என்னைப் பின்பற்றி வாருங்கள்
டிசம்பர் 21–27. கிறிஸ்துமஸ்: “அவர் தமது ஜனத்தை மீட்க உலகத்திற்கு வருவார்”


“டிசம்பர் 21–27. கிறிஸ்துமஸ்: “அவர் தமது ஜனத்தை மீட்க உலகத்திற்கு வருவார்” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“டிசம்பர் 21–27. கிறிஸ்துமஸ்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
தொழுவத்தில் யோசேப்பும், மரியாளும், குழந்தை இயேசுவும்

இதோ தேவ ஆட்டுக்குட்டி-வால்ட்டர் ரானே

டிசம்பர் 21–27

கிறிஸ்துமஸ்

“அவர் தமது ஜனத்தை மீட்க உலகத்திற்கு வருவார்”

இந்த கிறிஸ்துமஸ் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்காக நமது நன்றியறிதலை நினைக்கவும் தெரிவிக்கவும் ஒரு காலமாகும். அவரது பிறப்பு மற்றும் ஜீவியத்தைப்பற்றி நீங்கள் வாசித்து சிந்திக்கும்போது, அவரே உலகத்தின் இரட்சகர் என்ற உங்களது சாட்சியை இவ்வாண்டின் மார்மன் புஸ்தக படிப்பு எவ்வாறு பெலப்படுத்தியது என்பதைக் கருத்தில் கொள்ளவும். உங்களுக்கு வருகிற எண்ணங்களைப் பதிவு செய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

நேபியிலிருந்து மரோனிவரை ஒவ்வொரு மார்மன் புஸ்தக தீர்க்கதரிசியும் புஸ்தகத்தின் தலைப்பு பக்கத்தில் சுருக்கிச் சொல்லப்பட்டுள்ள பரிசுத்த நோக்கத்துக்காக ஒப்புக்கொடுத்தார்கள்: “இயேசுவே கிறிஸ்து என [எல்லா ஜனத்தையும்] திருப்திப்படுத்தவே.” ஒரு தீர்க்கரிசி அவரை ஒரு அநித்தியத்துக்கு முந்திய ஆவி எனப் பார்த்தான், மற்றொருவன் அவரது பிறப்பையும் ஊழியத்தையும் தரிசனத்தில் பார்த்தான். அவரது பிறப்பு மற்றும் அவரது மரணத்தைப்பற்றிய அடையாளங்களை அறிவிக்க ஒருவன் சுவற்றின் மீது நின்றான், மற்றொருவன் அவரது உயிர்த்தெழுந்த சரீரத்தின் முன் முழங்கால்படியிட்டான், அவரது கைகளிலும், பாதங்களிலும் விலாவிலும் தொட்டான். இந்த முக்கிய சத்தியத்தை அனைவரும் அறிந்தனர்: “வரவிருக்கிற இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியாக்கும் இரத்தத்தினால் மாத்திரம் மனுஷன் இரட்சிக்கப்பட முடியுமே ஒழிய வேறு எந்த வழியாலும் முறையாலும் கூடாது” (ஏலமன் 5:9).

ஆகவே இந்த கிறிஸ்துமஸ் காலத்தில், உலக முழுவதிலுமுள்ள விசுவாசிகள் தன் குமாரனை அனுப்பியதில் தேவனின் நன்மையையும் அன்பையும் கொண்டாடும்போது, மார்மன் புஸ்தகம் எவ்வாறு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்தியிருக்கிறது என சிந்தியுங்கள். நீங்கள் அவரது பிறப்பைப்பற்றி சிந்திக்கும்போது, அவர் ஏன் வந்தார், அவரது வருகை எவ்வாறு உங்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என சிந்தியுங்கள். பின்பு நீங்கள் கிறிஸ்துமஸின் மகிழ்ச்சியை, உங்களுக்கு இயேசு கிறிஸ்து கொடுக்கிற வரத்தை அனுபவிக்கலாம்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

1 நேபி 11:13–36; மோசியா 3:5–10; ஏலமன் 14:1–13; 3 நேபி 1:4–22

எனது இரட்சகராயிருக்க இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தார்.

