படம்
பல சரக்கு வாங்க உதவும் இளம்பெண்
படம்
சேவை செய்யும் இளம்பெண்
படம்
கணினியில் உதவிசெய்யும் இளம்பெண்
படம்
சுத்தம் செய்யும் இளம்பெண்
படம்
இசையை வழிநடத்தும் இளம்பெண்
படம்
கற்பிக்கும் இளம்பெண்
படம்
உதவும் கரங்கள் மேலாடையுடன் இளம்பெண்
படம்
இளம் பெண் சபையில் வரவேற்றல்

வருங்காலத்தில் நமது இளம்பெண்கள் வகிக்க எதிர்பார்க்கிற பாத்திரங்களை நாம் கருத்தில் கொள்ளும்போது, ஊழியக்காரர்களாகவும், சுவிசேஷ பண்டிதர்களாகவும், சபை துணைக்குழுக்களில் தலைவர்களாகவும், ஆலய பணியாளர்களாகவும், மனைவிகளாகவும், அம்மாக்களாகவும், உருவாக்குபவர்களாகவும், உதாரணங்களாகவும், நண்பர்களாகவும் ஆக அந்த பாத்திரங்களில் பலவற்றை நிரப்ப இப்போதே அவர்கள் ஆரம்பிக்க முடியும். இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கள் வகுப்புக்களில் பாடம் கற்பிக்க அடிக்கடி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பு நியமப்பணியாளர்களாலும், அல்லது தன்னார்வலர்களாலும் நிறைவேற்றப்பட்டவைகளை செய்ய, மரித்தோருக்கான ஞானஸ்நானம் நிறைவேற்ற, தங்கள் இளைஞர் குழுக்களுடன் ஆலயத்துக்கு செல்லும்போது, நமது இளம் பெண்களுக்கும் இப்போது ஆலயத்திற்கு சென்று பணியாற்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. நமது ஆரம்ப வகுப்பு வயது சிறுமிகள் இப்போது ஆசாரியத்துவ மற்றும் ஆலய பரிசீலனை கூட்டங்களுக்கு அழைக்கப்படுகின்றனர். ஆசாரியத்துவத்தால் வழிநடத்தப்படுகிற பணிகளில் அவர்களும் முக்கிய பங்களிப்பவர்கள் என புரிந்துகொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது. ஆண்களும் பெண்களும், இளைஞர்களும் பிள்ளைகளும் ஆகிய அனைவரும் ஆசீர்வாதங்களைப் பெறுபவர்கள், கர்த்தருக்கு வழிநடத்தப்படுகிற பணியை முன்னெடுத்துச் செல்ல அவர்களும் முக்கிய பங்காற்ற முடியும் என கற்றுக்கொள்கிறார்கள்.

ஆயர்களே, உங்கள் கடமைகள் எப்போதும் அதிகமானவை என நாங்கள் அறிவோம். ஆனால் ஆரோனிய ஆசாரியத்துவத்துக்கு தலைமை தாங்குவது உங்கள் தலையாய முன்னுரிமைகளில் ஒன்று என்பதுபோல, கையேடு 2  விளக்குகிறது, “ஆயரும் அவரது ஆலோசகர்களும் இளம் பெண்கள் அமைப்புக்கு ஆசாரியத்துவ தலைமை வழங்குகிறார்கள். இந்த முயற்சியில் பெற்றோருடனும் இளம்பெண்கள் தலைவர்களுடனும் நெருக்கமாக பணியாற்றி, அவர்கள் தனிப்பட்ட இளம்பெண்களை கண்காணித்து, பெலப்படுத்துகிறார்கள்.” அது மேலும் சொல்கிறது, “ஆயரும் அவரது ஆலோசகர்களும், வழக்கமாக இளம்பெண்கள் கூட்டங்களிலும், சேவைகளிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்கள்.” 4 இளம்பெண்கள் வகுப்புக்கு வர நேரம் எடுத்துக்கொள்ளும், மற்றும் பணியின் பார்வையாளர்களாக இருப்பதை விட அதிகமாக, தங்கள் தொகுதிகளில் இளம்பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்குகிற ஆயர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தேவைகளை சந்திப்பதில், மதிப்புமிக்க பங்காளிகளாக இளம்பெண்களை உருவாக்குவதை உறுதி செய்கிற ஆயர்களுக்காக பரலோகத்துக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். அர்த்தமுள்ள வழிகளில் பணியாற்ற இந்த சந்தர்ப்பங்கள் அவர்களை மகிழ்விக்கிற காரியங்களை விட அதிகமாக ஆசீர்வதிக்கின்றன.

