“பூர்வீக அமெரிக்கர்களுக்கான ஒரு ஊழியம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“பூர்வீக அமெரிக்கர்களுக்கான ஒரு ஊழியம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
அக்டோபர் 1830–ஜனவரி 1831
பூர்வீக அமெரிக்கர்களுக்கான ஒரு ஊழியம்
டெலவேர் இந்தியர்கள் சுவிசேஷத்தைக் கேட்கிறார்கள்
பார்லி பிராட் ஞானஸ்நானம் பெற்ற உடனேயே, கர்த்தர் அவரை ஆலிவர் கௌட்ரி மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்ய அழைத்தார். பூர்வீக அமெரிக்கர்களுக்கு அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஊழியக்காரர்கள் ஆழமான பனியில் பல வாரங்கள் பயணம் செய்தனர். இறுதியாக, அவர்கள் டெலவேர் இந்தியர்களின் தலைவரான கிக்தாவெனுண்டை சந்தித்தனர்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:14, ; 30:5–6; 32; Saints, 1:98, 115
அந்த தலைவர் ஊழியக்காரர்களிடம் நட்புடன் இருந்தார். அவர் தனது நண்பர்களை அவர்களின் செய்தியைக் கேட்க அழைத்தார். மார்மன் புஸ்தகத்தைக் கொண்டு வருவதற்காக தானும் பார்லியும் வெகுதூரம் பயணம் செய்ததாக ஆலிவர் கூறினார். அந்த புஸ்தகம் நீண்ட காலத்திற்கு முன்பு அமெரிக்காவில் வாழ்ந்த மக்களைப்பற்றியது. இயேசு கிறிஸ்துவைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் அவர்கள் அந்த புஸ்தகத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார்.
Saints, 1:115–16
ஆலிவர் மார்மன் புஸ்தகத்தின் ஒரு பிரதியை கிக்தாவெனுண்டிடம் கொடுத்தார். அதைத் தனது மக்களுடன் பகிர்ந்து கொள்ள ஆலிவர் மற்றும் அவரது நண்பர்கள் இவ்வளவு தூரம் வந்ததற்கு நன்றி தெரிவித்தார். அவர்கள் மீண்டும் வந்து மார்மன் புஸ்தகத்தைப் பற்றி அவர்களுக்குப் படித்துக்காட்டவும், அதிகம் கற்றுக்கொடுக்கவும் விரும்புவதாக அவர் ஆலிவர் மற்றும் பார்லியிடம் கூறினார்.
Saints, 1:116–17