என்னைப் பின்பற்றி வாருங்கள்
நவம்பர் 30–டிசம்பர் 6 மரோனி 1–6: “அவர்களை நல்வழியில் வைத்திருக்க”


“நவம்பர் 30–டிசம்பர் 6 மரோனி 1–6: ‘அவர்களை நல்வழியில் வைத்திருக்க’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“நவம்பர் 30–டிசம்பர் 6 மரோனி 1–6,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
மார்மன் தண்ணீர்களில் ஆல்மா ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்

மினர்வா கே. டெய்செர்ட் (1888–1976), மார்மன் தண்ணீர்களில் ஆல்மா ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல், 1949-1951, oil on masonite, 35⅞ x 48 inches. பிரிகாம் யங் பல்கலைக்கழக கலை அருங்காட்சியகம், 1969.

நவம்பர் 30–டிசம்பர் 6

மரோனி 1–6

“அவர்களை நல்வழியில் வைத்திருக்க”

“எதிர்காலத்தில் பிரயோஜனமாயிருக்குமென அவன் நம்பியிருந்தவற்றை” (மரோனி 1:4) மரோனி பதிவுசெய்தான். மரோனி 1–6ல் உங்களுக்கு பிரயோஜனமாயிருக்கிற எதை நீங்கள் கண்டீர்கள்? நீங்கள் கண்டுபிடித்ததை பதிவுசெய்து, அதை மதிப்புள்ளதாக கண்டுபிடித்த ஒருவருடன் அதைப் பகிர்ந்துகொள்வதைக் கருத்தில்கொள்ளவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

அவனுடைய தகப்பனின் பதிவேட்டை முடித்த பின்னர், யாரேதியரின் பதிவேட்டை சுருக்கி எழுதிய பின்னர், பதிவேட்டை காத்துக்கொள்ளும் வேலை முடிந்ததென முதலாவதாக மரோனி நினைத்தான் (மரோனி 1:1 பார்க்கவும்). முற்றிலும் அழிக்கப்பட்ட இரண்டு தேசங்களைப்பற்றி இன்னும் அதிகமாக சொல்ல என்னவிருக்கிறது? ஆனால் மரோனி, நமது காலங்களைப் பார்த்தான் (மார்மன் 8:35 பார்க்கவும்), மற்றும் “எதிர்காலத்தில் எப்போதாவது, பிரயோஜனமாயிருக்கும் பொருட்டு, இன்னும் சிலவற்றை எழுதும்படி”(மரோனி 1:4) அவன் உணர்த்தப்பட்டான். ஆசாரியத்துவ நியமங்களைப்பற்றியும் பொதுவாக மதத்தைப்பற்றியும் குழப்பத்தைக் கொண்டுவந்து மதமாறுபாடு வந்துகொண்டிருக்கிறதென அவன் அறிவான். திருவிருந்து, ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வரத்தை அருளுதல் மற்றும் “[நமது] விசுவாசத்தைத் துவங்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிற கிறிஸ்துவின் தகுதிகளின்மேல் மட்டுமே சார்ந்திருந்து ஒருவருக்கொருவரை சரியான பாதையில் வைத்திருக்கிற” சகவிசுவாசிகளுடன் கூடிச்சேர்தலின் ஆசீர்வாதங்களைப்பற்றிய விவரங்களை இதனால்தான் அவர் கொடுத்தார் (மரோனி 6:4. “அவன் இன்னும் சிலவற்றை எழுதும்படி” (மரோனி 1:4) மரோனியின் உயிரை கர்த்தர் பாதுகாத்தது இதைப்போன்ற விலையேறப்பெற்ற உள்ளுணர்வுகளுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்க நமக்கு காரணமாயிருக்கிறது.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மரோனி 1

எதிர்ப்பு இருந்தபோதிலும் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் விசுவாசமுள்ளவர்களாய் நிலைத்திருந்தனர்.

வசதியான ஆறுதலான காலங்களில் விசுவாசமுள்ளவர்களாயிருப்பது சில ஜனங்களுக்கு எளிதாயிருக்கிறது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக, சோதனைகளையும் எதிர்ப்பையும் நாம் எதிர்கொள்ளும்போதும் நாம் விசுவாசமுள்ளவர்களாய் நிலைத்திருக்கவேண்டும். மரோனி 1ஐ நீங்கள் வாசிக்கும்போது, கர்த்தரிடத்திலும் அவருடைய அழைப்பிற்கும் மரோனியின் விசுவாசத்தைப்பற்றி உங்களை எது உணர்த்துகிறது? அவனது எடுத்துக்காட்டை நாம் எப்படி பின்பற்ற முடியும்?

மரோனி 2–6

கர்த்தர் ஆணையிட்டதைப்போல, ஆசாரியத்துவ நியமங்கள் நிர்வகிக்கப்படவேண்டும்.

