வேதக் கதைகள்
பார்லி மன்னிப்புக் கோருதல்


“பார்லி மன்னிப்புக் கோருதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“பார்லி மன்னிப்புக் கோருதல்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

ஜனுவரி–ஜூலை 1837

4:10

பார்லி மன்னிப்புக் கோருதல்

ஒரு நண்பரின் சாட்சியம் அவரது விசுவாசத்தை வளர்க்கிறது.

தாங்க்புல் மற்றும் பார்லி பிராட் தங்களின் பிறந்த குழந்தையைத் தூக்கி வைத்திருத்தல்.

தாங்க்புல் மற்றும் பார்லி பிராட் ஆகியோருக்கு குழந்தை பிறக்கும் நேரம் வந்தபோது, ​​அவர்கள் கனடாவில் தங்கள் ஊழியத்திலிருந்து வீடு திரும்பினர். கர்த்தர் வாக்குறுதி அளித்திருந்தபடியே அவர்களுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.

Saints, 1:270

தாங்க்புலின் கல்லறையில் குழந்தையைத் தூக்கி வைத்திருக்கும் பார்லி.

சோகமாக, குழந்தை பிறந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு தாங்க்புல் இறந்தாள். அவள் இல்லாமல் குழந்தையைப் பராமரிக்க முடியாது என்பது பார்லிக்குத் தெரியும். அவர் தனது ஊழியத்தை முடிக்க கனடாவுக்குத் திரும்பிச் செல்லும்போது, ​​கர்த்லாந்தில் உள்ள ஒரு பெண்ணிடம் குழந்தையைப் பராமரிக்கச் சொன்னார்.

Saints, 1:270

புதிய வங்கியைப் பற்றி மக்களிடம் ஜோசப் ஸ்மித் பேசுதல்.

கர்த்லாந்தில், ஜோசப் ஸ்மித் தேவனின் ஊழியத்துக்காக பணம் திரட்ட ஒரு வங்கியைத் தொடங்கினார். மற்றவர்கள் கடன் வாங்க முடியும்படிக்கு மக்கள் தங்கள் பணத்தை வங்கி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆனால், பல காரணங்களால், வங்கியில் போதுமான பணம் இல்லாததால் மூட வேண்டியிருந்தது. அமெரிக்காவில் உள்ள மற்ற வங்கிகளும் தோல்வியடைந்தன.

Saints, 1:260–61, 264–68

கர்த்லாந்து ஆலயத்துக்குள் வங்கி பற்றி வாதிடும் பரிசுத்தவான்கள்.

பரிசுத்தவான்களுக்கு வாழ்க்கை கடினமாகிவிட்டது. சிலர் வேலை இழந்தனர், இப்போது உணவு அல்லது துணிகளை வாங்க போதுமான பணம் இல்லை. சிலர் ஜோசப்பின் மீது கோபமாக இருந்தனர், அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலரும் கூட. வங்கி திவாலானதால் ஜோசப் ஒரு உண்மையான தீர்க்கதரிசி அல்ல என்று அவர்கள் நினைத்தார்கள்.

Saints, 1:264–68, 272275

தனது கைக்குழந்தையை கையில் ஏந்தியிருக்கும் பார்லி.

இது நடந்து கொண்டிருக்கும்போது, ​​பார்லி தனது ஊழியத்திலிருந்து வீடு திரும்பினார். வங்கியின் பிரச்சினைகள் பார்லிக்கும் வாழ்க்கையை கடினமாக்கின. அவரிடம் தன் வீட்டுக்காக கட்டப் போதுமான பணம் இருக்காது, வாழ இடமும் இருக்காது.

Saints, 1:270–71

பார்லி ஜோசப்பிற்கு ஒரு கடிதம் எழுதுதல்.

