வேதக் கதைகள்
ஹைரம் பேஜும் வெளிப்பாடும்


“ஹைரம் பேஜும் வெளிப்பாடும்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“ஹைரம் பேஜும் வெளிப்பாடும்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

செப்டம்பர் 1830

2:6

ஹைரம் பேஜும் வெளிப்பாடும்

தேவன் சபையை எவ்வாறு வழிநடத்துகிறார் என பரிசுத்தவான்கள் கற்றுக்கொள்ளுதல்

ஹைரம் பேஜ் தனது செய்தியை சபை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

ஹைரம் பேஜ் ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கௌட்ரிக்கு நண்பராயிருந்தார். தங்கத் தகடுகளின் எட்டு சாட்சிகளில் இவரும் ஒருவர். ஹைரமிடம் ஒரு கல் இருந்தது, சபைக்கான செய்திகளை அல்லது வெளிப்படுத்தலை அவருக்கு கொடுக்க தேவன் அதை பயன்படுத்துவதாக அவர் நம்பினார். ஆலிவரும் மற்ற பரிசுத்தவான்களும் ஹைரமின் வெளிப்படுத்தல்கள் தேவனிடமிருந்து வந்ததாக நம்பினார்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28,, பாகத் தலைப்பு; Saints, 1:97

ஜோசப் ஸ்மித்தும் மற்றவர்களும் ஹைரமின் போதனைகளைக் கேட்கிறார்கள்.

ஹைரமின் வெளிப்படுத்தல்கள் வேதவாக்கியங்களைப் போல் ஒலித்தன. ஆனால் அவை வேதாகமம் கற்பிப்பதிலிருந்து மாறுபட்டவையாயிருந்தன. அவை தீர்க்கதரிசி ஜோசப்பிற்கு கர்த்தர் சொல்லியதிலிருந்தும் மாறுபட்டவையாயிருந்தன. ஜோசப்பிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

Saints, 1:97

ஜோசப் வழிகாட்டுதலுக்காக ஜெபிக்கிறார்.

ஜோசப் இரவு முழுவதும் விழித்திருந்து தேவனிடம் உதவி கேட்டார். தவறான செயலைச் செய்தால் நண்பரின் மனது புண்படும் என்பதை பற்றியும் அவர் கவலைப்பட்டார்.

Saints, 1:97

ஜோசப் படுக்கையில் யோசிக்கிறார்.

தங்கள் சொந்த வாழ்க்கைக்கான வெளிப்படுத்தலை மக்கள்தாமே தேட வேண்டும் என்று ஜோசப் விரும்பினார். ஆனால் அனைவரும் முழு சபைக்கும் வெளிப்பாட்டைப் பெற முயற்சித்தால் அது குழப்பத்தை உருவாக்கும்.

Saints, 1:97

ஜோசப் ஆலிவர் கௌட்ரியுடன் ஒரு வெளிப்படுத்தலை பகிர்ந்து கொள்கிறார்.

இறுதியாக, ஆலிவருடன் பகிர்ந்து கொள்ள கர்த்தர் ஒரு வெளிப்படுத்தலை ஜோசப்புக்கு கொடுத்தார். முழு சபைக்குமான வெளிப்படுத்தல்களையும் கட்டளைகளையும் தீர்க்கதரிசி மட்டுமே பெற முடியும் என்று கர்த்தர் சொன்னார். இதை ஆலிவர் ஹைரமுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:2, 6–13

ஆலிவர் ஹைரம் பேஜூடன் வெளிப்படுத்தலை பகிர்ந்து கொள்கிறார்.

தனது சொந்த வாழ்க்கைக்கான வெளிப்படுத்தலை மட்டுமே ஹைரம் பெற முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார். ஆனால் சபைக்கான வெளிப்படுத்தல் கர்த்தரின் தீர்க்கதரிசிக்கு வரும். ஹைரம் ஆலிவர் சொன்னதைக் கேட்டு மனந்திரும்பினார். கர்த்தர் தனது சபையை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை பரிசுத்தவான்கள் இப்போது நன்றாக புரிந்துகொண்டனர்.

Saints, 1:98