என்னைப் பின்பற்றி வாருங்கள்
நவம்பர் 23–29. ஏத்தேர் 12–15: “சகலமும் விசுவாசத்தினால் நிறைவேறினது”


“நவம்பர் 23–29. ஏத்தேர் 12-15: ‘சகலமும் விசுவாசத்தினால் நிறைவேறினது’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“நவம்பர் 23–29. ஏத்தேர் 12–15” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
ஏத்தேர் ஒரு குகையினுள் பிரவேசித்தல்

ஏத்தேர் கன்மலை இடுக்கிலே மறைந்திருத்தல்–காரி எர்னெஸ்ட் ஸமித்

நவம்பர் 23–29

ஏத்தேர் 12–15

“சகலமும் விசுவாசத்தினால் நிறைவேறினது”

எண்ணங்களைப் பதிவுசெய்தல் கூடுதலான வெளிப்படுத்தலை அழைத்து உங்கள் சாட்சியைப் பெலப்படுத்தும். உங்கள் எண்ணங்களை நினைவில் வைத்திருக்கவும் வருங்காலத்தில் அவைகளை மற்றவர்களிடத்தில் பகிர்ந்துகொள்ளவும் இது உதவுகிறது.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

யாரேதியருக்கு ஏத்தேரின் தீர்க்கதரிசனங்கள் “பெரிதும், அதிசயமுமானவைகளாயிருந்தன” (ஏத்தேர் 12:5). அவன் “மனுஷனுடைய ஆரம்பத்திலிருந்து சகல காரியங்களையும் அவர்களுக்குச் சொன்னான்” (ஏத்தேர் 13:2). அவன் “கிறிஸ்துவின் நாட்களையும்” பிற்கால புதிய எருசலேமையும் முன்னதாகக் கண்டான் (ஏத்தேர் 13:4). “தேவனுடைய வலது பாரிசத்தில், ஆம், ஒரு மேன்மையான உலகத்தின் நம்பிக்கையைப்பற்றி” (ஏத்தேர் 12:4) அவன் பேசினான். ஆனால் அவனுடைய வார்த்தைகளை யாரேதியர் புறக்கணித்தனர், அதே காரணத்திற்காக, அவர்களோ “அவைகளைக் [காணாததினிமித்தம்] ” (ஏத்தேர் 12:5) தேவனுடைய ஊழியக்காரர்களின் தீர்க்கதரிசனங்களை ஜனங்கள் இன்று புறக்கணிக்கின்றனர். அவநம்பிக்கையுள்ள ஜனங்களிடத்தில் “பெரிதும் அதிசயமுமான காரியங்களைக்” குறித்து தீர்க்கதரிசனமுரைக்க ஏத்தேருக்கு விசுவாசமிருந்ததைப்போல, நம்மால் பார்க்கமுடியாத காரியங்களைப்பற்றிய வாக்குறுதிகள் அல்லது எச்சரிக்கைகளை நம்புவதற்கு விசுவாசம் வேண்டும். “எழுதுவதில் அவனுடைய பெலவீனத்தை” எடுத்துப்போட்டு, அதை பெலனாக்க கர்த்தரால் முடியுமென நம்புவதற்கு மரோனிக்கு விசுவாசமிருந்தது (ஏத்தேர் 12:23–27 பார்க்கவும்). “உறுதியுள்ளவர்களாயும், ஸ்திரமானவர்களாயும், நற்கிரியைகளில் எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருக்கப்பண்ணி, தேவனை மகிமைப்படுத்தும்படியாக நடத்திச் செல்ல” (ஏத்தேர் 12:4) நம்மை ஆக்குகிற இது, இந்த வகையான விசுவாசம். இவ்வகையான விசுவாசத்தால் “சகலமும் விசுவாசத்தினால் நிறைவேறினது” (ஏத்தேர் 12:3).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

ஏத்தேர் 12

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் பலத்த அற்புதங்களுக்கு நடத்தமுடியும்.

