என்னைப் பின்பற்றி வாருங்கள்
பிற்சேர்க்கை A: மார்மன் புஸ்தகம் உண்மை என்பதை ஆவியானவர் எனக்கு எவ்விதம் சாட்சியளிக்கிறார்?


“பிற்சேர்க்கை A: மார்மன் புஸ்தகம் உண்மை என்பதை ஆவியானவர் எனக்கு எவ்விதம் சாட்சியளிக்கிறார்?“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“பிற்சேர்க்கை A,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

பிற்சேர்க்கை A

மார்மன் புஸ்தகம் உண்மை என்பதை ஆவியானவர் எனக்கு எவ்விதம் சாட்சியளிக்கிறார்?

மார்மன் புஸ்தகத்தை வாசிக்கும் அனைவருக்குமான மரோனியின் வாக்குறுதியை நீங்கள் கேட்டிருக்கலாம்: “நீங்கள் உண்மையான இருதயத்தோடும், முழு நோக்கத்தோடும், கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து கேட்பீர்களேயானால், அவர் அதன் [மார்மன் புஸ்தகத்தின்] சத்தியத்தை உங்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையிலே வெளிப்படுத்துவார்” (1மரோனி 10:4). ஆனால் “பரிசுத்த ஆவியானவரின் வல்லமையிலே” சத்தியத்தை அறிவது என்பதன் பொருள் என்ன? எப்போது பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் என்பதை நீங்கள் எவ்வாறு அறிய முடியும்?

நாம் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ளும் விதங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வழிகளிலேயே பரிசுத்த ஆவியானவர் நம்மோடு தொடர்பு கொள்ளுகிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுவது உதவியாயிருக்கலாம். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியானவரை அறிந்துகொள்ளுவதற்கு கற்றுக்கொள்ள உங்களுக்குதவ பரலோக பிதா விரும்புகிறார். ஏராளமான உண்மையுள்ள ஊழியர்கள் கர்த்தரின் குரலோடு தங்களுக்குள்ள அனுபவத்தை விவரிக்கும் மார்மன் புஸ்தகத்தை அவர் உங்களுக்கு அளித்துள்ளார்.

உதாரணமாக, கர்த்தர் அவர்களிடம் “அமர்ந்த மெல்லிய சத்தத்தில்,” பேசியதாகவும் அது அவர்கள் தங்கள் காதுகளால் கேட்கக்கூடிய குரலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் நேபி தன் சகோதரர்களுக்குக் கூறினான். உண்மையில், தன் சகோதரர்கள் “அவருடைய வார்த்தைகளை உணராதபடிக்கு உணர்வில்லாதவர்களானார்கள்“ என்று நேபி கூறினான்“ (1 நேபி 17:45, italics added). ஏனோஸ் தனது ஜெபங்களுக்கான பதிலை “கர்த்தரின் சத்தம்” “[தன்] மனதிலே ” வருவதாக விவரித்தான் (ஏனோஸ் 1:10). மேலும், உயிர்த்தெழுந்த இரட்சகர் உதாரத்துவஸ்தலத்தில் தோன்றியபோது வானத்தில் இருந்து கேட்ட சத்தத்தை விவரிக்கும் இந்த வார்த்தைகளை எண்ணிப்பாருங்கள்: “அது ஒரு கடினமான சத்தமாயிருக்கவில்லை. அது ஒரு உரத்த சத்தமாயுமிருக்கவில்லை, ஆயினும், … அது அவர்களது ஆத்துமாவில் ஊடுருவிப்போய் அவர்களுடைய இருதயங்களை அனலடையச் செய்தது” (3 நேபி 11:3).

ஒருவேளை இதைப் போன்ற அனுபவங்களை நீங்கள் அடைந்திருப்பீர்கள், அல்லது உங்கள் அனுபவம் வேறாக இருக்கலாம். பரிசுத்த ஆவியானவர் வெவ்வேறு விதங்களில் தொடர்புகொள்கிறார், மேலும் நாம் ஒவ்வொருவருக்கும் வெளிப்படுத்தல் வெவ்வேறு விதமாக வரமுடியும். நமது வாழ்க்கையில் ஆவியானவர் இருக்கும்போது, நம்மீது அவருடைய செல்வாக்கைப் பல வழிகளில் நாம் காண்போம். “ஆவியின் கனிகளைப்பற்றி”, பலவற்றினுள் “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்,” ஆகிய உணர்வுகளைப்பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் பேசினான்(கலாத்தியர் 5:22–23).

பரிசுத்த ஆவியானவரைப்பற்றி மார்மன் புஸ்தகத்திலிருந்து இங்கே பிற சில போதனைகளும் எடுத்துக்காட்டுகளும். நீங்கள் அவைகளைப் படிக்கும்போது, மார்மன் புஸ்தகம் உண்மையில் தேவனின் வார்த்தையே என்பதற்கு சாட்சி அளித்து, நீங்கள் அறியாத வகைக்கும் மேலாக பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் பேசுவதை நீங்கள் காண்பீர்கள்.

