வேதங்கள்
3 நேபி 30


அதிகாரம் 30

பிற்காலப் புறஜாதிகள் மனந்திரும்பி, கிறிஸ்துவினிடத்தில் வந்து, இஸ்ரவேலின் வீட்டாரோடுகூட எண்ணப்படும்படியாகக் கட்டளையிடப்படுதல். ஏறக்குறைய கி.பி. 34–35.

1 புறஜாதியாரே, செவிகொடுங்கள். நான் உங்களைக் குறித்து பேசவேண்டுமென்று எனக்குக் கட்டளையிட்டிருக்கிற, ஜீவிக்கிற தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேளுங்கள். ஏனெனில் இதோ, நான் எவ்விதமாய் எழுதவேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறதாவது:

2 சகல புறஜாதியாரே, உங்கள் துன்மார்க்க வழிகளிலிருந்து திரும்புங்கள், நீங்கள் உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்று, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும்படிக்கும், இஸ்ரவேலின் வீட்டாராகிய என் ஜனத்தாரோடு நீங்கள் எண்ணப்படும் பொருட்டும், உங்களுடைய பொல்லாத கிரியைகளிலிருந்தும், உங்களுடைய பொய்கள், மற்றும் வஞ்சனைகளிலிருந்தும், உங்களுடைய வேசித்தனங்களிலிருந்தும், உங்களுடைய இரகசிய அருவருப்புகளிலிருந்தும், உங்களுடைய விக்கிரக ஆராதனைகளிலிருந்தும், உங்களுடைய கொலைகளிலிருந்தும், உங்களுடைய ஆசாரிய வஞ்சகங்களிலிருந்தும், உங்களுடைய பொறாமைகளிலிருந்தும், உங்களுடைய பிணக்குகளிலிருந்தும், உங்களுடைய எல்லா துன்மார்க்கங்களிலிருந்தும், அருவருப்புகளிலிருந்தும், மனந்திரும்பி, என்னிடத்தில் வந்து, என் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்.