ஏத்தேரின் நாளில் யாரேதியரைப்போல, தேவனிலும் அவருடைய வல்லமையிலும் அவர்கள் நம்பிக்கை வைப்பதற்கு முன்பாக ஆதாரத்தைப் பார்க்க இன்று அநேக ஜனங்கள் விரும்புகிறார்கள். ஆயினும், “காணப்படாதவை நம்பப்படுவதே விசுவாசம்,” மேலும் நீங்கள் , “பரிட்சிக்கப்படும்வரைக்கும் நீங்கள் சாட்சியைப் பெறுவதில்லை” (ஏத்தேர் 12:6) என மரோனி போதித்தான்.

ஏத்தேர் 12ல் “விசுவாசம்” என்ற வார்த்தையை நீங்கள் காணும் ஒவ்வொரு முறையும் கவனித்து, விசுவாசத்தைப்பற்றி நீங்கள் கற்றுக்கொண்டவற்றை பதிவுசெய்யவும். இம்மாதிரியான கேள்விகளுக்கான பதில்களைத் தேடவும்: விசுவாசம் என்றால் என்ன? விசுவாசத்தால் நிரப்பப்பட்ட வாழ்க்கையின் கனிகள் எவை? “உங்கள் விசுவாசத்தின் பரிட்சைக்குப் பின்னர்” (ஏத்தேர் 12:6) நீங்கள் பெற்ற சாட்சிகளைப்பற்றிய உங்கள் சிந்தனைகளையும் பதிவுசெய்யலாம்.

எபிரெயர் 11; ஆல்மா 32ஐயும் பார்க்கவும்.

ஏத்தேர் 12:1–9, 28, 32

“மிகச் சிறந்த நம்பிக்கையை” நமக்கு இயேசு கிறிஸ்து கொடுக்கிறார்.

விசுவாசத்தைப்பற்றிய ஆழ்ந்த உள்ளுணர்வுகளுக்குக் கூடுதலாக, ஏத்தேர் 12ல் நம்பிக்கையைப்பற்றி சொல்ல அதிகமானவை இருக்கின்றன, “நம்பிக்கை” என்ற வார்த்தை காணப்படுகிற ஒவ்வொரு முறையும் நீங்கள் அதைக் குறித்துவைக்கலாம். நம்பிக்கை உங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? ஏத்தேர், “ஒரு மேன்மையான உலகத்தை நம்பியிருக்க” (ஏத்தேர் 12:2–5). என்ன காரணங்களிருந்தன? இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் எவ்வாறு “மிக அதிகமான நம்பிக்கையை” உங்களுக்குக் கொடுத்திருக்கிறது? (ஏத்தேர் 12:32).

மரோனி 7:40–41; Dieter F. Uchtdorf, “The Infinite Power of Hope,” Ensign or Liahona, Nov. 2008, 21–24; Preach My Gospel, 117ஐயும் பார்க்கவும்.

ஏத்தேர் 12:23–29

பெலவீனமான காரியங்களை இயேசு கிறிஸ்துவால் பெலப்படுத்த முடியும்.

மரோனியின் வல்லமையான எழுத்துக்களை நாம் வாசிக்கும்போது, அவனுடைய “எழுதுவதில் பெலவீனத்தைப்பற்றியும்”, அவனுடைய வார்த்தைகளை ஜனங்கள் கேலிசெய்வார்கள் என அவன் பயப்பட்டான் என்பதையும் மறப்பது எளிது (ஏத்தேர் 12:23–25 பார்க்கவும்). ஆனால், தாழ்மையானவர்களுக்கு அவர் “பெலவீனமுள்ளவைகளைப் பெலமுள்ளவைகளாக்குவார்” என தேவன் வாக்களித்திருக்கிறார் (வசனம் 27), மேலும், மரோனியின் எழுத்துக்களின் ஆவிக்குரிய வல்லமை, கர்த்தர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றினார் என்ற உறுதியான சான்றாயிருக்கிறது.