நன்றியறிதலும் மகிழ்ச்சியும்

ஓர் அற்புதமான தரிசனத்தை லேகி தீர்க்கதரிசி காண்பதுடன் மார்மன் புஸ்தகம் ஆரம்பிக்கிறது. இந்த தரிசனத்தில் அவரிடம் ஒரு புஸ்தகம் கொடுக்கப்பட்டு அதை வாசிக்கும்படி அழைக்கப்படுகிறார். “அவன் வாசித்தபோது,” “அவன் கர்த்தருடைய ஆவியால் நிரப்பப்பட்டான்” என அந்தப் பதிவு சொல்கிறது, இந்த அனுபவம் தேவனை அவரது “ஆற்றல், மற்றும் நன்மை, மற்றும் இரக்கம்,” ஆகியவற்றிற்காகத் துதிக்கும்படி லேகியை வழிநடத்தியது மற்றும் லேகியின் “ஆத்துமா களிகூர்ந்தது, அவனது முழு இருதயமும் நிரப்பப்பட்டது” (1 நேபி 1:12, 14–15).

இதைப்போன்றதொரு அனுபவம் உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டதுண்டா? மார்மன் புஸ்தகத்தைப் படிக்கும்போது தேவனின் நன்மை மற்றும் இரக்கத்திற்காக உங்கள் இருதயம் நன்றியுணர்வால் எப்போதாவது நிறைந்ததுண்டா? மார்மன் புஸ்தகத்தில் உள்ள வாசகங்கள் எப்போதாவது உங்கள் ஆத்துமாவைக் களிகூரச்செய்ததுண்டா? நீங்கள் வாசிக்கும் வார்த்தைகள் தேவனிடம் இருந்து வந்தவை மற்றும் அவரது சத்தியத்தைப் போதிக்கின்றன என்று உங்களுக்கு சாட்சி அளித்து, இந்த உணர்வுகள் ஆவியானவரின் செல்வாக்கால் ஏற்படுபவை.

ஒரு மனமாற்றம் அடைந்த இருதயம்

இயேசு கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியைப்பற்றி ஒரு விசேஷித்த பிரசங்கத்தை செய்தபின் (மோசியா 2–4 பார்க்கவும்), “தான் அவர்களிடம் பேசிய வார்த்தைகளை தனது ஜனங்கள் நம்பினார்களா” என்று அறிய பென்யமீன் இராஜா விரும்பினான்.” அவனுடைய பிரசங்கத்தை நம்பியதாக அவர்கள் பதிலளித்தனர். ஏன்? “பொல்லாப்பை இனிச் செய்ய மனமில்லாதவர்களாய், நன்மையையே தொடர்ந்து செய்யும்படிக்கு, எங்கள் இருதயங்களிலேயும், எங்களுக்குள்ளேயும், பலத்த மாற்றத்தைச் செய்வித்த சர்வவல்ல கர்த்தருடைய ஆவியானவரினிமித்தம்.” (மோசியா 5:1–2).

மார்மன் புஸ்தகத்தைப் படிக்கும் போது உங்கள் இருதயத்தில் அது போன்ற ஒன்றை நீங்களும் கவனித்திருக்கலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு சிறந்த மனிதராயிருக்க, பாவத்தில் இருந்து விலக, அல்லது யாருக்காவது இரக்கத்துடன் எதையாவது செய்ய தூண்டப்பட்டிருக்கலாம். அந்தப் புஸ்தகம் தேவனால் எழுதப்பட உணர்த்தப்பட்டது என்பதற்கான நீங்கள் தேடும் ஆவிக்குரிய சாட்சி இதுவே. ஏனெனில் மார்மன் போதித்ததுபோல, “நன்மை செய்யவும், தேவனை நேசிக்கவும், அவரைச் சேவிக்கவும் நயம் காட்டி அழைக்கிற ஒவ்வொன்றும் தேவனால் உணர்த்தப்படுவதே” (மரோனி 7:13; ஐயும் பார்க்கவும் 2 நேபி 33:4, 10: ஆல்மா 19:33; ஏத்தேர் 4:11–12).

