வேதங்கள்
ஆல்மா 6


அதிகாரம் 6

சாரகெம்லாவிலுள்ள சபை சுத்திகரிக்கப்பட்டு, சீர்திருத்தப்படுதல் – கிதியோனுக்கு ஆல்மா பிரசங்கிக்கப்போகுதல். ஏறக்குறைய கி.மு. 83.

1 இப்பொழுதும், அந்தப்படியே, ஆல்மா சாரகெம்லாவிலே ஸ்தாபிக்கப்பட்ட சபையைச் சார்ந்த ஜனங்களிடம் பேசி முடித்த பின்பு சபை நடத்தப்படவும், கண்காணிக்கப்படவும், ஆசாரியர்களையும் மூப்பர்களையும் அவன் தேவனுடைய முறைமைக்கேற்ப தன் கைகளை வைத்து நியமித்தான்.

2 அந்தப்படியே, சபையைச் சாராத யாராயிருந்தாலும், தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பினால், மனந்திரும்புதலிற்கேதுவான ஞானஸ்நானம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு, சபையினுள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

3 தங்கள் அக்கிரமங்களிலிருந்து மனந்திரும்பாமல் தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்திக்கொள்ளாமல் அதாவது தங்கள் இருதயங்களிலே மேட்டிமையாயிருக்கிற சபையைச் சார்ந்த யாராயிருந்தாலும் நிராகரிக்கப்பட்டு, அவர்களுடைய பெயர்கள் நீதிமான்களோடு எண்ணப்படாதபடிக்கு நீக்கப்பட்டன.

4 இப்படியாக அவர்கள் சாரகெம்லா பட்டணத்திலுள்ள சபையின் முறைமையை ஸ்தாபிக்கத் தொடங்கினார்கள்.

5 தேவ வசனம் யாவருக்கும் தாராளமாய் கொடுக்கப்படவேண்டுமென்பதையும், தேவ வசனத்தைக் கேட்க ஏகமாய் கூடுகிற சிலாக்கியத்தை ஒருவரிடத்திலிருந்தும் பறித்துப்போடவில்லையென்பதையும், நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமென்று மனதாயிருக்கிறேன்.

6 அன்றியும் தேவ பிள்ளைகள், தேவனை அறியாதவர்களுடைய ஆத்துமாக்களின் நலத்திற்கென அடிக்கடி ஏகமாய்க்கூடி உபவாசத்திலும், ஊக்கமான ஜெபத்திலும் தரித்திருக்கவேண்டுமென்று கட்டளையிடப்பட்டார்கள்.

7 இப்பொழுதும், அந்தப்படியே, இந்த ஒழுங்குகளை ஆல்மா செய்த பின்பு, அவன் சாரகெம்லா பட்டணத்திலிருந்த சபையைவிட்டுப் புறப்பட்டு, சீதோன் நதிக்குக் கிழக்கு திசையாய் கிதியோன் பள்ளத்தாக்கினூடாக கட்டப்பட்ட பட்டணமாகிய, பட்டயத்தினால் நிகோர் கொன்றுபோட்ட மனுஷனுடைய பெயரால் வழங்கப்பட்ட கிதியோன் எனப்பட்ட பட்டணத்தினுள் பிரவேசித்தான்.

8 ஆல்மா போய், தன் பிதாக்களால் பேசப்பட்ட வார்த்தையின் சத்தியத்தைப்பற்றிய வெளிப்படுத்தலின்படியேயும், தன்னிலிருந்த தீர்க்கதரிசன ஆவியின் படியேயும், தம் ஜனத்தை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்க வருகிற தேவகுமாரனாகிய, இயேசு கிறிஸ்துவினுடைய சாட்சியமத்தின்படியேயும், தான் அழைக்கப்பட்ட பரிசுத்த முறைமையின்படியேயும், தேவ வசனத்தை கிதியோன் பள்ளத்தாக்கிலே ஸ்தாபிக்கப்பட்ட சபையிலே அறிவிக்கலானான். இது இப்படியாக எழுதப்பட்டிருக்கிறது. ஆமென்.