ஏத்தேர் 12:23–29 வாசித்த பின்பு, உங்களுடைய பெலவீனங்களைக் கண்டுபிடிக்க தேவன் உங்களுக்கு உதவிய நேரங்களையும், அவைகளிருந்தபோதிலும் உங்களை பெலப்படுத்திய நேரங்களையும் சிந்திக்கவும். தற்சமயம் நீங்கள் போராடிக்கொண்டிருக்கிற பெலவீனங்களைப்பற்றி சிந்திக்க இது ஒரு நல்ல நேரமாகவுமிருக்கலாம். கர்த்தருக்கு முன்பாக உங்களை தாழ்மைப்படுத்தவும், “பெலவீனமான காரியங்களைப் பெலப்படுத்த” அவருடைய வாக்குறுதியைப் பெறும்படியாக அவரில் விசுவாசத்தைக் காட்டவும் எது தேவையென நீங்கள் உணருகிறீர்கள்.? (ஏத்தேர் 12:27).

இந்த வசனங்களை நீங்கள் சிந்திக்கும்போது, மூப்பர் நீல் எ. மேக்ஸ்வெல்லின் பின்வரும் உள்ளுணர்வுகள் உதவிகரமாயிருக்கலாம்: “மனிதனுடைய ‘பெலவீனத்தை’ வேதங்களில் நாம் படிக்கும்போது இந்த வார்த்தை ஆவியின் மீது இடைவிடாத தாக்கத்தை மாம்சம் பெற்றிருக்கிற பொதுவான மனித நிலைமையில் உள்ள உள்ளார்ந்த பெலவீனத்தை உள்ளடக்குகிறது. (ஏத்தேர் 12:28–29 பார்க்கவும்). நாம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிற பெலவீனமும் இதேபோல், நம்முடைய குறிப்பிட்ட, தனிப்பட்ட பலவீனங்களை உள்ளடக்கியது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 66:3; யாக்கோபு 4:7)” (Lord, Increase Our Faith [1994], 84 பார்க்கவும்).

Grace,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.

ஏத்தேர் 13:13–22; 14–15

தீர்க்கதரிசிகளைப் புறக்கணித்தல் ஆவிக்குரிய அபாயத்தைக் கொண்டுவருகிறது.

வரலாற்றுப் பூர்வமாக, யாரேதியரின் இராஜாவாக இருப்பது ஒரு அபாயகரமான நிலை. “பலசாலிகளான அநேகர் எழும்பி அவனை அழிக்க வகை தேடியதில்” (ஏத்தேர் 13:15–16) குறிப்பாக கொரியாந்தமருக்கு இது உண்மையாயிருந்தது. ஏத்தேர் 13:15–22ல் அவனைப் பாதுகாத்துக்கொள்ள கொரியாந்தமர் என்ன செய்தான் மற்றும் அதற்குப் பதிலாக தீர்க்கதரிசி ஏத்தேர் அவனுக்கு என்ன ஆலோசனையளித்தான் என்பதையும் கவனிக்கவும். ஏத்தேர் புஸ்தகத்தின் எஞ்சியவற்றை நீங்கள் வாசிக்கும்போது, தீர்க்கதரிசிகளைப் புறக்கணித்தலின் விளைவுகளைப்பற்றி சிந்திக்கவும். “கர்த்தருடைய ஆவி அவர்களோடு இருப்பதிலிருந்து [நின்றுபோகும்போது]” ஜனங்களுக்கு என்ன நேரிடுகிறது? (ஏத்தேர் 15:19).