அவருடைய பூலோக ஊழியத்தின்போது, ஞானஸ்நானம் போன்ற பரிசுத்த நியமங்களை இரட்சகர் பெற்றார், நிர்வகித்தார் (மத்தேயு 3:13–17; ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, யோவான் 4:1–3 [in the Bible appendix]), priesthood ordination (மாற்கு 3:13–19), and the sacrament (மத்தேயு 26:26–28 பார்க்கவும்). எப்படியாயினும், பெரிய மதமாறுபாடால், நியமங்கள் எவ்வாறு நடப்பிக்கப்படவேண்டும் என்றும், அவைகள் தேவையா என்பதைப்பற்றியும்கூட இன்று அநேக ஜனங்கள் குழப்பத்திலிருக்கிறார்கள். அந்த குழப்பம் சிலவற்றை தெளிவுபடுத்த உதவக்கூடிய குறிப்பிட்ட ஆசாரியத்துவ நியமங்களைப்பற்றிய முக்கியமான விவரங்களை மரோனி 2–6 ல் மரோனி வழங்கினான். இந்த அதிகாரங்களில் நியமங்களைப்பற்றி நீங்கள் கற்றுக்கொள்ளும்போது, என்ன எண்ணங்கள் வருகின்றன? நீங்கள் கற்றுக்கொள்ள உதவ, பின்வருபவை நீங்கள் கேட்கக்கூடிய சில கேள்விகள்:

திடப்படுத்தல் (மரோனி 2; 6:4)திடப்படுத்தல் நியமத்தைப்பற்றி இரட்சகரின் போதனைகள் மரோனி 2:2ல் என்ன போதிக்கின்றன? “பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நடப்பிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டிருத்தல்” என்பதன் அர்த்தம் என்னவென நீங்கள் நினைக்கிறீர்கள்? (மரோனி 6:4).

ஆசாரியத்துவ நியமனம் (மரோனி 3).ஆசாரியத்துவத்திற்கு நியமிக்கப்பட ஆயத்தமாயிருக்கிற ஒருவருக்கு உதவக்கூடிய எதை இந்த அதிகாரத்தில் நீங்கள் காண்கிறீர்கள்? நியமத்தை நடப்பிக்க ஒருவருக்குதவக்கூடிய எதை நீங்கள் காண்கிறீர்கள்?

திருவிருந்து (மரோனி 4–5; 6:6).திருவிருந்து ஜெபங்களில் வாக்களிப்புகளை கவனித்து (மரோனி 4:3; 5:2 பார்க்கவும்) உங்கள் வாக்களிப்புகளை கைக்கொள்ள நீங்கள் செய்துகொண்டிருப்பவைகளைப்பற்றி தியானிக்கவும். திருவிருந்தில் நீங்கள் பங்கேற்கும்போது பரிசுத்த ஆவியின் செல்வாக்கை மிக வல்லமையாக அழைக்க நீங்கள் என்ன செய்யமுடியும்?

ஞானஸ்நானம் (மரோனி 6:1–3).நீங்கள் ஞானஸ்நானம் பெற்ற பின்புகூட, ஞானஸ்நானத்திற்காக இந்த வசனங்களில் கொடுக்கப்பட்டிருக்கிற தகுதிகளை பூர்த்தி செய்ய தொடர உங்களால் என்ன செய்யமுடியும்? இயேசு கிறிஸ்து சபையின் ஒரு அங்கத்தினராயிருப்பது என்றால் என்ன என்பதைப்பற்றி இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன ஆலோசனையளிக்கின்றன?

நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்ற அடிப்படையில், நீங்கள் சிந்திக்கிற வழிகளை, அதில் பங்கேற்பதை அல்லது இந்த நியமங்களுக்காக மற்றவர்களை ஆயத்தப்படுத்துதலைப்பற்றி நீங்கள் எவ்வாறு மாற்றுவீர்கள்? இந்த நியமங்கள், “கிறிஸ்துவின் கட்டளைகளின்படி நிர்வகிக்கப்படுவது” ஏன் முக்கியமாயிருக்கிறது? (மரோனி 4:1).

Ordinances,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.

படம்
இளம் பெண் ஆசீர்வாதம் பெறுதல்

நியமங்கள் எவ்வாறு நடப்பிக்கப்படவேண்டுமென இயேசு போதித்தார்.

மரோனி 6:4–9

ஒருவருக்கொருவரின் ஆத்துமாக்களின் நல்வாழ்வை இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் கவனித்துக்கொண்டனர்.

