வேதங்கள்
மரோனி 4


அதிகாரம் 4

எப்படி மூப்பர்களும் ஆசாரியர்களும் திருவிருந்து அப்பத்தை ஆசீர்வதிக்கிறார்கள் என்பது விவரிக்கப்படுதல். ஏறக்குறைய கி.மு. 401–421.

1 அவர்களது மூப்பர்களும் ஆசாரியர்களும் சபைக்குக் கிறிஸ்துவினுடைய மாம்சத்தையும், இரத்தத்தையும் ஆசீர்வதித்துக் கொடுத்த விவரமாவது; அவர்கள் அதைக் கிறிஸ்துவினுடைய கட்டளைகளுக்குத் தக்கதாக ஆசீர்வதித்துக் கொடுத்தார்கள்; ஆதலால் அந்த முறை உண்மையென்று நாம் அறிவோம்; மூப்பனோ அல்லது ஆசாரியனோ அதை ஆசீர்வதித்துக் கொடுத்தான்.

2 அவர்கள் சபையோடு முழங்கால்படியிட்டு, கிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவினிடத்தில் ஜெபித்துச் சொன்னதாவது:

3 நித்திய பிதாவாகிய தேவனே, இந்த அப்பத்தில் பங்கெடுக்கிற யாவருடைய ஆத்துமாக்களுக்காவும், அவர்கள் உம்முடைய குமாரனுடைய சரீரத்தின் நினைவுகூருதலில் புசிக்கும்படியாகவும், அவருடைய ஆவியை அவர்கள் எப்பொழுதும் தங்களோடே கொண்டிருக்கும்படியாகவும், உம்முடைய குமாரனுடைய நாமத்தை தங்கள் மீது தரித்துக்கொள்ளும்படியாகவும், அவரை எப்பொழுதும் நினைவுகூரும்படியாகவும், தங்களுக்கு அவர் கொடுத்திருக்கிற அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்படியாகவும், சித்தமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று, நித்திய பிதாவாகிய தேவனே உம்மிடத்தில் சாட்சி பகரவும், இதை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்துமாறு உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.