கிறிஸ்துமஸ் நேரத்தில் புதிய ஏற்பாட்டிலுள்ள இரடசகரின் பிறப்பைப்பற்றிய கதையை வாசிப்பது பாரம்பரியமாகும், ஆனால் மார்மன் புஸ்தகத்தில் இந்த பரிசுத்த நிகழ்வைப்பற்றிய நெருடும் தீர்க்கதரிசனங்களைக் காண முடியும். உதாரணமாக, இரட்சகரின் பிறப்பு மற்றும் ஊழியத்தைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள் 1 நேபி 11:13–36; மோசியா 3:5–10; ஏலமன் 14:1–13; மற்றும் 3 நேபி 1:4–22ல் காணப்படுகின்றன. அந்த பாகங்களை நீங்கள் வாசித்து அவரது பிறப்பின் அடையாளங்களுக்கு சாத்தியமான அர்த்தங்களைப்பற்றி சிந்திக்கும்போது, இயேசு கிறிஸ்துவைப்பற்றிய என்ன எண்ணங்கள் உங்களுக்கு வருகின்றன? பூர்வகால அமெரிக்காவின் இந்த தீர்க்கதரிசிகளின் சாட்சிகள் கிறிஸ்து மற்றும் அவரது ஊழியத்தைப்பற்றிய உங்கள் சாட்சியை பெலப்படுத்துகிறது?

மத்தேயு 1:18–25; 2; லூக்கா 2 ஐயும் பார்க்கவும்.

2 நேபி 2:6; ஆல்மா 7:7–13; 11:40; ஏலமன் 5:9; 14:16–17

இயேசு கிறிஸ்துவே முழுமனுக்குலத்தின் மீட்பர்.

அவரது பாவநிவாரண பலியும், அதன்மூலமாக, அவர் நம்மை பாவங்களிலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சிக்கிறதும், உபத்திரவங்களில் நமக்கு ஆறுதலளிக்கிறதும் “அவரில் பரிபூரணப்பட்டிருக்க”(மரோனி 10:32) நமக்கு உதவுகிறதும் இல்லையெனில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட நமக்கு எந்தக் காரணமும் இருந்திருக்காது. உங்களை மீட்க இரட்சகரின் வல்லமையைப்பற்றி மார்மன் புஸ்தகத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்? எந்தக் கதைகளாவது போதனைகளாவது உங்களுக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறதா? இரட்சகரின் மீட்கும் ஊழியத்தைப்பற்றி பின்வரும் எடுத்துக்காட்டுகள் உங்களுக்கு என்ன போதிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளவும்: 2 நேபி 2:6; ஆல்மா 7:7–13; 11:40; மற்றும் ஏலமன் 5:9; 14:16–17. அவருக்கு உங்கள் நன்றியுணர்வைக் காட்ட நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்? (Christmas.ComeuntoChrist.org நீங்கள் தொடங்க உங்களுக்கு சில ஆலோசனைகளைக் கொண்டுள்ளது.)

1 நேபி 6:4; 19:18; 2 நேபி 25:23, 26; 33:4, 10

மார்மன் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சி பகர்கிறது.

இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு என்பது மார்மன் புஸ்தகத்துக்கு துணைத்தலைப்பு என்பதை விட அதிகமானது, அது, அதன் தெய்வீக நோக்கத்தைப்பற்றிய பிரகடனம். கிறிஸ்துவைப்பற்றி சாட்சியளிக்க மார்மன் புஸ்தகத்தின் ஊழியத்தைப்பற்றி பின்வரும் வசனங்களிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதைச் சிந்திக்கவும்: 1 நேபி 6:4; 19:18; மற்றும் 2 நேபி 25:23, 26; 33:4, 10.

இவ்வருடம் மார்மன் புஸ்தகத்தை படித்தது உங்களைக் கிறிஸ்துவுக்கு நெருக்கமாக கொண்டுவந்திருக்கிறது என உங்கள் குறிப்பிதழில் பதிவு செய்வதைக் கருத்தில் கொள்ளவும். பின்வரும் உணர்த்துதல்கள் உதவக்கூடும்:

  • “இந்த வருடம் இரட்சகரைப்பற்றி புதிதாக நான் கற்றுக்கொண்ட ஒன்று … “

  • “[இரட்சகரைப்பற்றிய வசனங்களை] வாசிப்பது என் … விதங்களை மாற்றியது”

  • “மார்மன் புஸ்தகத்தில் எனக்கு பிடித்த நபர் [அல்லது கதை] இரட்சகரைப்பற்றி எனக்கு போதித்தது …”