“[நமது] சொந்த இரட்சிப்புக்காக நாம் அனைவரும் பிரயாசப்படுவது” (மார்மன் 9:27) உண்மையாயிருக்கையில், அடிக்கடி சகவிசுவாசிகளுடன் “ஒன்றுகூடி சந்தித்தல்” “நல்வழியில்”(மரோனி 6:4–5) நம்மை வைக்க உதவுமெனவும் மரோனி போதித்தான். (மரோனி 6:4)ஐ நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவினுடைய சபையின் ஜனங்களோடே எண்ணப்பட்டதிலிருந்து வருகிற ஆசீர்வாதங்களைத் தியானிக்கவும். நீங்கள் ஒரு தலைவராக இருக்கிறீர்களோ அல்லது ஒரு பங்கெடுப்பவராக இருக்கிறீர்களோ மரோனி விவரிக்கிற ஒருவரைப்போல, சபையில் நீங்களும் மற்றவர்களுமிருக்கிற அனுபவங்களைப் பெற உங்களால் எவ்வாறு உதவமுடியும்?

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

மரோனி 1; மரோனி 6:3

“கிறிஸ்துவை மறுதலித்தல்” என்றால் என்ன அர்த்தம்? (மரோனி 1:2–3). “முடிவுபரியந்தம் அவரை சேவிக்க நமது உறுதிகொண்டிருத்தலை” எவ்வாறு நாம் காட்டமுடியும்? (மரோனி 6:3). அவரைச் சேவிப்பதற்கு உறுதிகொண்டிருந்த உங்களுக்குத் தெரிந்த ஜனங்களின் எடுத்துக்காட்டுகளைப் பகிர்ந்துகொள்ளவும்.

மரோனி 4:3; மரோனி 5:2

ஒரு குடும்பமாக திருவிருந்து ஜெபங்களை வாசித்தல், மிக பக்தியுடன் திருவிருந்தை நடத்துதலைப்பற்றிய ஒரு கலந்துரையாடலுக்கு வழிநடத்தலாம். குறிப்பாக அவர்களுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கிற இந்த ஜெபங்களிலிருந்து ஒருவேளை குடும்ப அங்கத்தினர்கள் சொற்றொடர்களை கலந்துரையாடலாம். இந்த சொற்றொடர்களைப்பற்றிய சிந்தனைகளை அவர்கள் பதிவுசெய்யலாம் அல்லது இரட்சகரைப்பற்றி சிந்திக்க அவர்களுக்குதவுகிற படம் ஒன்றை வரையலாம். அவரில் தங்களுடைய சிந்தனைகளுக்கு கவனம் செலுத்த அவர்களுக்குதவ, அவர்கள் எழுதிய அல்லது வரைந்தவற்றை திருவிருந்து கூட்டத்திற்குக் கொண்டுவரலாம். திருவிருந்தைப்பற்றியும் இரட்சகரின் தியாகத்தைப்பற்றியும் நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்களென உங்கள் குடும்பத்தினருக்குக் கூறவும்.

மரோனி 6:1–4

“நருங்குண்ட இருதயத்தையும், நொறுங்குண்ட ஆவியையும்” கொண்டிருத்தல் என்றால் என்ன அர்த்தம்? (மரோனி 6:2). ஞானஸ்நானத்திற்கு ஆயத்தப்பட இது நமக்கு எவ்வாறு உதவுகிறது? நாம் ஞானஸ்நானம் பெற்ற பின்பு நமக்கு இது எவ்வாறு உதவக்கூடும்?

மரோனி 6:4–9

இந்த வசனங்களின்படி, “கிறிஸ்துவினுடைய சபையின் ஜனங்களோடே எண்ணப்பட்டிருப்பதிலிருந்து” வருகிற ஆசீர்வாதங்கள் சில எவை? (மரோனி 6:4). நமக்கு சபை ஏன் தேவையாயிருக்கிறது?

மரோனி 6:8

மனந்திரும்புதலைப்பற்றி இந்த வசனம் என்ன போதிக்கிறது? “உண்மையான நோக்கத்தோடு” மன்னிப்பை நாடுதல் என்றால் அர்த்தம் என்ன? (மரோனி 6:8). மன்னிப்பைப்பற்றி, “Help Me, Dear Father” (Children’s Songbook, 99) போன்ற ஒரு பாடலைப் பாடுவதைக் கருத்தில்கொள்ளவும்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

தேவனின் அன்பிற்கான நிரூபணத்தைக் கண்டுபிடிக்கவும். தலைவர் எம்.ரசல் பாலர்ட் போதித்தார்,“தேவனிடத்தில் அன்பு மற்றும் ஒருவருக்கொருவரில் அன்பு என்ற அன்பின் சுவிசேஷம் சுவிசேஷமாயிருக்கிறது (“God’s Love for His Children,” Ensign, May 1988, 59). வேதங்களை நீங்கள் வாசிக்கும்போது, உங்களிடத்திலும் அவருடைய பிள்ளைகள் அனைவரிடத்திலும் தேவனுடைய அன்பின் ஆதாரங்களைக் குறிக்க அல்லது அடையாளமிடுவதை கருத்தில் கொள்ளவும்.

படம்
ஒரு குகையில் மரோனி ஒளிந்திருத்தல்

குகையில் மரோனி–ஜோர்ஜ் கோக்கோ