வேதக் கதைகள்
மிசௌரியில் பிரச்சினை


“மிசௌரியில் பிரச்சினை,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“மிசௌரியில் பிரச்சினை,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

ஜூலை 1831–ஜூலை 1833

2:42

மிசௌரியில் பிரச்சினை

ஆபத்தான காலங்களில் விசுவாசத்தை பெலமாக காத்துக் கொள்ளுதல்

இண்டிப்பெண்டன்ஸில் சிலர் பரிசுத்தவான்களின் வருகையால் விரக்தியடைதல்.

மிசௌரியின் இண்டிபெண்டன்ஸில் வசிக்க பல பரிசுத்தவான்கள் வந்தனர். அவர்கள் அங்கே சீயோன் பட்டணத்தைக் கட்ட வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார். ஆனால் பரிசுத்தவான்களும் ஏற்கனவே இண்டிபெண்டன்ஸில் வாழ்ந்து கொண்டிருந்த ஜனங்களும் ஒத்துப்போகவில்லை. அவர்கள் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். நகரில் சிலர் கோபமடைந்து, பரிசுத்தவான்கள் வெளியேறச் செய்ய விரும்பினர்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 57:1–3; Saints, 1:171–74

இண்டிப்பெண்டன்ஸ் தலைவர்கள் எட்வர்ட் பாட்ரிட்ஜுடன் சந்திப்பு.

எட்வர்ட் பாட்ரிட்ஜ் இண்டிப்பெண்டன்ஸில் ஆயராக இருந்தார். அவர் நகரத் தலைவர்களுடனான ஒரு சந்திப்புக்காக வந்தார். பரிசுத்தவான்கள் இண்டிப்பெண்டன்ஸை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். பரிசுத்தவான்கள் இண்டிப்பெண்டன்ஸில் சீயோனைக் கட்ட வேண்டும் என்று தேவன் விரும்பினார் என்பதை ஆயர் பாட்ரிட்ஜ் அறிந்திருந்தார். பரிசுத்தவான்கள் வெளியேற முடியாது என அவர் சொன்னார்.

Saints, 1:176

கோபக்கார ஆண்கள் வீடுகளையும் கட்டிடங்களையும் இடித்துத் தள்ளுதல்

கோபக்கார ஆண்கள், பரிசுத்தவான்கள் கட்டிய வீடுகளையும் கட்டிடங்களையும் இடித்துத் தள்ளத் தொடங்கினர்.

Saints, 1:177–78, 182

எட்வர்ட் பாட்ரிட்ஜ் மற்றும் சார்லஸ் ஆலனைப் பிடிக்கும் ஆண்கள்.

அந்த நபர்கள் ஆயர் பாட்ரிட்ஜையும் சார்லஸ் ஆலன் என்ற மற்றொருவரையும் அவர்களது வீடுகளிலிருந்து அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரையும் நகர மையத்திற்கு இழுத்துச் சென்றனர்.

Saints, 1:179

எட்வர்டும் சார்லஸும் தார் மற்றும் இறகுகளால் மூடப்பட்டிருக்கிறார்கள்.

“என் மதத்திற்காக நான் துன்பப்பட வேண்டியிருந்தால், அது எனக்கு முன் மற்றவர்கள் செய்ததை விட அதிகமில்லை” என்று ஆயர் பாட்ரிட்ஜ் கூறினார். அந்த மனிதர்கள் ஆயர் பாட்ரிட்ஜையும் சார்லஸையும் தரையில் தள்ளினர். அவர்கள் அவர்களின் உடல் முழுவதும் சூடான தார் மற்றும் இறகுகளைப் பூசுதல்.

Saints, 1:179-80

காட்டில் மறைந்திருக்கும் வில்லியம் மெக்லெலின்.

கோபக்கார ஜனங்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி இண்டிபென்டன்ஸின் உறுப்பினரான வில்லியம் மெக்லெலின் கேள்விப்பட்டார். அவர் பயந்து காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்.

Saints,1:182

வில்லியம் தான் பிடிபட்டால் என்ன செய்வது என்று யோசித்தல்.

கோபக்கார மனிதர்கள் தன்னைக் கண்டுபிடித்தால் என்ன நடக்கும் என்று வில்லியம் யோசித்தார். மார்மன் புஸ்தகம் உண்மை என்று அவர் இன்னும் சொல்வாரா, அதற்காக அவரைக் கொல்ல முயன்றாலும் கூட?

Saints,, 1:182-83

ஆலிவர் கௌட்ரி மற்றும் டேவிட் விட்மர் வில்லியமைக் கண்டுபிடித்தல்.

வில்லியமின் நண்பர்கள் ஆலிவர் கௌட்ரி மற்றும் டேவிட் விட்மர் அவரை காட்டில் கண்டுபிடித்தனர். ஆலிவரும் டேவிட்டும் மார்மன் புஸ்தகத்தை நம்பினார்கள் என்பதை வில்லியம் அறிந்திருந்தார். ஒரு தூதன் அவர்களுக்கு தங்கத் தகடுகளைக் காட்டியிருந்தான். “சொல்லுங்கள்,” வில்லியம் அவர்களிடம் கேட்டார், “அந்த மார்மன் புஸ்தகம் உண்மையானதா?”

Saints, 1:183

ஆலிவர் மற்றும் டேவிட் தங்கள் சாட்சியத்தை வில்லியமுடன் பகிர்ந்து கொள்ளுதல்.

மார்மன் புஸ்தகம் உண்மையானது என்று ஆலிவரும் டேவிட்டும் வில்லியமிடம் சொன்னார்கள். கோபக்கார மனிதர்கள் தங்களைக் கொல்ல முயன்றாலும், தங்கள் சாட்சியங்களை ஜனங்களிடம் பகிர்ந்து கொள்வதை ஒருபோதும் நிறுத்த மாட்டோம் என்று அவர்கள் கூறினர். “நான் உன்னை நம்புகிறேன்,” என வில்லியம் கூறினார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 17:3–6; Saints, 1:183