ஒரு விழிப்பூட்டப்பட்ட மனம்

“[தமது] வார்த்தைகளை சோதித்துப்பார்த்து” தமது சாட்சி உண்மையா என்று தாங்களாகவே அறிந்துகொள்ள சோராமியர்களுக்கு உதவி செய்ய ஆல்மா விரும்பியபோது, அவன் தேவனுடைய வார்த்தைகளை ஒரு விதைக்கு ஒப்பிட்டான்: “உங்கள் இருதயத்தில் ஒரு விதையை நட நீங்கள் இடம்கொடுத்தால், இதோ, அது உண்மையான விதையாகவோ அல்லது நல்ல விதையாகவோ இருந்தால், அதை உங்கள் அவிசுவாசத்தினால் அகற்றாமலும், நீங்கள் கர்த்தருடைய ஆவியை எதிர்க்காமலும் இருந்தால், இதோ, அது உங்கள் மார்புகளினுள் விரிவடையும்; இந்த விரிவடைகிற அசைவுகளை நீங்கள் உணரும்போது, நீங்கள் உங்களுக்குள்ளாகவே இது நல்ல விதையாகத்தான் இருக்கவேண்டும், இந்த வார்த்தை நன்மையானது. ஏனெனில், அது என் ஆத்துமாவை விசாலமடையச் செய்கிறது, ஆம், அது என் அறிவை விரிவாக்குகிறது, ஆம், அது எனக்கு சுவையானதாய் இருக்கத் தொடங்குகிறது, என்று சொல்லத் தொடங்குவீர்கள்” (ஆல்மா 32:27–28).

உங்கள் வாழ்க்கையின் மேல் செல்வாக்கை ஏற்படுத்தவும் உங்கள் தேர்ந்தெடுப்புகளை வழிகாட்டவும் அனுமதிக்கும்போது நீங்கள் உங்கள் இருதயத்தில் மார்மன் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்கு “இடம் கொடுக்கிறீர்கள்”. மேலும் இந்த வார்த்தைகள் எவ்விதம் “[உங்கள்] ஆத்துமாவை விரிவாக்கி” மற்றும் “[உங்கள்] புரிந்துகொள்ளுதலை விழிப்பூட்டச் செய்கிறது”? நீங்கள் ஆவிக்குரிய விதமாக வலிமையாகி வருவதை உணரலாம். பிறரிடத்தில் அதிக அன்புசெலுத்துபவர்களாகவும் திறந்தமனம் உடையவர்களாகவும் இருப்பதை நீங்கள் உணரலாம். ஏறத்தாழ உங்கள் மனதில் ஓர் ஒளி பிரகாசிப்பது போல நீங்கள் காரியங்களை, குறிப்பாக ஆவிக்குரிய காரியங்களை சிறந்த முறையில் புரிந்துகொள்வதை கவனிக்கலாம், . மேலும் மார்மன் புஸ்தகத்தில் போதிக்கப்படும் கொள்கைகள் “சுவையானவை” என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளலாம். இத்தகைய உனர்வுகள், ஆல்மா அறிவித்தது போல: “அப்படியென்றால், இது நிஜமன்றோ? என நீங்கள் உண்மையிலேயே ஆவிக்குரிய சாட்சியைப் பெற்றுவிட்டீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவலாம், நான் உங்களிடம் கூறுகிறேன், ஆம் அது ஒளியாயிருப்பதினிமித்தமே; ஒளியாயிருக்கிற எதுவும் பகுத்தறியக்கூடியதாய் இருப்பதால், நல்லதாயிருக்கிறது. ஆதலால் அது நல்லதென்று நீங்கள் அறிந்துகொள்வது அவசியம்;” (ஆல்மா 32:35).

நீங்கள் ஆச்சரியப்பட அவசியமில்லை

ஆவியானவர் தொடர்புகொள்ளும் வழிகளில் இவையும் சில. மேலும் பல உண்டு. ஆவியானவரின் சத்தத்தைக் கேட்கும் வாய்ப்புகளுக்காகத் தொடர்ந்து எதிர்பாருங்கள், மேலும் மார்மன் புஸ்தகத்தின் உண்மை குறித்த அவருடைய தொடரும், உறுதியான சாட்சியைப் பெறுவீர்கள்.

“உண்மை எது என்பதைப்பற்றி நீங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை என தலைவர் ரசல் எம். நெல்சன் வாக்களித்துள்ளார். நீங்கள் பாதுகாப்பாக யாரை நம்பலாம் என்பதைப்பற்றி ஆச்சரியப்படத் தேவையில்லை. தனிப்பட்ட வெளிப்படுத்தல் மூலம், மார்மன் புஸ்தகம் தேவனுடைய வார்த்தை என்றும், ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசி என்றும், அதுவே கர்த்தருடைய சபை என்றும் நீங்கள் உங்களுக்கான சொந்த சாட்சியைப் பெறலாம். யார் எதைக் கூறுகிறார்கள் அல்லது செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், உண்மையைப்பற்றி உங்கள் இருதயத்தில் அல்லது மனதில் இருக்கும் சாட்சியை யாரும் ஒருபோதும் அகற்ற முடியாது” (“Revelation for the Church, Revelation for Our Lives,” Ensign or Liahona, மே 2018, 95).