இப்போது பார்லி ஜோசப் மீதும் கோபமடைந்தார். அவர் ஜோசப்புக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் இன்னும் மார்மன் புஸ்தகத்தை நம்புவதாக ஜோசப்பிடம் கூறினார். ஆனால் அவர் தீர்க்கதரிசியைப் பற்றி அன்பற்ற விஷயங்களையும் கூறினார். முதலில் வங்கியைத் தொடங்கியதே தவறு என்று அவர் ஜோசப்பிடம் கூறினார்.

Saints, 1:271

கனடாவிலிருந்து வந்த நண்பர்களை பார்லி வரவேற்கிறார்.

பின்னர், கனடாவிலிருந்து வந்த பார்லியின் நண்பர்கள் சிலர் கர்த்லாந்துக்கு வந்தனர். பார்லி அவர்களுக்கு சுவிசேஷம் கற்பித்திருந்தார், அவரை மீண்டும் பார்த்ததில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Saints, 1:279–80

பார்லியின் நண்பர்கள் கவனித்துக் கொண்டிருக்க, பார்லியும் மற்றவர்களும் ஜோசப்புடன் வாக்குவாதம் செய்தல்.

ஆனால் பார்லியும் இன்னும் பலரும் ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசி என்பதில் தங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

Saints, 1:279–80

ஜான் டெய்லருடன் பார்லி பேசுதல்.

கனடாவைச் சேர்ந்த பார்லியின் நண்பர்களில் ஒருவர் ஜான் டெய்லர். பார்லி அவரைப் பார்த்ததும், ஜோசப் ஸ்மித் மீது தான் மிகவும் கோபமாக இருந்ததாக ஜானிடம் கூறினார். இனிமேல் ஜோசப்பைப் பின்பற்ற வேண்டாம் என்று ஜானிடம் கூறினார்.

Saints, 1:280

ஜான் பார்லியுடன் தனது சாட்சியத்தைப் பகிர்ந்து கொள்ளுதல்.

அவர்கள் கனடாவில் இருந்தபோது, ​​ஜோசப் ஸ்மித் ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று பார்லி தனது சாட்சியத்தைப் பகிர்ந்து கொண்டதை ஜான் பார்லிக்கு நினைவூட்டினார். “எனக்கு இப்போதும் அதே சாட்சியம் இருக்கிறது,” என்று ஜான் கூறினார். “ஆறு மாதங்களுக்கு முன்பு பணி உண்மையாக இருந்திருந்தால், அது இன்றும் உண்மையாக இருக்கும்.”“ ”“ஜோசப் ஸ்மித் அப்போது ஒரு தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், இப்போதும் அவர் ஒரு தீர்க்கதரிசி.”

Saints, 1:280

கர்த்லாந்து ஆலயத்துக்குள் ஜோசப் மற்றும் பிறரை பார்லி கவனித்தல்.

பார்லி தனது நண்பர் ஜான் சொல்வது சரி என்று அறிந்தார். ஜோசப்பிற்கு எழுதிய கோபமான கடிதத்தைப் பற்றி அவர் வருத்தப்பட்டார். கர்த்தருடைய பணியைச் செய்ய ஜோசப் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதை அவர் அறிந்திருந்தார். வங்கியில் ஏற்பட்ட பிரச்சினைகள், ஜோசப் இயேசு கிறிஸ்துவின் உண்மையான தீர்க்கதரிசி அல்ல என்பதைக் குறிக்கவில்லை.

Saints, 1:283

ஜோசப்பிடம் மன்னிப்பு கேட்கும் பார்லி.

பார்லி ஜோசப்பின் வீட்டிற்குச் சென்றார். தான் சொன்ன அன்பற்ற வார்த்தைகளுக்கு வருந்துவதாக ஜோசப்பிடம் சொன்னார். ஜோசப் பார்லியை மன்னித்தார், அவருக்காக ஜெபித்தார், அவரை ஆசீர்வதித்தார். பார்லி இன்னும் பல ஊழியங்களைச் செய்து, ஜோசப் ஸ்மித் கர்த்தருடைய தீர்க்கதரிசி என்று உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குச் சொன்னார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:7–11; Saints, 1:283