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஏத்தேர் 12:7–22

இந்த வசனங்களை நீங்கள் ஒன்றுசேர்ந்து வாசிக்கும்போது, நீங்கள் மார்மன் புஸ்தகத்தில் வாசித்த உணர்த்துதலான சில எடுத்துக்காட்டுகளை நீங்கள் மறுபரிசீலனை செய்யக்கூடும். உங்களுடைய குடும்ப வரலாற்றில் அல்லது உங்களுடைய சொந்த வாழ்க்கையில் விசுவாசத்தின் எடுத்துக்காட்டுக்களைப்பற்றி ஒரு கலந்துரையாடலுக்கு இது நடத்தலாம், நீங்கள் ஏற்கனவே செய்யாதிருந்தால் இந்த அனுபவங்களை பதிவுசெய்வதைக் கருத்தில்கொள்ளவும்.

ஏத்தேர் 12:27.

ஏன் கர்த்தர் நமக்கு பெலவீனங்களைக் கொடுக்கிறார்? “பெலவீனமான காரியங்கள் பெலப்படுத்தப்படுவதில்” நமது பங்கு என்ன? இரட்சகரின் பங்கு என்ன?

ஏத்தேர் 12:41.

“இயேசுவை … நாட” உங்களுடைய பிள்ளைகளுக்குப் போதிக்க, வேடிக்கையான வழி ஏதாவதிருக்கிறதா? இயேசுவின் படம் ஒன்றை மறைத்து வைத்து, “தேடவும்”, படத்தைக் கண்டுபிடிக்கவும் உங்கள் குடும்ப அங்கத்தினர்களை அழைப்பது ஒரு வழியாயிருக்கக்கூடும். நாம் எவ்வாறு இயேசுவைத் தேடமுடியும், நாம் அவரைக் கண்டுபிடிக்கும்போது நாம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறோம்?

ஏத்தேர்13:13–14; 15:19, 33–34

மார்மனுடனும் மரோனியுடனும் ஏத்தேரின் அனுபவங்களை ஒப்பிடுதல் உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு வேடிக்கையாக இருக்கக்கூடும் (மார்மன் 6; 8:1–10 பார்க்கவும்). அவைகள் எவ்வாறு ஒத்திருக்கின்றன? அழிவுக்கேதுவான நேபியரின் பாதை எவ்வாறு யாரேதியரின் பாதையை ஒத்திருக்கிறது? (மரோனி 8:28யுடன் ஏத்தேர் 15:19 ஐ ஒப்பிடவும்). அவர்களுக்கு நேரிட்டவைகளை தவிர்க்க நமக்குதவக்கூடிய என்ன சத்தியங்களை நாம் கற்றுக்கொண்டோம்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

கேள்விகளை ஊக்குவிக்கவும். பிள்ளைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்கள். நீங்கள் போதிக்க முயற்சி செய்துகொண்டிருப்பவைகளிலிருந்து ஒரு கவனச் சிதறலாக அவர்களுடைய கேள்விகளிருப்பதாக சிலசமயங்களில் நீங்கள் பார்க்கக்கூடும். அதற்குப் பதிலாக கேள்விகளை வாய்ப்புகளாகப் பார்க்கவும். கற்றுக்கொள்ள பிள்ளைகள் ஆயத்தமாயிருக்கிறார்கள், உங்களுடைய பிள்ளைகளின் அக்கறைகளுக்கு அவைகள் உங்களுக்கு உள்ளுணர்வைக் கொடுத்து, அவர்கள் கற்றுக்கொள்பவைகளைப்பற்றி அவர்கள் எவ்வாறு உணருகிறார்கள் என்பதற்கு அவைகள் ஒரு அறிகுறியாயிருக்கின்றன (Teaching in the Savior’s Way, 25–26 பார்க்கவும்).

படம்
ஒரு குகையின் திறப்பில் ஏத்தேர் முழங்கால்படியிடுதல்

ஏத்தேரின் தீர்க்கதரிசனங்கள் பெரிதும் அதிசயமுமானவைகள்–வால்டர் ரானே