“ஞான வார்த்தை,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“ஞான வார்த்தை,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
பெப்ருவரி 1833
ஞான வார்த்தை
ஆரோக்கியத்திற்கான கர்த்தரின் நியாயப்பிரமாணம்
நியூவெல் மற்றும் ஆன் விட்னியின் கடையின் மேல் தளத்தில் தன்னுடன் சந்திப்புகளை நடத்த ஜோசப் ஸ்மித் சபையில் உள்ள சில ஆண்களை அழைத்தார். அங்கு அவர்கள் சுவிசேஷத்தையும் பிற தலைப்புகள் பற்றியும் கற்றுக்கொண்டார்கள், மேலும் அவர்கள் ஒரு குழுவாக ஜெபித்தார்கள். அவர்கள் இந்தக் கூட்டங்களை “தீர்க்கதரிசிகளின் குழுமம்” என்று அழைத்தனர்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:117–137; Saints, 1:166
பாடங்களின் போது பல ஆண்கள் பைப்பில் புகைத்தனர் மற்றும் புகையிலையை மென்று சாப்பிட்டனர். அந்தப் புகை காற்றை மேகமூட்டமாக்கியது, புகையிலை தரைகளில் அசுத்தம் ஏற்படுத்தியது. கூட்டங்களுக்குப் பிறகு, எம்மா ஸ்மித் அறையைச் சுத்தம் செய்ய மாடிக்குச் சென்றாள். அது மிகவும் அழுக்காக இருந்தது!
Saints, 1:167
எம்மா தரைகளை நன்கு தேய்த்தாள், ஆனால் புகையிலைக் கறைகள் போகவில்லை. அவள் ஜோசப்பிடம் அழுக்கு பற்றிப் பேசினாள்.
Saints, 1:167
எம்மா சொல்வதைக் கேட்கும் ஜோசப். அவள் சொன்னதைக் கேட்டதும், புகையிலையைப் பற்றி கர்த்தர் எப்படி உணர்வார் என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார்.
Saints, 1:167
எனவே ஜோசப் புகையிலையைப் பற்றி கர்த்தரிடம் கேட்டார். பரிசுத்தவான்களுக்கான ஞான வார்த்தை வைத்திருப்பதாகக் கர்த்தர் ஜோசப்பிடம் கூறினார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89:1–9; Saints, 1:167
பரிசுத்தவான்கள் புகைபிடிக்கவோ, புகையிலை பயன்படுத்தவோ, மது அருந்தவோ அல்லது காபி மற்றும் தேநீர் என்று பொருள்படும் “சூடான பானங்கள்” குடிக்கவோ கூடாது என்று கர்த்தர் சொன்னார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89:1–9; Saints, 1:167
தானியங்களும் பழங்களும் சாப்பிட நல்லவை என்றும் கர்த்தர் பரிசுத்தவான்களுக்குக் கற்பித்தார். அவர்கள் எப்போதாவது இறைச்சி சாப்பிடலாம் என்றும் அவர் கூறினார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89:10–17; Saints, 1:168
தம்முடைய ஞான வார்த்தைக்குக் கீழ்ப்படியத் தேர்ந்தெடுத்த பரிசுத்தவான்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று கர்த்தர் ஜோசப்பிடம் கூறினார். கர்த்தர் அவர்களுக்கு ஆரோக்கியம், அறிவு மற்றும் பலம் அளித்து ஆசீர்வதிப்பதாக வாக்குறுதி அளித்தார். கர்த்தருடைய ஞான வார்த்தையைப் பற்றி தீர்க்கதரிசிகளின் குழுமத்திலுள்ள ஆண்களிடம் ஜோசப் கூறினார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89:18–21; Saints, 1:168
கர்த்தருடைய ஞான வார்த்தைக்குக் கீழ்ப்படிய விரும்புவதைக் காட்ட, அறையில் இருந்த ஆண்கள் தங்கள் புகையிலையையும் பைப்களையும் நெருப்பில் எறிந்தனர்.
Saints, 1:168