“மேரி மற்றும் கரோலின் ரோலின்ஸ்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“மேரி மற்றும் கரோலின் ரோலின்ஸ்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
நவம்பர் 1830–ஜூலை 1831
மேரி மற்றும் கரோலின் ரோலின்ஸ்
வேதங்களின் மீது பெலத்த அன்பு
ஊழியக்காரர்கள் முதன் முதலில் கர்த்லாந்து, ஒஹாயோவுக்குச் சென்றபோது மேரி ரோலின்ஸுக்கு 12 வயது. அவர்கள் மார்மன் புஸ்தகத்தைப் பற்றிப் பேசுவதை அவள் கேட்டாள். அந்த நேரத்தில், கர்த்லாந்தில் புஸ்தகத்தின் ஒரே ஒரு பிரதி மட்டுமே இருந்தது, ஐசக் மோர்லி என்ற சபைத் தலைவரிடம் அது இருந்தது.
மேரி சகோதரர் மோர்லியின் வீட்டிற்குச் சென்று அந்தப் புஸ்தகத்தைப் பார்க்க வேண்டுமென கேட்டாள். சகோதரர் மோர்லி அவள் பிடிக்க அனுமதித்தார். மேரி அதை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமா என்று கேட்டாள்.
சகோதரர் மோர்லி தனது புஸ்தகத்தின் பிரதியை மேரியிடம் கொடுக்க விரும்பவில்லை. அவர் இன்னும் அதை அதிகமாகப் படிக்கவில்லை. மேரி அதைக் கடனாக வாங்க அனுமதிக்குமாறு சகோதரர் மோர்லியிடம் கெஞ்சினாள்.
சகோதரர் மோர்லி சம்மதித்தார். மறுநாள் சீக்கிரம் கொண்டு வருவதானால் மேரி புஸ்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்று அவர் கூறினார். மேரி அதை ஒரு பொக்கிஷம் போல கருதினாள். அவள் இரவில் பெரும்பாலான நேரம் விழித்திருந்து படித்துக் கொண்டிருந்தாள்.
மேரி புஸமதகத்தைத் திருப்பிக் கொடுத்தபோது, சகோதரர் மோர்லி அவள் எவ்வளவு படித்திருக்கிறாள் என்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். “குழந்தாய்,” அவர் கூறினார், “இந்தப் புஸ்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து முடி.” நான் காத்திருக்க முடியும்.”
கர்த்லாந்தில் மார்மன் புஸ்தகத்தை முழுவதுமாகப் படித்த முதல் நபர் மேரி ஆவாள். அவள் முடித்தவுடன், அவள் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தை சந்தித்தாள். மேரி மார்மன் புஸ்தகத்தை எவ்வளவு நேசிக்கிறாள் என்பதைக் கண்டறிந்ததும், சகோதரர் மோர்லியின் பிரதியை அவள் வைத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார். அவர் சகோதரர் மோர்லிக்கு இன்னொன்றைக் கொடுப்பார்.
அந்த ஆண்டின் பிற்பகுதியில், மேரியும் அவளது குடும்பத்தினரும் மிசௌரியின் இண்டிபெண்டன்ஸுக்கு குடிபெயர்ந்தனர். சபைத் தலைவர்கள் கட்டளைகளின் புத்தகம் என்றழைக்கப்பட்ட புதிய புத்தகத்தை ஒன்றாக இணைக்கத் தொடங்கியதைப் பார்த்து அவள் உற்சாகமாக இருந்தாள். இந்தப் புத்தகத்தில் இயேசு கிறிஸ்து ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுத்த பல வெளிப்பாடுகள் இருக்கும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 67; 70:1–4; Saints, 1:178
ஆனால் இண்டிபெண்டன்சில் இருந்த சிலருக்கு சபையைப் பிடிக்கவில்லை. அவர்கள் பரிசுத்தவான்கள் வெளியேற வேண்டும் என்று விரும்பினர். ஒரு நாள், கோபக்கார மனிதர்கள் கட்டளைகளின் புத்தகம் அச்சிடப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அச்சு இயந்திரத்தை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டு, கட்டளைகளின் புத்தகத்தின் பக்கங்களை தெருவில் சிதறடித்தனர்.
Saints, 1:177–78
மேரியும் அவளுடைய சகோதரி கரோலினும் ஒரு வேலிக்குப் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பு அவற்றைப் பெற விரும்புவதாக மேரி கரோலினிடம் கூறினாள். கரோலின் கோபக்கார ஆண்களைப் பார்த்து பயந்தாள். “அவர்கள் நம்மைக் கொன்றுவிடுவார்கள்,” என்று அவள் சொன்னாள். ஆனால் அந்தப் பக்கங்களில் தேவனுடைய வார்த்தை இருப்பதை மேரியும் கரோலினும் அறிந்திருந்தார்கள்.
Saints, 1:178
அந்த மனிதர்கள் பார்க்காத வரை சகோதரிகள் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் தெருவுக்குள் ஓடி, தங்களால் பிடிக்க முடிந்தவரை பல பக்கங்களை எடுத்தனர். அவர்கள் விரைந்து சென்றபோது, சில மனிதர்கள் அவர்களைப் பார்த்து, நிற்குமாறு கத்தினர். மேரியும் கரோலினும் பக்கங்களை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, அருகிலுள்ள சோள வயலுக்குள் வேகமாக ஓடினார்கள்.
Saints, 1:178–79
இரண்டு ஆண்கள் சகோதரிகளை சோள வயலுக்குள் துரத்தினர். சோளம் மிக உயரமாக இருந்ததால், அவர்கள் எங்கு செல்கிறார்கள் என மேரியும் கரோலினும் பார்க்க முடியவில்லை. அவர்கள் தரையில் விழுந்து பக்கங்களைத் தங்கள் உடல்களுக்குக் கீழே மறைத்துக்கொண்டனர். இரண்டு ஆண்களும் சோள வயலின் வழியாக நடந்து சென்று அவர்களைத் தேடிச் செல்வதை அவர்கள் அமைதியாகக் கேட்டார்கள்.
Saints, 1:179
விரைவில் அந்த ஆண்கள் முயற்சியைக் கைவிட்டனர். மேரியும் கரோலினும் பாதுகாப்பாக இருந்தனர். அவர்கள் கட்டளைகளின் புத்தகத்திற்காக கர்த்தருடைய வெளிப்பாடுகளின் பக்கங்களைப் பாதுகாத்து விட்டனர். இன்று அந்த வெளிப்பாடுகள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் புத்தகத்தில் உள்ளன.
Saints, 1:179