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

1 நேபி 11:13–23; மோசியா 3:5–10; ஏலமன் 14:1–13; 3 நேபி 1:4–22

1நேபி 11:13–23; மோசியா 3:5–10; ஏலமன் 14:1–13; மற்றும் 3 நேபி 1:4–22, கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் ஊழியத்தைப்பற்றிய கதைகளை நீங்கள் வாசிக்கும்போது, அவர்கள் கேட்கிறவையைப்பற்றி பிள்ளைகள் படம் வரைந்து மகிழலாம். பின்பு உங்கள் பிள்ளைகள் அவர்கள் வரைந்த படங்களைப் பயன்படுத்தி, கதைகளை மறுபடியும் சொல்லலாம்.

“அவரே பரிசு”

தம் குமாரனை அனுப்பி பரலோக பிதா நமக்குக் கொடுத்த வரத்தில் கவனம் செலுத்த உங்கள் குடும்பத்துக்கு உதவ, கிறிஸ்துமஸ் பரிசு போல இயேசு கிறிஸ்துவின் படத்தை நீங்கள் பொதியலாம். அவர்கள் பெற்றிருக்கிற அல்லது பெற நம்புகிற விருப்பமான கிறிஸ்துமஸ் பரிசுகளைப்பற்றி குடும்ப அங்கத்தினர்கள் பேசலாம். பின்பு அவர்கள் கிறிஸ்துவின் படத்தைப் பிரித்து, நமக்கு அவர் எவ்விதம் ஒரு அருமையான பரிசாக இருந்திருக்கிறார் என கலந்துரையாடவும். “He Is the Gift” (ChurchofJesusChrist.org) காணொலி இந்த கிறிஸ்துமஸில் குடும்பமாக இரட்சகரின் பரிசை எவ்வாறு கண்டுபிடித்து, தழுவி, பகிர்ந்துகொள்ளலாம் என கலந்துரையாட உங்களுக்கு உதவலாம்.

பிறரிடம் அன்பாக இருக்க ஒரு முயற்சி செய்வது அல்லது ஒரு கெட்ட நடத்தையை மேற்கொள்ள பிரயாசப்படுவது போன்ற இரட்சகருக்கு அவர்கள் கொடுக்க விரும்பும் பரிசைப்பற்றி நினைப்பதால் உங்கள் குடும்பம் நன்மை பெறலாம். அவர்களது கருத்துக்களை எழுதவும், அவற்றை பரிசு போல பொதியவும், அவர்களது பரிசுகளை இரட்சகரின் படத்தைச் சுற்றிலும் வைக்கவும் குடும்ப அங்கத்தினர்களை அழைப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

கிறிஸ்துமஸ் ஆவி

ஒருவருக்கு சேவை செய்வது அல்லது கிறிஸ்துமஸ் பாடல்களை ஒன்றாக பாடுவது போன்ற கிறிஸ்துவின் ஆவியை உணர கிறிஸ்துமஸை அணுகும் நாட்களில் உங்கள் குடும்பத்தினர் செய்யக்கூடிய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது வேடிக்கையாக இருக்கலாம். (ஆலோசனைகளுக்கு, Christmas.ComeuntoChrist.org பார்க்கவும்.)

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

செயல்பட அழைப்புகளைப் பின்தொடரவும். “நீங்கள், செயல்பட அழைப்பு ஒன்றைப் பின்தொடரும்போது, [உங்கள் குடும்ப அங்கத்தினர்கள்] மேல் நீங்கள் அக்கறையுள்ளவர்கள் என்றும் அவர்களுடைய வாழ்க்கையை சுவிசேஷம் எவ்வாறு ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் அவர்களுக்கு நீங்கள் காட்டுகிறீர்கள். அவர்களுடைய ஒப்புக்கொடுத்தலை பெலப்படுத்துகிற அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், சுவிசேஷத்தின்படி வாழுதலில் ஒருவருக்கொருவரை ஆதரிக்க அவர்களை அனுமதிக்கவும் அவர்களுக்கு வாய்ப்புகளையும் நீங்கள் கொடுக்கிறீர்கள்” (Teaching in the Savior’s Way, 35).

படம்
ஒரு தரிசனத்தில் கன்னி மரியாளை நேபிக்கு தூதன் காட்டுதல்

கன்னி மரியாளைப்பற்றிய நேபியின் தரிசனம்–ஜூடித் ஏ. மெர்