சபையின் இளம்பெண்களாகிய உங்களுக்கு, உங்கள் பதின்ம வயது ஆண்டுகள் சுறுசுறுப்பானவை, சவால் நிறைத்தவை. உங்களில் அதிகம் பேர், சுய தகுதி, கவலை, அதிக மனஅழுத்தம், சில சமயம் மனசோர்வினாலும் போராடிக்கொண்டிருப்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம். உங்கள் சொந்த பிரச்சினைகளைக் குறித்து சிந்திப்பதற்குப் பதிலாக சிந்தனைகளை திசை திருப்புவது, இப்பிரச்சினைகளைத் தீர்க்காது, ஆனால் சேவை எப்போதும் உஙகள் பாரங்களை இலகுவாக்கி, உங்கள் சவால்களை கடினமற்றவையாக்கும். சுய தகுதிகளின் உணர்வுகளை அதிகரிக்க சிறந்த வழிகளில் ஒன்று, வழங்குவதற்கு நம்மிடம் அதிக தகுதி இருக்கிறது என பிறர் மீது நமது அக்கறை மற்றும் சேவை மூலம் காட்டுவதாகும். 5 உங்களைச் சுற்றிலும் தேவைகளை நீங்கள் காணும்போது, தாமாக முன்வந்து மற்றும் அந்த கைகளை உயர்த்த நான் இளம்பெண்களாகிய உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் உங்கள் உடன்படிக்கை பொறுப்புகளை நிறைவேற்றி, தேவ இராஜ்ஜியத்தை கட்டுவதில் பங்கேற்கும்போது, ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்க்கையில் நிறையும், நீங்கள் சீஷத்துவத்தின் ஆழமான நீடித்த சந்தோஷத்தை காண்பீர்கள்.

சகோதர சகோதரிகளே, நமது இளம்பெண்கள் பிரமிக்கத்தக்கவர்கள். அவர்கள் தாலந்துகளும், அளவற்ற உற்சாகமும், ஆற்றலும், உள்ளவர்கள், மனதுருக்கமும் பரிவும் உள்ளவர்கள். அவர்கள் சேவை செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் மதிக்கப்படுகிறார்கள், இரட்சிப்பின் பணியில் அவசியமானவர்கள் என அவர்கள் அறிய வேண்டும். வாலிபர்கள் மெல்கிசெதேக்கு ஆசாரியத்துவத்துக்கு முன்னேறும்போது, உயர் சேவைக்கு ஆரோனிய ஆசாரியத்துவம் ஆயத்தமாக இருப்பது போல, நமது இளம்பெண்கள் உலகின் மாபெரும் பெண்கள் அமைப்பான ஒத்தாசைச் சங்கத்தின் அங்கத்தினர்கள் ஆக ஆயத்தமாகிறார்கள். தேவனின் சிலஸ்டியல் இராஜ்ஜியத்துக்கு தகுதியுடைய குடும்பங்களை வளர்க்கவிருக்கிற, மனைவிகளும் கணவர்களுமாகவும், அம்மாக்களும் அப்பாக்களுமாகவும், இந்த அழகிய, பலசாலிகளான, விசுவாசமிக்க இளம்பெண்களும் வாலிபர்களும் இணைந்து ஆயத்தமாகிறார்கள்.

 தன் பிள்ளைகளுக்கு அழியாமையும், நித்திய ஜீவனையும் கொண்டு வருவதே நமது பரலோக பிதாவின் பணி என நான் சாட்சியளிக்கிறேன். 6 இந்த மாபெரும் பணியை நிறைவேற்ற உதவ, நமது அருமையான இளம்பெண்களுக்குஒரு முக்கிய பங்கு உண்டு. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.