வேதக் கதைகள்
ஜோசப்பும் எம்மாவும்


“ஜோசப்பும் எம்மாவும்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“ஜோசப்பும் எம்மாவும்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

1825–1828

3:45

ஜோசப்பும் எம்மாவும்

மார்மன் புஸ்தகத்தை உலகிற்கு கொண்டு வர ஒன்றாக பணி செய்தல்

எம்மா ஹேல் தனது வீட்டிற்கு அருகில் ஒரு ஆற்றின் அருகே அமர்ந்திருத்தல்

ஜோசப் ஸ்மித் வாழ்ந்த நியூயார்க்கிலிருந்து வெகு தொலைவில் இல்லாத பென்சில்வேனியாவில் ஒரு பெரிய குடும்பத்தில் எம்மா ஹேல் வளர்ந்தாள். எம்மாவும் அவளது குடும்பத்தினரும் தேவனை நம்பினர். எம்மாவுக்கு வாசிப்பதும், பாடுவதும், குதிரையில் சவாரி செய்வதும், தனது வீட்டின் அருகில் இருந்த ஆற்றில் படகு ஓட்டுவதும் பிடிக்கும்.

Saints, 1:31-32

ஜோசப் ஸ்மித்தும் அவரது தந்தையும் எம்மா ஹேலின் வீட்டிற்கு அருகே நடந்து செல்லுதல். எம்மா ஜன்னலின் வழியே ஜோசப்பை கவனித்தல்.

எம்மாவுக்கு 21 வயதாக இருந்தபோது, ஜோசப் ஸ்மித்தும் அவரது தந்தையும் எம்மாவின் அண்டை வீட்டாரில் ஒருவருக்கு வேலை செய்ய வந்தனர். எம்மாவின் தந்தை அவர்களை தனது வீட்டில் தங்க அழைத்தார்.

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:56–57; Saints, 1:31–32

எம்மாவின் வீட்டிற்கு வெளியே ஜோசப்பும் எம்மாவும் சேர்ந்து பேசிக்கொண்டிருத்தல். எம்மாவின் பெற்றோர் வீட்டு வாசலில் இருக்கிறார்கள்.

ஜோசப்பும் எம்மாவும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டனர். அவர்கள் ஒன்றாக இருப்பதை விரும்பினர். ஆனால் எம்மாவின் பெற்றோருக்கோ ஜோசப்பை பிடிக்கவில்லை. அவர் ஒரு தூதனைக் கண்டதை அவர்கள் நம்பவில்லை.

Saints, 1:32-33

எம்மாவும் ஜோசப் ஸ்மித்தும் ஒன்றாக குதிரை இழுக்கும் சறுக்கு வண்டியில் சவாரி செய்தல்.

சுமார் ஒரு வருடம் கழித்து, ஜோசப் எம்மாவை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். எம்மாவும் ஜோசப்பும் ஒருவரையொருவர் நேசித்தார்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்டு ஜோசப்பின் பெற்றோருடன் நியூயார்க்கில் வசிக்கச் சென்றனர்.

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:57–58; Saints, 1:34–35

எம்மாவும் ஜோசப் ஸ்மித்தும் குதிரை வண்டியில் காட்டுக்குள் செல்லுதல்.

மரோனி ஜோசப்பிடம் தங்கத் தகடுகளைப் பற்றிச் சொல்லி நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. நேரம் வந்ததும், எம்மாவும் ஜோசப்பும் தகடுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மலைக்குச் சென்றனர்.

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:59; Saints, 1:36 –37

மரோனி ஜோசப் ஸ்மித்திடம் தங்கத் தகடுகளைக் கொடுத்தல்.

தூதன் மரோனி ஜோசப்பை மலையில் சந்தித்து தகடுகளைக் கொடுத்தார். தகடுகளைப் பராமரிக்க தன்னால் முடிந்ததைச் செய்தால், அவை பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் ஜோசப்பிடம் சொன்னார்.

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:59; Saints, 1:37 –38

ஜோசப் ஸ்மித் தங்கத் தகடுகளை சுமந்திருத்தல். ஒரு மனுஷன் அவரைத் துரத்திச் சென்று தகடுகளைப் பெற முயற்சிக்கிறான்.

ஜோசப் தங்கத் தகடுகளை வைத்திருந்ததாக மக்கள் கேள்விப்பட்டார்கள், அவர்களில் சிலர் அவரிடம் இருந்து தகடுகளைத் திருட முயன்றனர். ஜோசப் அவைகளை மறைக்க இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஜோசப் காட்டில் ஒரு மறைவிடத்திலிருந்து தகடுகளை எடுத்துச் சென்றபோது, சிலர் அவரைத் தாக்கினர். அவர் அவர்களை கீழே தள்ளிவிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு ஓடினார்.

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:60; Saints, 1:38, 40–41

ஜோசப் ஸ்மித் தங்கத் தகடுகளை வீட்டிற்கு கொண்டு வந்து, அவரது குடும்பத்தினரை தகடுகளைத் தொட அனுமதிக்கிறார்.

ஜோசப் தட்டுகளை வீட்டிற்கு கொண்டு வந்தபோது, அவரது சகோதரி அவற்றை மேசையில் ஒழுங்குபடுத்தி வைக்க உதவினார். மரோனி ஜோசப்பிடம், தகடுகளை யாரும் பார்க்க வேண்டாம் என்று சொல்லியிருந்தார், ஆனால் அவரது குடும்பத்தினர் ஒரு துணியில் போர்த்தப்பட்ட நிலையில் தகடுகளை உணர முடிந்தது.

Saints, 1:41

எம்மாவும் ஜோசப்பும் ஒரு புதிய வீட்டிற்குச் செல்லுதல்.

தங்கத் தகடுகளை மக்கள் படிக்கும்படியாக ஜோசப் மொழிபெயர்க்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். ஆனால் நியூயார்க்கில் உள்ள மக்கள் தகடுகளைத் தொடர்ந்து திருட முயன்றனர். ஜோசப் தகடுகளைப் பாதுகாப்பாக வைக்க தொடர்ந்து அவற்றை மறைத்து வைக்க வேண்டியிருந்தது. எனவே ஜோசப்பும் எம்மாவும் எம்மாவின் பெற்றோருக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் சமாதானத்தோடு தகடுகளை மொழிபெயர்க்க முடியும் என்று நம்பினர்.

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1: 61– 62; Saints, 1:43, 45–46

ஜோசப் ஸ்மித் எம்மாவின் நெற்றியில் முத்தமிடுகிறார். தங்கத் தகடுகளிலிருந்து மொழிபெயர்ப்பதற்கு அவள் அவருக்கு உதவுகிறாள்.

ஜோசப் தகடுகளை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அவருக்கு உதவ தேவன் ஆயத்தப்படுத்தியிருந்த சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தினார். ஜோசப் மொழிபெயர்க்க, அவர் சொன்னதை எம்மா எழுதினார். மணிக்கணக்காக அவர்கள் ஒருங்கிணைந்து இப்பணியை செய்தார்கள். எம்மா வியந்து போனார். தன் கணவர் தேவனின் வல்லமையால்தான் மொழிபெயர்க்கிறார் என்று அவள் அறிந்திருந்தாள்.

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:35; Saints, 1:49